ராத்திரியில் படம் பார்த்து பழக்கம் ஆகிவிட்டது. இன்றைக்கு இந்த படம்தான்.  )
சின்ன வயதில் கிராமங்களில் சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி அன்று ஒரே டிக்கெட்டுக்கு இரண்டு சினிமா போடுவார்கள்.  இன்றைக்கு சன் டிவியில் நான்  அவனில்லை படம் முடிந்தது, இரண்டு விளம்பரம், உடனே இந்த படம் – என்ன இன்றைக்கு விநாயக சதுர்த்தி, சிவராத்திரி இல்லை அவ்வளவுதான். இந்த back to back சினிமா எல்லாம் தமிழ் நாட்டில்தான் என்று நினைக்கிறேன்.
2007இல் வந்த படம். விஷால், புதுமுகம் பானு, பிரபு, நதியா, நாசர், விஜயகுமார், மனோரமா, ரோகிணி, நிழல்கள் ரவி, கஞ்சா கருப்பு, சூப்பர் டென் புகழ் ஆர்த்தி, கிரேன் மனோகர் (இது என்னய்யா அடைமொழி?) மற்றும் டிவி சீரியல்களில் பார்த்திருக்கும் ஆனால் பேர் தெரியாத நிறைய பேரும் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசை. ஹரி இயக்கம். விஷாலின் வெற்றிப் படங்களில் ஒன்று.
ஹரி படங்களில் சென்னை தவிர்த்த தமிழ் நாட்டு நகரங்கள் காட்டபடுகின்றன. இது ஒரு நல்ல ட்ரெண்ட். தமிழ் சினிமாக்கள் முக்கால்வாசி சென்னையிலும் தெலுங்கு சினிமாக்கள் ஹைதராபாதிலும், ஹிந்தி சினிமாக்கள் மும்பையிலும், ஹாலிவுட் சினிமாக்கள் லாஸ் என்ஜெலசிலும் நடைபெறுவது போரடிக்கிறது. இந்த படத்தில் தூத்துக்குடி. idealized depiction என்று தெரிந்தாலும், ஊரும் படத்தில் ஒரு பங்கு வகிக்கிறது.
உப்பளங்கள் இவ்வளவு அழகா? நல்ல தண்ணித் தீவு உண்மையிலேயே இருக்கிறதா? “கட்டபொம்மன் ஊர் எனக்கு” பாட்டில் காட்டப்படும் சர்ச் எங்கே இருக்கிறது? விஷால் தண்ணி அடிக்கும் ஒரு காட்சியில் பின்னால் தெரியும் நீர்வீழ்ச்சி அருமை!
கதையில் ஒன்றும் இது வரை பார்க்காத சிக்கல்களோ பாத்திரங்களோ இல்லை. மாமா பிரபு மேல் உயிரையே வைத்திருக்கும் விஷால் ஊர் சுற்றிக் கொண்டும் தண்ணி அடித்துக் கொண்டும், அடிதடிகளில் ஹீரோவாகவும் இருக்கிறார். அவரை நதியாவின் மகளான ஹீரோயின் பானு விழுந்து விழுந்து காதலிக்கிறார். விஷாலோ பட்டும் படாமலும் இருக்கிறார். நடுவில் நதியாவும் நாசரும் விஜயகுமாரும் பிரபுவை முறைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் பானுவின் ஃபோட்டோ “விபசார அழகி” என்று பேப்பரில் வர விஷால் காரணமாகிறார். அப்போதுதான் நதியா பிரபுவின் மனைவி என்று தெரியவருகிறது. மனம் திருந்தும் விஷால் த்யாகச்சுடர் ரேஞ்சில் ஜெயிலுக்கெல்லாம் போய் எல்லாரையும் இணைத்து வைக்கிறார்.
எல்லாரும் எல்லாரையும் அடித்துக்கொண்டே இருக்கிறார்கள். படம் ஆரம்பிக்கும்போது விஷால் ஒரு பத்து பேரை அடிக்கிறார். பிரபு யாரையோ அறைகிறார். நதியா டிரைவரை கன்னத்தில் அறைகிறார். சைடி காரக்டர்கள் பாடு படு கஷ்டம்.
