Tags » விஜய் டிவி

நான் ஏன் போலீஸாரால் கைது செய்யப்பட்டேன் விளக்கமளிக்கிறார் சரவணன் மீனாட்சி செந்தில்

கடந்த சிலநாட்களுக்கு முன் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களை பரபரப்பாக ஓடியது சரவணன் மீனாட்சி புகழ் மிர்ச்சி செந்தில் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட  வைரல் வீடியோ. இந்நிலையில் தனது கைதுக்கான காரணத்தை ஜாலியாக அதுவும் செம உற்சாகமாக சொல்கிறார் செந்தில்.  பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி அப்படியே ?

என்ன பாஸ் இப்படி பண்ணீட்டீங்களே? என்றவுடன். பார்ரா! தெரியாத மாதிரி கேக்கறீங்க. இந்தக் குற்றத்துல உங்களுக்கும் பங்கு இருக்கு யுவர் ஆனர் ஒத்துக்கங்க. என ஆரம்பித்தவர் எல்லாமே ஒரு நிகழ்ச்சிக்காகத்தான். மிர்ச்சியில புதுசா ஆரம்பிக்கப்போற ஒரு நிகழ்ச்சிக்காகத்தான் இந்த டகால்டி வேலையெல்லாம். நீங்க நான் ராஜா சார்ங்கற நிகழ்ச்சியோட ஃபேமஸ் நான் சொல்லித் தெரியவேண்டியதில்ல. அத பீட் பண்ணனும்னு எவ்வளவோ யோசிச்சு எந்தப்  புது ஐடியா பண்ணினாலும் அது அந்த அளவுக்கு பெரிய விஷயம் ஆகலை. ராஜா சாராச்சே.

ஏதாவது புதுசா செஞ்சே ஆகணும்ங்கற கட்டாயம். சுட்டகதைன்னு நிகழ்ச்சிக்கு பேரு வெச்சோம் அந்த நிகழ்ச்சிக்கான புரமோ தான் இது. பரந்தாமன் கதைகள்னு ஒரு நிகழ்ச்சிக்காக நிறைய கதைகள் விகடன்,அப்பறம் நண்பர்கள், உறவுகள், படிச்ச கதைகள்னு சுட்டு சுட்டுக் கதைகள் சொல்லிட்டு இருந்தேன். சரி இதுக்கு சுட்டகதைன்னே வெச்சு கொஞ்சம் பிரபலமாக்கலாம் வேற லெவலுக்கு கொண்டுபோகலாம்னு யோசிச்சப்போதான் எங்களுக்கு இந்த கைது ஐடியா வந்துச்சு. கதைய சுட்ட செந்தில் கைது இதுதான் அந்த வீடியோவோட ஒன்லைன்.

அதுவும் வீடியோவா ஷூட் பண்ணா கண்டிப்பா கண்டுபிடிச்சுடுவாங்கன்னு ஒரு மொபைல் வீடியோவாவே கொஞ்சம் அசச்சு, நகர்த்தினு ரியலிட்டியா செஞ்சோம். அவ்ளோ தான் பத்திக்கிச்சு. சரி ஏதாவது எழுதுவாங்கன்னு பார்த்தா. கடைசியில குடும்பத்துலயே குண்டு வெச்சிட்டாங்க.வரதட்சணைக் கொடுமை மிர்ச்சி செந்தில் கைதுன்னு தலைப்பு. பக்குன்னு இருந்துச்சு. ஆளாளுக்கு போன் பண்ணி என்ன மச்சி இப்படிப் பண்ணிட்டனு ஆரம்பிச்சாங்க.

கொஞ்சம் முக்கியமான புள்ளிகள் என்ன தம்பி ஏதும் பிரச்னையா அண்ணன் ஹெல்ப் ஏதும் வேணுமான்னு கேட்டாங்க. நிறைய சினிமா, டிவி சார்ந்த ஃப்ரண்ட்ஸ்களும் ரொம்பவே அக்கறையா விசாரிச்சப்ப தான் இந்த வீடியோ எவ்ளோ பெரிய விஷயம் ஆச்சுன்னு தெரிஞ்சது.

அப்பறம் மக்களே இதுக்கு நான் மட்டும் காரணம் இல்ல. சுத்தி இருக்க இந்த போலீஸ் வேஷத்துல இருக்க இந்தப் பசங்க, ஆங். இவங்க எல்லாருமே என்னோட ஆபீஸ் ஃப்ரண்ட்ஸ் தான். இந்த பசங்கதான் போலீஸ் ட்ரஸ்லாம் போட்டு செல்ஃபியெல்லாம் எடுத்து இவங்கள ஃபார்ம்க்கு கொண்டு வந்து சீரியஸ் கிரியேட் பண்றதுக்குள்ள ஸ்ஸப்பா முடியல. அப்பறம் முக்கியமான விஷயம். அந்தக் குழந்தையே நீங்க தாங்கற மாதிரி இந்த வீடியோவுக்கு பார்டனரே விகடன் தான். விட மாட்டேன் உங்களையும் கோர்த்து விடுவேன் என செம ஜாலியாக பேசினார். நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள் ப்ரோ!

