கோவில் இடத்துல வீடாம் அதான்  சாமி நம்மளை ஆட்டிப்படைக்காம் என்கிறார்கள் அப்போ வாங்க பேயைக் கூட்டிட்டு வந்து சாமியோட்டுவோம் என்றால் போடா லூசுப்பயலே என்கிறார்கள்.!

புனிதரின் இடத்தில் எப்படி கழிவறை என்கிறார்கள் அப்போ உங்க வயித்துல மலம் வச்சிட்டு உள்ள போறிங்களே பிரச்சனை இல்லையானா தர்க்கவாதி என்கிறார்கள்.!

கொன்னவன் எங்காளு செத்தவன் அவனும் எங்காளுதான் ஏன் கேட்டால் மதத்தின் உட்பிரிவு கடவுள் ஒன்றே என்கிறார்கள்.!

அங்கு பேயிருக்கு என்கிறார்கள் பொம்பளைப்பேயா பாஸ் என்றால் அடக்காமப்பிசாசே என்கிறார்கள்.!

ஜெ சமாதி எம்ஜிஆர் சமாதி என்கிறார்கள் தியானம் பண்ணுகிறார்கள் எங்கூர் சுடுகாடு பக்கம் கூப்பிட்டால் வருவேணா என்கிறார்கள்.!

இப்பெல்லாம் யார் சார் சாதி பாரக்குறா என்கிறார்கள் அப்புறம் ஏன் என் தொகுதியில் ஆதிக்க சாதி வேட்பாளரென்றால் அதலாம் அரசியல் என்கிறார்கள்.!

திருமா நமக்காக தலைவரென்றால் பொது தொகுதியில் நிற்கச்சொல்கிறார்கள் நின்றால் ஓட்டா உனக்கா என்கிறார்கள்.!

எதிர்கட்சியாய் ஆளுங்கட்சியை குறை சொல்கிறார்கள் சரி அடுத்து ஆளுங்கட்சியானதும் அவர்தப்பை தண்டனையாக்குங்கள் என்றால் அதெப்படி என்கிறார்கள்.!

நாதக கொஞ்சம் தப்பா இருக்கு முதல்லையே திருத்திக்கோ என்றால் அத ஏன் எங்கள்ட்ட மட்டும் சொல்ற என்கிறார்கள்.!

கலைஞர் ஒரு… போதும் நிப்பாட்டு அந்த காலத்துல, ஒருகாலத்துல என்கிறார்கள்.!

தொடர்ந்து இரண்டாவது முறையா இந்த கேவல ஆட்சியை தோற்கடிக்க முடியலையே அப்ப உங்க லட்சணம் என்னவென்றால் எங்க ஸ்டாலின் தரும் பொன்னான ஆட்சிக்கு மக்கள் தகுதியற்றவர் என்கிறார்கள்.!

பழனிச்சாமியும் அம்மா வழி நல்லாட்சி அமையும் என்கிறார் பன்னீரப்பரும் அம்மா வழி நல்லாட்சி அமைப்பேன் எங்கிறார் உங்க ங்கொம்மா ஆட்சியே ஆக்கம் கெட்டாப்ல தான் இருந்ததென்றால் அரசை அவமதிக்கிறேன் என்கிறார்கள்.!

ஜெயலலிதா என்றார்கள், பன்னீரப்பர் என்றார்கள், சசிகலாவாம் என்றார்கள், இன்னும் பன்னீர்தான் என்றார்கள் இப்போ பழனிச்சாமி என்கிறார்கள் யார்தான் எங்க முதலமைச்சரென்றால் எங்களுக்கே தெரியலப்பே என்கிறார்கள்.!

சசிகலா பெறும் தண்டனையில் ஜெயலலிதாக்கும் பன்னீரப்பருக்கு பங்கு இருக்கு என்றால் ஜெ வாழ்ந்த புனிதர் பன்னீர் வாழும் புனிதர் என்கிறார்கள்.!

மோடி என்ற் கேள்வியை முடிப்பதற்குள் தேசத்துரோகி என்கிறார்கள்.!

இன்னும் 2+ வருசம் தானே மாற்று யாரென்று கேட்டால் காங்கிரஸ் என்கிறார்கள்.!

டிமானிடைசேஷன் என்றார்கள், கேஸ்லெஸ் எக்னாமி என்றார்கள், மொபைல் ஆப் என்றார்கள் விவசாயி சாகுறான்டா என்றால் அதுக்கு இப்பென்னவாம்  என்கிறார்கள்

தெருவுக்கு வா போராடு என்றார்கள் வந்தால் இன்றைய டாபிக் மாடு மாட்டுக்கு மட்டும் போராடு என்கிறார்கள்

அரசியல் பேசு ரௌத்திரம் பழகு என்கிறார்கள் பேசிப்பழகினால் எங்கள் வீட்டில் தீ கொளுத்தி கொளுத்தி விளையாடுகிறார்கள்.!

ஏன் நந்தினி, ஏன் ஹாசினி, ஏன் பாட்டி என்றால் நாங்க ஆம்பளை என்கிறார்கள்.!

உனக்கென்னடா பிடிக்கும் என்கிறார்கள் ஆசையாய் அரசியல் என்றால் நீ உருப்படவே மாட்ட என்கிறார்கள்.!

காதலென்றால் படுக்கை பகிர்கிறார்கள் கல்யாணமென்றால் வீடாவது இருக்கா என்கிறார்கள்.!

கஷ்டத்தை புறம் சொல் என்றார்கள் சொன்னால் எனக்கு இதுக்கு மேல் என்கிறார்கள்.!

பெண்களை மதிக்கப் பழகு என்கிறார்கள் இகழாதிருக்க கற்றுள்ளேன் என்றால் ஆணாதிக்கவாதி என்கிறார்கள்.!

இன்னுமாடா கல்யாணம் ஆகலை என்கிறார்கள் முடித்த பின் முதலிரவு முடிந்த காலை அப்புறம் எதும் விஷேசமுண்டா என்கிறார்கள்.!

நானல்ல நான் அவரெல்லாரும் தான் நான் என்கிறார்கள்.!

அவர் வீட்டு இழவிற்கு என்னை துக்கம் அனுசரி என்கிறார்கள்.!

சொன்னால் தான் சீன் பார்ட்டி என்கிறார்கள் என்று எழுதினால் அவன் கெடக்கான் சைக்கோப்பய என்கிறார்கள்.!

ஏன் இப்படி வழவழகொழகொழ என்கிறார்கள் சரி முன்னிட்ட சின்னதை படித்தியா வாதிட்டியா என்றால் எனக்கு வேறு வேலையில்லையா என்கிறார்கள்.!

சரி சாகலாம் என்றால் கோழை பட்டம் வாங்கிட்டுப்போ என்கிறார்கள்.!

வாழ்ந்து தொலைக்க என்னதான் செய்ய என்றால் இதை திரும்ப படி என்றார்கள்.!

சிறிது அமைதிக்குப்பின் கோழை பட்டம் எங்கு வாங்கனும் என்றேன்.

– கோபி.!?
எப்போதும்வென்றான்