Tags » Fatwa

மஸ்ஜிதை பரிபாலனம் செய்யக்கூடியவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

தலைமைத்துவப் பொறுப்பு என்பது ஒர் அமானிதமாகும். ஒருவருக்கு எத்தகைய பொறுப்பு கிடைத்தாலும் அது ஓர் அமானிதமான சுமையாகவே கருதப்படும். அதைப்பற்றி மறுமை நாளில் விசாரிக்கப்படும்.

பின்வரும் ஹதீஸ் இதை தெளிவுபடுத்துகின்றது.

‘நீங்கள் அனைவர்களும் பொறுப்புடையவர்கள் கியாமத் நாளில் உங்கள் பொறுப்பிற்குக் கீழ் உள்ளவர்களைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.’ 7 more words

Acju

Ramadan in the summer at high latitudes - by Sheikh Ahmad Kutty

Bismillah. An interesting fatwa published last Ramadan (July 2013). Parts of Ramadan will be in midsummer for the next few years, so this discussion will continue. 824 more words

Sunnah

கொடும்பாவி எரித்தல் பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

ஒருவரது மாதிரி உருவத்தை பிடவைகள், கடதாசிகள் போன்றவற்றால் செய்யப்படுவதை கொடும்பாவி எனப்படும். இவ்வாறு உயிருள்ளவற்றின் உருவங்களை கடதாசிகளில் வரைவதையோ, கற்களில் செதுக்குவதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இதனைப் பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது:

‘நான் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களது சமூகத்தில் இருந்த வேளை, ஒருவர் வந்து தான் உருவப் படங்ளைச் செய்து உழைப்பதாக சொன்னார். அப்பொழுது இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள், நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னதைத் தவிர வேறு ஒரு விடயத்தை நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை என்று கூறிவிட்டு, நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பின்வருமாறு சொன்னதை நான் செவியுற்றிருக்கின்றேன்: ‘யார் உருவத்தை வரைகின்றாரோ, அவர் அவ்வுருவத்துக்கு உயிர் கொடுக்கும்  வரை அவரை அல்லாஹ் வேதனை செய்வான்.  அதற்கு அவரால் ஒரு போதும் உயிர் கொடுக்கமுடியாது’ என்று சொன்னார்கள். இச் செய்தி கேட்டதும் அம்மனிதர் திகைத்து, முகம் மஞ்சனித்துப் போனார். அதைக் கண்ணுற்ற இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள், உங்களுக்கு கேடு உண்டாகட்டும். நீங்கள் இதனை மறுத்தால், இதோ இருக்கக்கூடிய மரங்களை வரையுங்கள் என்று அம்மனிதனுக்குச் சொன்னார்கள்’ என்று ஸஈத் இப்னு அபில் ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(சஹீஹுல் புகாரி, ஹதீஸ் எண் : 2225)

‘உயிருள்ள விலங்குகளின் உருவங்களை வரைவது கடுமையாகத் தடுக்கப்பட்ட ஹராமான ஒரு விடயமாகும். அது ஒரு பெரும் பாவமுமாகும். அதனைச் செய்பவர் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கைக்குரியவராவார். அவர் அவ்வுருவத்தை சங்கைப்படுத்தினாலும், சங்கைப்படுத்தாவிட்டாலும் ஹராமாகும். அவ்வுருவங்களை புடவை, விரிப்பு, திர்ஹம், தீனார் (முற்கால நாணயங்களைக் குறிக்கும்), பாத்திரங்கள், சுவர்கள் போன்ற எவற்றில் வரைந்தாலும் அது ஹராமாகும். எனினும் மரங்கள் போன்ற உயிரற்றவைகளை வரைவது குற்றமாகாது’ என்று இமாம் அந்-நவவீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் மேற்படி ஹதீஸுக்கு விரிவுரை செய்துள்ளார்கள்.

கொடும்பாவி எரிக்கும் சமயம் ஒருவருடைய உருவம் நெருப்பினால் தண்டிக்கப்படுகின்றது. அத்துடன் கொடும்பாவி எரிப்பதன் அர்த்தம் அக்கொடும்பாவி மூலம் நாடப்படுபவர் கையில் அகப்பட்டால் அவரைத் தீயிட்டுக் கொழுத்துவோம் என்பதாம். இவ்வாறு எதனையும் நெருப்பினால் தண்டிக்கக்கூடிய அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் இல்லை. அது ஒரு மாதிரி உருவமாயினும் அதனையும் எரிக்கும் அதிகாரம் எவருக்கும் வழங்கப்படவில்லை. இதனைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துவதாக மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

‘ஒரு படையில் எம்மை அனுப்பும் போது (குரைஷிகளான) இருவருடைய பெயர்களைச் சுட்டிக்காட்டி அவ்விருவரையும் பிடித்து எரித்துவிடுமாறு நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள். நாம் அவ்விருவரையும் பிடித்து எரிப்பதற்காக வெளியிறங்கிய போது, (மீண்டும்) எம்மை அழைத்து நான் அவ்விருவரையும் எரித்துவிடுமாறு உங்களை ஏவினேன். எனினும் நெருப்பினால் தண்டிக்கக்கூடிய அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் உள்ளதாகும். நீங்கள் அவ்விருவரையும் பிடித்தால் கொலை செய்துவிடுங்கள்’ என்று நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னதாக அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