உங்க விளம்பரத்துக்கு அளவே இல்லையா பாஸ்

நன்றி : விகடன்.காம்

Cinema

சரவணன் மீனாட்சி தம்பதிகளின் விதியின் விளையாட்டு - காதல் - திருமணம்-கைது - சிறை சினிமாவை மிஞ்சிய நிஜம் லைவ் ரிப்போர்ட் .

சரவணன் மீனாட்சி என்று சொன்னதும் தமிழ் ரசிகர்களுக்கு சரவணன் மீனாட்சி ஆக இந்த கேரக்டரில் நடித்த மிர்ச்சி செந்தில், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜா ஆகியோர் தான் கண்முன்னே வந்து நிற்பார்கள்.

சீரியலில் காதலர்களாக நடித்தவர்கள் நிஜ கணவன் மனைவியாக ஆன கதை செந்தில்-ஸ்ரீஜா தம்பதியை சாரும். இவர்களின் திருமணத்தை தமிழகமே கொண்டாடியதை ஊர் உலகம் அறிந்ததே.

இப்படி தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் என வரிசைக்கட்டி புகழ்ந்த  செந்தில்-ஶ்ரீஜா தம்பதியரின் வாழ்க்கை ஒருவருடத்திற்குள் முடிவுக்கு வந்துள்ளதாகவும்   செந்தில் வரதட்சணை புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு போலீஸாரால் அடித்து இழுத்து செல்லப்பட்டதாக வீடியோ வெளியாகியுள்ளது சினிமா காட்சிகளை மிஞ்சியது வேதனை.

 கடந்த 2014 ஜூலை மாதம்  முதல்வாரம் திருப்பதியில் வைத்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்கள்.  இவர்களின் திருமணம்தான் ரகசியமாக நடந்தது. ஆனால் திருமணம் நடந்து ஒருமாதம் வரை இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இதே செய்திதான் வலம் வந்தன.  பாஸ் அந்த சரவணன் மீனாட்சி நிஜமாகவே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாப்பா? உண்மையா போட்டோ வந்திருக்கே என்றெல்லாம் ஆளாளுக்கு விசாரிப்புக்கள் தொடர்ந்தன.

இதை செந்தில் ரேடியோ மிர்ச்சி நேரலையில் நீங்க நான் ராஜா சார் எனும் நிகழ்ச்சியில் எங்களுக்கு  திருமணம் நடந்தது உண்மைதான் என்று உறுதிப்படுத்தினார் செந்தில். ரசிகர்களின் ஆசையை நான் நிறைவேற்றியுள்ளேன். என் குடும்பத்தாரும் அதை ஏற்றுக்கொண்டார்கள். என்றெல்லாம் சொன்னார். இப்படித்தான் இந்த தம்பதி சகிதமாக ரேடியோ மிர்ச்சியில் தங்கள் திருமணத்தைப் பற்றி பேசினார்கள்.

கூடவே மதுரை எனும் சீரியலில் நடித்த இவர்கள் மீண்டும்  சரவணன் மீனாட்சி தொடரிலும் நடித்தார்கள். தொடர்களில்  நடித்த போது இருவரும் காதலிக்கவே இல்லை. சீரியலில் நெருக்கமாக நடிப்பதை பார்த்து விட்டு மற்றவர்கள்தான் அப்படி நினைத்தார்கள். கல்யாணம் வரைக்கும் சத்தியமா ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கவே இல்லை. இப்பதான் காதலிக்க ஆரம்பிச்சிருக்கோம் என்றும் நீங்க ரெண்டு பேரும் ஏன் கல்யாணம் பண்ணிக்ககூடாது?”ன்னு பார்க்கிறவங்கெல்லாம் கேட்க ஆரம்பிச்சாங்க. அப்புறந்தான் ஒரு நாள் ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து யோசிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னன்னு நினைச்சோம். அதுக்கான நேரம் வந்ததும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்றார்கள் கூடவே ரகசியமாக திருப்பதியில் நடந்ததால் ரீல் மேரேஜ், ரியல் மேரேஜ் என்று தனது கல்யாணத்தை உலகமே பார்க்கிற மாதிரி எல்லோர் முன்னாடியும் விஜய் டிவியின் நிகழ்ச்சிகாக நடத்தினாங்க.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி பேட்டிகளில் செந்தில் ரொம்ப நல்லவரு என செந்தில் பற்றி பேசிய ஸ்ரீ ஜா சொல்ல அதனாலதான் என்னைக் கல்யாணம் பண்ணியிருக்காங்க. உலகத்திலேயே என்னை மாதிரி ஒரு நல்லவன் கிடையாது என்று செந்தில் சொல்லிய பேட்டிகளும் உண்டு. கூடவே நாங்க ரெண்டு பேருமே ரொம்ப முன் கோபகாரர்கள்.  சீரியல் மாதிரியே நிஜத்திலும் சண்டை போட்டுக்குவோம்  என ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் செந்தில்.

