Tags » Air India

Goa, Goa, Gone

Today I leave Jaipur to head south to Goa. As I don’t need to be at the airport until 4:00pm, I choose to stay at the guest house and enjoy the lovely terrace and garden while writing. 1,220 more words

Travel

The Cattle shall stand only!

Many decades ago, when air travel was still a novelty and not many could afford it, India’s national airline, Air India used to advertise its planes as “Your Palace in the sky.” Till that time, my scanty experiences with flying machines were restricted to few short hop flights on India’s other Government owned domestic airline, Indian Airlines, which essentially operated small aircraft. 884 more words

Travels & Countries

Pilot gets DGCA notice for reporting late by 60 seconds and Air India woes

Lalit Shastri

By serving notice to an Air India pilot this past Friday accusing him of reporting late by 60 seconds on flying duty, the Director General of Civil Aviation, the regulatory body governing the safety aspects of civil aviation in India, has not come through with flying colours. 959 more words

India

Hotel and Flight Booking For Kolkata to Japan Was Not a Herculean Job

Popularly known as a travel junkie among friends and relative, I plan my vacation every year with them. This time we had our travel discussion in one of the famous food joints in Kolkata. 351 more words

Travel

கர்த்தர்- ஏர் இந்தியா ஏர் ஹோஸ்டஸ்

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்

பிப்ரவரி மாதம் 12ம் தேதி, முஸ்கட்லிருந்து சென்னைக்குச் செல்வதற்காக  விமானத்தை பிடிக்க காத்திருக்கும் அறையில் தமிழக மின் திட்டங்களைவிட மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கும் கடிகாரத்தைப் பார்த்தவாறு இருந்தேன். அப்போது “ஆர் யு டமில்” என்ற ஒரு பெண் குரல். வெள்ளைக்காரனை விட ஆங்கிலத்தை அதிகமாக பயன்படுத்துவது தமிழனாகத்தான் இருக்கும். அதோடு மட்டும் அல்லாமல், மொழியே தெரியாத ஊரிலும்/ஆட்களிடம் ஆங்கிலத்தில் முதலில் கேட்பது தமிழனேயன்றி வேறு எவரும் இப்பூவுலகில் இலர் . மற்ற அனைவரும் அவர்தம் மொழியிலேயே தொடங்குவார்கள் அல்லது திணிப்பார்கள். ஆக, கேட்டது ஒரு தமிழன்/தமிழச்சி என்பது தெளிவு.

நானும் தமிழன் என்பதால் “ யெஸ்” என்றேன்.

மெல்லியாதாக ஒர் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு, கையில் ஒர் சிறிய போஸ்டர் வடிவிலான ஏதோ ஒன்றை தந்து விட்டு, அடுத்தவரிடம் கொடுக்க சென்று விட்டார்.

என்ன என்று படிக்கும் போது “ கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார், நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்- சங் 128:5 “ என்று இருந்தது. இப்போது புரிந்திருக்குமே அப்பெண்மனி செய்த செயல் என்னவென்று. அன்னிய நாட்டின் விமான நிலையத்தின் காத்திருப்பு அறையில்  கிருத்துவ மதத்தைப் பரப்புகிறார்.அந்த அறையில் கிட்டத்தெட்ட 100-150 பேர் இருந்தார்கள். அவர் ஒருவரையும் விடவில்லை, அனைவரிடமும் சென்று இதே கேள்வி, மெல்லியப் புன்னகை, பின், பைபிள் வசனம் தாங்கிய ஒர் காலண்டர் வடிவிலான ஒர் போஸ்டர். மதத்தை பரப்புவதை யாரும் இங்கே தடுக்கவில்லை. அதற்க்கும் ஒர் எல்லை ,இடம், வேண்டாமா? , அந்நிய நாட்டின் விமான நிலையத்திலா செய்வது ? . இப்படிச் செய்வதால் தான் இயேசு என்ன அள்ளிக் கொடுத்துவிடப் போகிறாரா என்ன? .

எர் இந்தியா விமானப் பணிப்பெண்ணும் எடுப்பான தோற்றமும் 

மஸ்கட்டில் இருக்கும் சென்னைவாழ் அன்பர்களுக்கு ஏர் இந்தியா விமானம் ஒர் அருட்கொடை. இங்கு இரவு பதினோறு மணிக்கு கிளம்பும் விமானம் மறுநாள் காலையில் 4.30க்கு சென்று சேர்ந்துவிடும். குடிமையியல் சோதனைகள், லக்கேஜ் ஆகியவற்றுக்கு ஒர் ஒரு மணிநேரத்தை வைத்துக் கொண்டாலும், 5.30 மணிக்கு விமான நிலைத்தைவிட்டு வெளியே விடலாம். அனால் , எர் இந்தியா என்றாலே அனைவரும் சொல்லும் ஒரெ விடயம்/அச்சம் ” ஏர் இந்தியாவா, சர்வீஸ் எல்லாம் மோசமா இருக்குமே, ஏர் ஹோஸ்டஸ் எல்லாம் கிழவியா இருப்பாங்களே“ என்று. அனைவருக்கும் தாம் மன்மதன் ஏன்று நினைப்பு.