(சஹீஹுல் புகாரி : ஹதீஸ் எண் : 3016)

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

பிரசுரித்த தேதி 11.10.2006
வெளியீடு எண் 025/ACJU/F/2006

Acju

ஒரு பெண் குறித்த ஓர் ஆண் தன்னுடன் விபச்சாரம் புரிந்ததாக ஏற்றுக் கொள்ள, அந்நபர் அதனை மறுக்கும் பட்சத்தில் தண்டனை வழங்குவது பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

விபச்சாரம் புரிவது இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு, முற்றிலும் தடுக்கப்பட்ட பெரும் பாவங்களில் ஒன்றாகும். இப்பாவச் செயலுக்கு கடும் தண்டனையை விதித்துள்ள இஸ்லாம், ஆண், பெண் இரு பாலாருக்குமான நடை, உடை சம்பந்தப்பட்ட ஒழுக்க வரம்புகளைத் தெளிவுபடுத்தி, இப்பாவத்தளவில் இட்டுச் செல்லும் சகல வழிகளையும் தடுத்துள்ளதையும் காணலாம்.

ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அல்லது தகுதிவாய்ந்த நான்கு சாட்சிகள் மூலம் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டது முறையாக நிரூபணமாகும் பட்சத்தில் மாத்திரமே அவருக்கான தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். எனவே, ஒருவர் குறித்த ஒருவருடன் தவறான உறவில் ஈடுபட்டதாக ஏற்றுக்கொள்ள, அந்நபர் அதனை மறுப்பாராயின் முதலாமவருக்கு மாத்திரமே விபச்சாரத்திற்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். பின்வரும் இரு ஹதீஸ்கள் மூலம் இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்:

சஹ்ல் இப்னு ஸஃத் (ரழில்லாஹு அன்ஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

‘ஒரு மனிதர் (நபியவர்களிடம் வந்து) தான் (குறித்த) ஒரு பெண்ணுடன் விபச்சாரம் புரிந்ததாக ஏற்றுக்கொண்டார். எனவே, நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒருவரை குறித்த அப்பெண்ணிடம் அனுப்பினார்கள். அப்பெண் (தான் விபச்சாரம் புரியவில்லையென) மறுக்கவே, அம்மனிதருக்கு நபியர்கள் தண்டனையை நிறைவேற்றினார்கள்.’

(அல்-பைஹகீ, ஹதீஸ் இல.: 17002)

அபூ ஹுரைரா (ரழில்லாஹு அன்ஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

‘நான் அல்லாஹ்வின் தூதர் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சமுகத்தில் இருந்தபோது ஒருவர் எழுந்து (ஒரு நபரைச் சுட்டிக்காட்டி) நிச்சயமாக எனது மகன் இவரிடம் கூலிக்காக வேலை செய்து வந்தார். (அப்போது) இவரது மனைவியுடன் எனது மகன் விபச்சாரம் புரிந்துள்ளார் எனக் கூறினார். அதற்கு நபியவர்கள் ‘உமது மகனுக்கு நூறு கசையடிகளும், ஒரு வருடம் நாடு கடத்தப்படுவதும் தண்டனையாகும்’ எனக் கூறிவிட்டு, (தன் தோழர் ஒருவரை நோக்கி) உனைசே! இவரது மனைவியிடம் (விசாரிப்பதற்காக) நீர் சென்று, அப்பெண் அதை ஏற்றுக்கொண்டால், அவளுக்குக் கற்களால் அடித்துக் கொல்லும்  தண்டனையை நிறைவேற்றும் என்று கூறினார்கள்.’

(முஸ்லிம், ஹதீஸ் இல.: 1697)

விபச்சாரம் புரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அதனை ஏற்றுக்கொள்ளாத வரை முறையான சாட்சியங்கள் இல்லாத நிலையில் அவருக்குத் தண்டனை வழங்க முடியாது என்பது மேற்படி ஹதீஸ்கள் மூலம் தெளிவாகிறது.

ஆகவே, எமக்கு முன்வைக்கப்பட்ட மேற்படி விடயத்தில் குறித்த அப்பெண்ணுக்கு மட்டுமே விபச்சாரத்திற்கான தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அத்துடன் ஒருவர் பல முறை விபச்சாரம் புரிந்த பின் அவரது குற்றம் நிரூபணமானால் அவை அனைத்திற்குமாக ஒரு முறை மாத்திரமே தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