ஆரம்பக் காட்சியில் விஷால் தன் ரசிகர்கள் விசில் அடிப்பதற்காக ஓடும் ரயிலின் எதிரே தண்டவாளத்தில் மோட்டார்சைக்கிள் ஒட்டிக்கொண்டு வந்து பிறகு அதன் எதிரே நிற்கிறார். இதற்கெல்லாம் இன்னுமா உய் உய் விசில்?
கஞ்சா கருப்பு நதி நீர் இணைப்பு காட்சி ஒன்றில்தான் சிரிக்க வைக்கிறார். மிச்ச எல்லாவற்றிலும் இதெல்லாம் ஒரு நகைச்சுவையா என்று நாம் விரக்தி சிரிப்புதான் சிரிக்க வேண்டியிருக்கிறது.
நிழல்கள் ரவி படத்தில் என்ன செய்கிறார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு நவீன ஷெர்லாக் ஹோம்ஸ் என்று பட்டம் கொடுக்கலாம்.
கதாநாயகி பானு பக்கத்து வீட்டு அக்கா மாதிரி இருக்கிறார். இந்த கதைக்கு அது பொருத்தமாகத்தான் இருக்கிறது.
நாசர் தேவர் மகனில் செய்த ரோலை இங்கே தொடர்கிறார். விஜயகுமாரும் பல படங்களில் நடந்த பாதையில் தொடர்கிறார்.
நதியா ஏறக்குறைய அன்று பார்த்த மாதிரியே இருக்கிறார். அவரும் பிரபுவும் நடிப்பிலும் பரவாயில்லை.
படத்தின் பாட்டுக்கள் எல்லாம் ஐந்து வருஷத்துக்கு மேல் தாங்காது என்று நினைக்கிறேன். பாட்டுக்களை இங்கே கேட்கலாம்.
“கட்டபொம்மன் ஊரெனக்கு” இந்த காலத்து ஸ்டாண்டர்ட் ஓபனிங் குத்துப் பாட்டு. விஜய் யேசுதாஸ் பாடியது. இவர் கே.ஜே. யேசுதாசின் பையனா?
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/7_Nj65gceFE&rel=1&fs=1&showsearch=0&hd=0' /><param name='allowfullscreen' value='true' /><param name='wmode' value='transparent' /><embed src='http://www.youtube.com/v/7_Nj65gceFE&rel=1&fs=1&showsearch=0&hd=0' type='application/x-shockwave-flash' allowfullscreen='true' width='425' height='350' wmode='transparent'></embed></object>யுவன் ஷங்கர் ராஜா “கற்பூர நாயகியே கனகவல்லி” பாட்டை இப்படி ஒரு குத்து டூயட் ஆக்கி இருக்கவேண்டாம். ராம கோபாலன் இதற்கு ஒன்றும் “தேவ பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ” பாட்டை இப்படி போடுவார்களோ ரேஞ்சில் கேள்வி கேட்கவில்லையா? ரஞ்சித், ரோஷ்னி பாடியது.
<object width='425' height='350'><param name='movie' value='http://www.youtube.com/v/fFfYWIkU9q8&rel=1&fs=1&showsearch=0&hd=0' /><param name='allowfullscreen' value='true' /><param name='wmode' value='transparent' /><embed src='http://www.youtube.com/v/fFfYWIkU9q8&rel=1&fs=1&showsearch=0&hd=0' type='application/x-shockwave-flash' allowfullscreen='true' width='425' height='350' wmode='transparent'></embed></object> “தாலியே தேவை இல்ல” ஹரிஹரனும் பவதாரிணியும் பாடியது.
“திருச்செந்தூரு முருகா” சுமார். நவீன் பாடியது.
எனக்கு யார் குரலும் தெரியவில்லை. எல்லாம் பிட் அடித்து எழுதியது.
படம் போரடிக்கவில்லை. 10க்கு 6.5 மார்க் போடலாம். C+ grade.