நாலாவது முறையாக பயணம் செய்யும் நான், இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. போர்டிங் முடித்து விமானத்தில் அமர்ந்தேன். முதல் முறை பயணம் செய்தபோது இருந்த அதே விமானப் பணிப்பெண், வயது 35க்கு அருகில் இருக்கும். முன்வரிசையில் ஒரு வயதுக் குழந்தையுடன் ஒரு தமிழ் குடும்பம் அமர்ந்திருந்தது. அடுத்த இருபது நிமிடத்தில் விமானம் வானில் 33,000 அடி உயரத்தில் பறக்கத் துவங்கியது. ஊள்ளே இருக்கும் காற்றின் அழுத்தம் காரணமாக குழந்தை அழ ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இது ஒர் பெரிய விடயமாகப் படவில்லை. அதே நேரத்தில் குடிமகன்களின் எண்ணங்களை நிறைவேற்ற விமானத்தில் மதுகுடுக்கத் துவங்கிருந்தார்கள். இந்த நகழ்வில் அடுத்து 30 நிமிடங்கள் சென்றன, இப்போதும், குழந்தை அழுகையை ஏனோ நிறுத்தவில்லை. குழந்தையின் அம்மா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அழுகையை நிறுத்துவதாக தெரியவில்லை. இதன் நடுவே, அந்த விமான பணிப்பெண் குழந்தையின் ஆடையை ஒரு முறை பரிசோதிக்கு மாறு அவர் அன்னையிடம் சொல்ல ,அவரும் அவ்வாறே செய்தார். அதன் பிறகும் ஒர் பயனும் இல்லை. ஒரு மணிநேரமாக ஒரே அழுகை. என்னைப் போன்ற மற்ற பயணிகளுக்கு அவர்கள் மீது முதலில் இருந்த பரிதாபம் , நேரம் செல்லச் செல்ல ஒர் வித எரிச்சலை உண்டு பண்ணியது. எல்லார் மனதிலும் எப்படியாவது குழந்தையின் அழுகையை நிறுத்த வேண்டும் என்ற ஒர் அவா, கோரிக்கை .மது அருந்தும் படலம் முடிந்தவுடன், உணவு பறிமாறும் வேளை, எனவே, அந்தப் பெண், அனைவருக்கும் உணவு பறிமாறச் சென்று விட்டார். உணவு பறிமாற்றத்தில் அடுத்த 30-45 நிமிடங்கள் சென்றன,ஆனாலும், குழந்தையின் அழுகையில் எந்த மாற்றமும் இல்லை. குழந்தையின் அன்னைக்கும் எந்த உபாயமும் புரியவில்லை, இதுவரை அப்பணிப் பெண் சொன்னவற்றையே அவரும் செய்துகொண்டு வந்தார் .என்ன செய்வதென்றும் தெரியவில்லை. மறுபடியும்,  அந்த விமான பணிப்பெண் , குழந்தையை வாங்கி கொஞ்ச நேரம் சமாதானம் செய்து பார்த்தார். பின்பு ஏதோ நினைவு வந்ததைப் போல, குழந்தைகளுக்கு வயிற்று வலிக்கு குடுக்கும் மருந்தை கொடுக்க சொல்லவே, அன்னையும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார். மருந்தைக் குடித்த குழந்தையும், ஒன்றரை மணி நேர அழுகையை நிறுத்தியது. அன்னையின் முகத்தில் குழந்தையை பெற்றெடுத்தார் போல ஒர் மகிழ்ச்சி.

எடுப்பான தோற்றம் , இனிய குரல், பரு இல்லா முகம், வெள்ளைத் தோல், நீண்ட நெரம் பணி செய்ய தேவையான உடல் திறன், சம்யோகித புத்தி , இன் முகத்தோடு அருமையாக வேலை பார்க்கும் திறன் , பொறுமை ஆகியவை ஏர் ஹோஸ்டஸ் எனப்படும் விமானப் பணிப்பெண் வேலைக்கான விமான நிறுவனங்கள்  வேண்டும் முக்கிய தகுதிகள். விமானம் துவங்குவற்கு முன் தேவையான வற்றை செய்வது, உணவு கொடுப்பது, அவசர நிலைகளில் அனைவரையும் தயார் படுத்துவது , முதலுதவி (தேவைப்படும் பட்சத்தில்) ஆகியவையே விமானக்களில் இருக்கும் முக்கிய பணிகள் . இதைச் செய்யவே எடுப்பான தோற்றம் முதல் இத்துணை தகுதிகள் , ஏதோ விமானத்தில் அழகிப் போட்டியோ அல்லது பேஃசன் ஷொ கேட் வாக்க்கோ நடத்தப்போவதைப் போல . ( ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது பெண் பணியாளரை அவர் எடை கூடியதைக் காரணம் காட்டி வேலையை விட்டு தூக்கியிருக்கிறது. ஆனால், இதே காரணம் ஆண்களுக்கு பொருந்தாது, பெண்களுக்கு மட்டும் தான்.)

இனிய சேவை, அவரவர் தாய் மொழியில் இன்முகத்தோடு பதில் சொல்லும் திறன் ( “ லைப் ஜாக்கேட் ஆப்கா குர்ச்சி பேர் நீச்சே ஹே ”  என்று விமான பாதுகாப்பில் கூட இந்தி மொழையை திணிக்கலாம், ஆனால், விமான நிறுவனதிற்கு எந்த பயனும் இல்லை)  , ஆகியன இருந்தாலே போதும், விமான சேவை நன்றாக இருக்கும். அன்று அவர் குழந்தை அழுகையை நிறுத்திய அந்த சேவையே போதும், ஏர் இந்தியா பல வாடிக்கையாளர்களை தன்வசம் இழுக்க. எடுப்பான தோற்றம் செய்யாத பலவற்றை இனியசேவை செய்யும்.

மதம்

CRICKET WORLD CUP FEATURES IN NEW AIR INDIA MENU

India’s national carrier, Air India, has daily flights from Sydney to Delhi on their new B-787 Dreamliner aircraft. Said to be the world’s most advanced aircraft, the Dreamliner gives passengers the benefits of a smoother ride with cleaner air resulting in a lesser feeling of jet lag. 442 more words