Tags »

பெலன் இல்லா நேரத்தில்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdVTd3b0kwc2dBTHc

பெலன் இல்லா நேரத்தில் புதுப்பெலன் தந்து
என்னை நீர் தாங்கிடுமே
திடன் இல்லா நேரத்தில் திடமனம்
தந்து என்னை நீர் நடத்திடுமே

பெலன் தாருமே – 4
புதுப்பெலத்தால் என்னை நடத்திடுமே

1. எலியாவைப்போல் வனாந்திரத்தில்
களைத்துப்போய் நிற்கின்றேனே
மன்னாவைத் தந்து மறுபடி நடக்க செய்யும்

2. போராட்டங்கள் சூழ்ந்ததாலே
சோர்ந்துபோய் நிற்கின்றேனே
சோராமல் ஓட திடமனம் அளித்திடுமே

3. மனிதர்களின் நிந்தனையால்
மனம்நொந்து நிற்கின்றேனே
மன்னித்து மறக்க உந்தனின் பெலன் தாருமே

4. மாம்ச எண்ணம் மேற்கொள்வதால்
அடிக்கடி தவறுகின்றேனே
பரிசுத்த வாழ்வு வாழ பெலன் தாருமே

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

சிலுவையே நல்மரமே

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdM1BNY0ZwRS1GTVU

சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கிறார்

1. துன்ப நெருக்கடியில்
சோர்ந்து போனாயோ
அன்பர் இயேசு பார்
உன்னை அணைக்கத் துடிக்கின்றார்

2. பாவச் சேற்றினிலே
மூழ்கி தவிக்கின்றாயோ
இயேசுவின் திருரத்தம்
இன்றே கழுவிடும்

3. வியாதி வேதனையில்
புலம்பி அழுகின்றாயோ
இயேசுவின் காயங்களால்
இன்றே குணம் பெறுவாய்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

ஆண்டவரே உம் பாதம்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdbHVzRkU4SVFzZWc

ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
அடிமை நான் ஐயா
ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்
அகன்று போகமாட்டேன்
உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன்

1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டு
அதன்படி நடக்கின்றேன்
உலகினை மறந்து உம்மையே நோக்கி
ஓடி வருகின்றேன்

2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்
நன்கு புரியும்படி
தேவனே எனது கண்களையே
தினமும் திறந்தருளும்

3. வாலிபன் தனது வழிதனையே
எதனால் சுத்தம் பண்ணுவான்
தேவனே உமது வார்த்தையின்படியே
காத்துக் கொள்வதனால்

4. நான் நடப்பதற்கு பாதையைக் காட்டும்
தீபமே உம் வசனம்
செல்லும் வழிக்கு வெளிச்சமும் அதுவே
தேவனே உம் வாக்கு

5. தேவனே உமக்கு எதிராய் நான்
பாவம் செய்யாதபடி
உமதுவாக்கை என் இருதயத்தில்
பதித்து வைத்துள்ளேன்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

பேசு சபையே பேசு

https://drive.google.com/file/d/0BzYcjgTVhUWdcE1hMGgxZTRfcjg/view?usp=sharing

பேசு சபையே பேசு – 4

இது உலர்ந்த எலும்புகள்
உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்
இது தள்ளாடும் முழங்கால்கள்
புதுபெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்
இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்
இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள்

1. நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்று சேரும்
தசைகளும் புதிதாக தோன்றும்
ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்
புது ஜீவன் உனக்குள்ளாய்த் தோன்றும்

2. மேகங்கள் சூழ்ந்திடவே இரைச்சலும் பெருகிடவே
பெருமழை தேசத்தில் பெய்யும்
கல்வாரி இரத்தத்தாலே ஜாதிகள் மீட்கப்பட்டு
கர்த்தரை தெய்வமாக வணங்கும்

3. ஜாதிகள் நடுங்கிடவும் தேசங்கள் வியந்திடவும்
கர்த்தரின் கிரியைகள் தோன்றும்
மரித்தோர் பள்ளத்தாக்கில் துதிக்கின்ற சேனை ஒன்று
கர்த்தரின் ஜீவன் பெற்று எழும்பும்

ஜீவனை பேசு… இரட்சிப்பைப் பேசு…
சுவாசத்தைப் பேசு… அற்புதத்தைப் பேசு
சபையே நீ எழும்பிடு காற்றே நீ வீசிடு
போற்று சபையே போற்று

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

நாளைய தினத்தை

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdUTRTUklsNVMtSlE

நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்

1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா

2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலே
ஒளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா

3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்
புது பெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா

4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா

5. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

இயேசு நம்மோடு

https://drive.google.com/file/d/0BzYcjgTVhUWdb2V4YThaYU5rTEk/view?usp=sharing

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்
இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா அகமகிழ்வோமே

1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்
கர்த்தர் ஒளியாவார்
ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்
உலகின் ஒளிநாமமே

2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலே
தேவனின் வார்த்தை உண்டு
அவரின் தூய தழும்புகளால்
குணம் அடைகின்றோம் நாம்

3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்
மனமோ தளர்வதில்லை
கோதுமை மணிபோல் மடிந்திடுவோம்
சிலுவையைச் சுமந்திடுவோம்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

கல்வாரி சிநேகம்

https://drive.google.com/open?id=0BzYcjgTVhUWdSnhsOEJfRzcyUWc

கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும்

1. காலங்கள்தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்
குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்
கும்பிடுவோரை குணமாக்கும் தெய்வம்

2. இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்
இனியாவது உம் திருமுகம் காண
இராஜா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்
என்னைக் காணுவோர் உம்மை காணட்டும்

3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாற
அனைத்தையும் தந்தேன் ஆட்கொள்ளும் தேவா
நீர் பெருகவும் நான் சிறுகவும்
தீபத்தின் திரியாய் எடுத்தாட் கொள்ளும்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்