பிரசுரித்த தேதி 01.06.2004
வெளியீடு எண் 010/ACJU/F/2004

Acju

மஹ்ரமான ஆண் இன்றி ஒரு பெண் பெண்களுடைய கூட்டத்துடன் சேர்ந்து ஹஜ் செய்தல் பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட வணக்க வழிபாடுகளை மனிதன் நிறைவேற்றுவதற்கு அந்த வணக்கங்களுக்கேற்ப குறிப்பிட்ட சில நிபந்தனைகள் உள்ளன. அதனடிப்படையில் ஒரு பெண் ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டுமானால் அவள் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய ஏதாவதொரு வழியைப் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் ஹஜ் கடமை நீண்ட பிரயாணம், குறிப்பிட்ட காலம், அதிகளவிலான பணம் போன்றவற்றுடன் தொடர்புபடுகின்றது. ஒரு பெண் நீண்ட பயணம் செய்வதாக இருந்தால் அவளுடன் அவளுக்கு மஹ்ரமான ஆண் இருப்பது அவசியமாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் வலியுறுத்துகின்றது:

அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கின்ற ஒரு பெண்ணுக்கு அவளுடன் ஒரு மஹ்ரமானவர் இன்றி ஒரு பகல் ஒரு இரவு பயணம் செய்யும் தூரம் அவள் பிரயாணம் செய்வது ஹலாலாகமாட்டாது’ என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினாரகள்.

(நூல்: சஹீஹுல் புகாரி – ஹதீஸ் எண்: 1088)

இதே போன்று ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருப்பதையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது.

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம். மேலும் ஒரு பெண் அவளுடன் ஒரு மஹ்ரம் இருந்தேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம் என நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! இன்ன இன்ன யுத்தத்தில் நான் பதிவு செய்துள்ளேன், எனது மனைவி ஹஜ் செய்ய வெளியாகியுள்ளார் என கூறினார். நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நீர் சென்று உமது மனைவியுடன் ஹஜ் செய்வீராக எனக் கூறினார்கள்.

(நூல்: சஹீஹுல் புகாரி – ஹதீஸ் எண்: 3006)

கணவன் அல்லது மஹ்ரமான ஆணைப் பெற்றுக்கொள்ளாத ஒரு பெண் நம்பகமான பெண்களுடைய கூட்டத்துடன் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லலாம் என முற்கால மார்க்க மேதைகள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். எனினும் தற்காலத்தில் பெண் தனது கணவன் அல்லது தனக்கு மஹ்ரமான ஆணின் துணையின்றி ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதால் பல அசௌகரியங்களைச் சந்திக்கின்றாள். அவளுக்கு எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும் அளிக்;க முடியாத இக்கட்டான நிலை ஏற்படுகின்றது. இவைகளைக் கவனத்திற்கொண்டு தற்கால அறிஞர்கள்  கணவன் அல்லது மஹ்ரமான ஆணைப் பெற்றுக்கொள்ளாத ஒரு பெண் நம்பகமான பெண்களுடைய கூட்டத்துடன் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வது ஆகுமானதல்ல என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

பிரசுரித்த தேதி 16.03.2009
ஹிஜ்ரி தேதி 1430.03.18
வெளியீடு எண் 014/F/ACJU/2009

Acju

நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்தல் பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

திருமணம் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாகும். திருமணத்தின் பால் தேவையுடைய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தனக்கு மஹ்ரம் இல்லாத பொருத்தமானவர்களைத் தெரிவு செய்து மணம் முடிப்பதை இஸ்லாம் வரவேற்கின்றது.

நெருங்கிய உறவுக்குள் திருமணம் முடிப்பதால் இரத்த ஒற்றுமைக் காரணமாக பிறக்கின்ற குழந்தை குறையுள்ளதாகப் பிறக்கும் என்ற கருத்தை அல்-குர்ஆனிலோ, சஹீஹான ஹதீஸ்களிலோ நாம் காணவில்லை. ஆனால் ஷாபிஈ மத்ஹபின் பிரபல அறிஞர்களில் ஒருவரான இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தனது மின்ஹாஜுத் தாலிபீன் எனும் கிரந்தத்தில் திருமணம் செய்வதற்குத் தெரிவுசெய்யப்படும் பெண்ணில் கவனிக்கப்படவேண்டிய அம்சங்களைக் கூறும்போது ‘மார்க்கத்தைப் பின்பற்றக் கூடிய, திருமணமாகியிராத, நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, நெருங்கிய உறவினர் அல்லாத ஒரு பெண் விரும்பத்தக்கது’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் நெருங்கிய உறவினர்களுக்கிடையில் பிறக்கும் குழந்தைகள் பரம்பரை நோய்களுடன் அல்லது குறைகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது என பலராலும் சொல்லப்படுகின்ற, பரவலாக நம்பப்படுகின்ற கருத்து ஆய்வுகளின் அடிப்படையில் இன்று வரை உறுதியாக நிரூபிக்கப்பட்ட அல்லது வைத்தியர்களினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றல்ல என்பதைக் கவனத்தில்கொள்ளவும்.

வல்ல அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

பிரசுரித்த தேதி 29.04.2009
ஹிஜ்ரி தேதி 1430.05.03
வெளியீடு எண் 018/F/ACJU/2009

Acju

Fatwas, Bans & Censorship #AtoZChallenge

I hated when I came to Know about the fate of The Hindus: An Alternative History in India. Penguin India withdrew the copies of Wendy Doniger… 332 more words

Books