Tags » 10

10 Scariest Film Scores

In keeping with our scary Halloween theme today, badassdigest published their 10 scariest film scores. Below is their list (you can learn more about each by… 129 more words

News

Inspekta Harun kuachia mpya akisherehekea miaka 10 ya ndoa yake.



MKONGWE wa muziki wa kizazi kipya nchini, Haruna Kahena ‘Inspekta Harun’ a.k.a Babu anatarajiwa kusherehekea miaka 10 ya ndoa yake kwa kutambulisha wimbo mpya wa ‘Hali Bado Tete’. 127 more words

Fununu Za Nyota.

நன்மையின் விதை

ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்

ஒழுக்கம்தான் எல்லாச் சிறப்புகளையும் தருகிறது. ஆகவே, உயிரைவிட அது மேலானது என்று நினைத்து ஒழுக்கத்தைக் காக்கவேண்டும்.

விழுப்பம்: சிறப்பு
ஓம்புதல்: காத்தல்

பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம், தெரிந்து ஓம்பித்
தேரினும் அஃதே துணை

எப்படி யோசித்தாலும், ஒழுக்கம்தான் ஒருவருக்கு நல்ல துணை. ஆகவே, எத்தனை சிரமப்பட்டாலும் ஒழுக்கத்தைக் காக்கவேண்டும்.

பரிந்து ஓம்பி: மிகவும் சிரமப்பட்டு
தேரி: ஆராய்ந்து

ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

ஒழுக்கமாக இருப்பவர்கள் சிறந்தவர்கள், மற்றவர்கள் இழிவானவர்கள்.

குடிமை: உயர்ந்த குடும்பத்தில் பிறத்தல்
இழுக்கம்: ஒழுக்கமின்மை

மறப்பினும் ஓத்துக்கொளல் ஆகும், பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

படித்ததை மறந்தால் பிரச்னையில்லை, மறுபடியும் படித்துக்கொள்ளலாம். ஒருமுறை ஒழுக்கத்திலிருந்து விலகிவிட்டால், எல்லாச் சிறப்பும் போய்விடும்

ஓத்துக்கொளல்: ஓதிக்கொள்ளல்: வாசித்தல்
பார்ப்பான்: நூல்களைப் பார்ப்பவன்/ நன்கு படித்தவன்
குன்ற: குறைய

அழுக்காறு உடையான் கண் ஆக்கம் போன்று இல்லை,
ஒழுக்கம் இலான் கண் உயர்வு

பொறாமை உள்ளவனிடம் செல்வம் இருக்காது, அதுபோல ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது

அழுக்காறு: பொறாமை
ஆக்கம்: ஆக்கப்பட்ட செல்வம்

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர், இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து

ஒழுக்கம் கெட்டால் என்னென்ன நடக்கும் என்று தெரிந்தவர்கள், மன வலிமையோடு ஒழுக்கத்திலிருந்து சிறிதும் விலகாமல் வாழ்வார்கள்

ஒல்கார்: விலகமாட்டார்கள்
உரவு: மன வலிமை
ஏதம்: குற்றம்

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை, இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி

ஒழுக்கமாக இருந்தால் மேன்மை வரும். ஒழுக்கத்திலிருந்து விலகினால், பெறக்கூடாத பழிதான் வரும்

எய்தல்: அடைதல்

நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம், தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும்

நன்மை வேண்டுமா? நல்ல ஒழுக்கத்தை விதையாகப் போடுங்கள். தீய ஒழுக்கத்தை விதையாகப் போட்டால் துன்பம்தான் கிடைக்கும்

நன்றி: நன்மை
வித்து: விதை
இடும்பை: துன்பம்

ஒழுக்கம் உடையவர்க்(கு) ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்

நல்ல ஒழுக்கம் உடையவர்கள் தங்களையும் அறியாமல்கூடக் கெட்ட சொற்களைச் சொல்லமாட்டார்கள், அவர்களால் சொல்ல இயலாது

ஒல்லாவே: இயலாதே
வழுக்கி: விலகி

உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பலகற்றும்
கல்லார் அறிவு இலாதார்

எவ்வளவுதான் படித்திருந்தாலும் சரி, பிற மக்களோடு ஒன்றாகச் சேர்ந்து, உலக வழக்கப்படி வாழத் தெரியாதவர்கள் அறிவில்லாதவர்கள்

ஒட்ட: பொருந்தி
ஒழுகல்: நடத்தல்

திருவள்ளுவர்
நூல்: திருக்குறள், ஒழுக்கமுடைமை

10

Failure To Launch

In the past couple of years there have been many anticipated games that have come out but the first reaction was WTF! Here is a list of 10 games with horrible launches.

Gaming