தற்போது  8  வருட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடிப்பது உறுதியாகிவிட்டது. மலையாளத்தில் மஞ்சு வாரியார் நடித்த ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற படம் அங்கு பெரும் வெற்றி பெற்றது. 40 வயதை கடந்த மஞ்சு வாரியாரின் அழகும், நடிப்பும் அனைவரையும் கிரங்க வைத்தது. அதற்கு சற்றும் குறைவில்லாத ஜோதிகா அந்த படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.

SEE ALSO : வாய்ப்பு தாருங்கள்: அபிஷேக் பச்சன் கேட்கிறார்

படத்தை தயாரிப்பது சூர்யாவேதான். அவரது 2டி நிறுவனம் தயாரிக்கிறது. மலையாளப்படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள கேரக்டர்களில் ஜோதிகா நடிக்க முடிவெடுத்திருப்பதாகவும் அதன் தொடக்கமே இந்தப் படம் என்றும் கூறப்படுகிறது.