செந்திலை திருமணம் செய்த சமயத்தில் சரவணன் – மீனாட்சி தொடரில் நடித்த சுகன்யா என்பவர் தானும் செந்திலும் பெற்றோரின் சம்மதத்தோடு  காதலிக்க ஆரம்பிச்சோம். எனக்கு வெள்ளித்திரையிலிருந்து சில வாய்ப்புகள் வந்தது. ஆனால் செந்தில் நான் சினிமாவில் நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டார். சில நாட்களில் தனக்கு நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் இருப்பது போல் காட்டிக்கொண்டார். கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி நடந்துக்கிறவர் கல்யாண வாழ்க்கைக்கு பின்  எப்படியெல்லாம் நடந்துக்குவாரோன்னு பயந்து விலக ஆரம்பிச்சேன். அப்புறம் தேடி தேடி வந்து டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சார் அதன்பிறகு சில நாட்களில் அவரிடமிருந்து முழுமையாக விடுதலை பெற்றேன், என்கிறார் சுகன்யா.

இதற்கு பதிலளித்த செந்தில்,  “இரண்டு பேரும் காதலித்தது உண்மைதான். எல்லாமே அவுங்க அப்பா அம்மா சம்மதத்தோடதான் நடந்தது. ஆனால் சில நாட்களில் கருத்து வேறுபாடுகள் வந்து விலகிட்டோம் என்றார்.   அப்போது இணையதளத்தில் இந்த தகவல்கள் பரபரத்தன.

ஆனாலும். எல்லாருடைய ஆசையின் படி மிகபிரமாண்டமாக திருமணம் இனிதே முடிந்தது.

திருமணம் முடிந்த கையோடு வெண்ணிலா வீடு, பப்பாளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் இவை எதுவும் பெரியதாக கைக்கொடுக்கவில்லை என்பதால் பணம் கையை கடிக்க ஆரம்பித்த நிலையில் புதிய படங்கள் நடிக்க வேண்டும் அதற்கு  பணம் பெரிய அளவில் தேவைப்பட்டது.

ஆனால் ஸ்ரீ ஜா தரப்பிலோ படங்களில் நடிக்க வேண்டாம். இப்படியே வியாபரம் சீரியல் என்று வாழ்க்கையை மாற்றிக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் செந்திலின்  சினிமா மோகத்தை இதை விட அழுத்தி சொல்ல முடியாது. இந்த வார்த்தைகளை.  சினிமாவெறி தான். என்று சொல்ல வேண்டும். அது கடைசியில்  தன் காதல் மனைவியே தன் மீது இப்படி ஒரு புகார் கொடுக்க வைக்கும் அளவுக்கு சென்றது தான் எங்களால் தாங்க முடியவில் என்கிறார்கள் சரவணனின் நெருக்கமானர்கள்.

1 வருடம் முடிந்த நிலையில்தான் யாருமே எதிர் பார்க்காத நிலையில் வரதட்சனை புகாரில்  தீடீர் கைது நடந்துள்ளது. ரேடியோ மிர்சி அலுவலகத்தில் வைத்து  கைது செய்யப்பட்ட  இந்த சம்பவத்தில்  போலீஸாருக்கு செந்தில் சரிவர ஒத்துழைப்பு தராததால் அடித்தும் இழுத்து செல்கிறார்கள் இந்த கைது சம்பவத்தை சில  2 நிமிட வீடியோ  எடுத்து இணையதளத்தில் விட, அத  பார்க்கும் எல்லோரையும் அதிர்ச்சியடை வைக்கிறது. அந்த வீடியோ இன்று முழுவதும்  இணையதளத்தில் பரவி கிடக்கிறது.

தனது திருமணத்தையே வதந்தீ போன்று நடத்தி சாதனை படைத்தவர்கள் சரவணன் மீனாட்சி தம்பதிகள். அதே போல நிஜ வாழ்க்கை கதையும் வதந்தியாக செய்திகள் உலாவாகி உண்மை என்கிறார்கள்..

இதற்கான உண்மையான காரணம் என்னவென்று செந்தில் தரப்பில் இன்னமும் வாய் திறக்காமல் அமைதியாக இருப்பதே பெரிய அதிர்ச்சியையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இல்லை இதுவும் தன்னை பிரபலப்படுத்த சீரியல் சூட்டிங் எடுத்ததை வீடியோவாக வெளியிட்டு விளம்பரம் தேடுகிறார்களா என குழம்பி கிடக்கிறாரக்ள். செந்தில் ரசிகர்கள்.

செந்தமிழ் செல்வன்.

Cinema