Tags » Biblical Archaeology

Archaeology: Tel Dan, King David, and a Window Into History

Beginning as a “rescue operation” to save any archaeological evidence left behind before new building began on the site,[1] uncovering Tel Dan became the “longest-running excavation project ever conducted in Israel.” 1,490 more words

Christian Apologetics

Gearing Up for Another Season

The summer and fall of 2015 Mid-Atlantic Christian University (MACU) was very generous in granting me a sabbatical. That summer I took 8 weeks to participate in 2 archaeological expeditions. 410 more words

Time Traveling with the Mind (Part One)

Paul in Ephesus

On a trip I took to Ephesus, Turkey I was able to be transported back in time to when the apostle Paul was judged by Demetrius and his fellow artisans. 123 more words

The Hunt For Komodo Cracker

Biblical Tels and Moai

By D. Dowdican

When I first signed up for this class I knew it would be interesting. There is so much history in the world we haven’t studied. 1,213 more words

Biblical Archaeology

The Persians of 473 BC - Part One of Three

It’s no coincidence Thomas Faraday and his time traveling companions ended up in Hīt 473 BC, a small city located North West of ancient Babylon. I chose this time period for my science fiction novel for two reasons. 340 more words

The Hunt For Komodo Cracker

சூரியன்

சங்கீதம் 19:5,6 “சூரியன்,தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப் போலிருந்து,பராக்கிரமசாலியைப் போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது.அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு,அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது.”

பிரசங்கி 1:5 “சூரியன் உதிக்கிறது,சூரியன் அஸ்தமிக்கிறது;தான் உதித்த இடத்திற்கு அது திரும்பவும் தீவிரிக்கிறது.”

சூரியன்,மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த,சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள விண்மீன் ஆகும்.அனைத்து கிரகங்களின் ஒட்டு மொத்த நிறையைக் காட்டிலும் சூரியனின் நிறை 740 மடங்கு அதிகம்.இதன் அதிகப்படியான நிறை தான் இதனுடைய ஈர்ப்பு விசைக்கு காரணமாகி,எல்லா கிரகங்களும் சூரியனைச் சுற்றி சீரான பாதையில் செல்வதற்குத் துணை புரிகிறது.பூமி உட்பட எல்லா கிரகங்களும்.கோடிக்கணக்கான விண்கற்களும் கோளப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன.முன்பு,பல வானவியல் ஆய்வாளர்கள் எல்லாரும்,பூமியும் மற்ற கோள்களும் தான் சூரியனைச் சுற்றுகிறதே தவிர சூரியன் ஒருபோதும் சுற்றாது என்றும் தன் இடத்திலேயே எப்பொழுதும் நிலைத்து நிற்கும் என்று கூறி வந்தனர்.வேத வார்த்தையையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

அதன்பின்பதாக,பல வருடங்கள் கழித்து வானவியல் ஆராய்ச்சியில் முன்னேற்றம் அடைந்த பின்,சூரியனைப் பற்றி பல தகவல்களைக் கண்டறிந்தனர்.பெரும்பாலும் ஹைட்ரஜன்,ஈலியம் மற்றும் இதர தனிமங்களால் ஆன சூரியன்,நமது பூமியிலிருந்து சுமார் 150 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.சூரியன்,தனது சுற்றுப் பாதையில் ஒரு வினாடிக்கு 250 கி.மீ. என்ற வேகத்தில் சுற்றி வருகிறது.மேலும் 24000 முதல் 26000 ஒளியாண்டுகள் அப்பால் உள்ள விண்மீன் மண்டல மையத்தை 225-250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது.இதன் மூலம்,சூரியன் தன் தோற்றத்தில் இருந்து தோராயமாக 20 முதல் 25 தடவைகள் விண்மீன் மண்டலத்தை சுற்றி வந்துள்ளது என்பதை அறியலாம்.மற்றொரு வகையில் கூறினால்,சூரியன் தன் பாதையில் சுமார் 1/1250 பங்கு தூரத்தைக் கடந்துள்ளது.இந்த அளவீடுகள் அனைத்தும்,நவீன கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது.

மற்ற கோடிக்கணக்கான சூரியங்களோடு நம் சூரியனும் அதிவேகமாய் பிரயாணம் செய்து கொண்டே இருக்கிறது.வேதாகம உண்மைக்கும் விஞ்ஞான உண்மைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.சூரியன் வேகமாக சுற்றிக் கொண்டே இருக்கிறது என்று இக்கால விஞ்ஞானிகள் பெற்றிருக்கும் அறிவை அக்கால வேதாகம எழுத்தாளர்கள் எப்படி அறிந்தார்கள்? தேவ ஆவியினாலே இதை எழுதினார்கள் என்பதற்கு இவ்வசனமும் சிறந்த உதாரணமே.

Bible Facts

பூமி மனிதன் வாழ்வதற்கே!

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! சென்ற பதிவில், நாம் வாழ்கின்ற இந்தப் பூமியை,நம் தேவனாகிய கர்த்தர்,தன் அனந்த ஞானத்தினாலும் வல்லமையினாலும் சிருஷ்டித்து (எரேமியா 10:12), அதை அந்தரத்திலே தொங்க வைத்திருக்கிறார் என்ற அறிவியல் உண்மையைக் கண்டோம்.ஆம்! சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்,இந்தப் பூமியைத் தம் வார்த்தையினாலே மிக நேர்த்தியாகவும் அற்புதமாகவும் சிருஷ்டித்ததோடு மட்டுமல்லாமல் தமது சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்கள் தங்கி வாழ்வதற்காகவும் சிருஷ்டித்திருக்கிறார்.இந்தப் பூமியின் அடிப்படை பண்பியல்புகளில் ஒரு சிறிய மாற்றம் இருந்திருந்தால் கூட மனிதர்களால் வாழ முடியாது. ஏசாயாவின் புத்தகம் 45:18ல், “வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்க சிருஷ்டியாமல் அதை குடியிருப்புக்காகச் செய்து படைத்து,அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்கிறதாவது,நானே கர்த்தர்,வேறொருவர் இல்லை” என்கின்ற வேத வசனத்தின் மூலமாக இந்தப் பூமியில் மாத்திரமே மனிதர்கள் வாழ்வதெற்கென்று சிருஷ்டிக்கப்பட்டது. சந்திரனிலோ அல்லது வேறு கிரகத்திலோ மனிதர்களால் வாழ முடியாது.

ஒபதியா 1:4ல், “நீ கழுகைப் போல உயரப்போனாலும்,நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும்,அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்பது கர்த்தர் ஒபதியாவுக்குக் கொடுத்த தரிசனமாகும்.

1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் நாள்,அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவர் முதன் முதலில் சந்திரனில் இறங்கி சாதனைப் படைத்தார்.சந்திரனில் இறங்குவதற்கு ஆம்ஸ்ட்ராங் பயன்படுத்திய நிலாக்கப்பலின் பெயர் “Eagle” (கழுகு) என்பதாகும்.பாருங்கள் எவ்வளவு ஆச்சர்யமான ஒற்றுமை என்று “நீ கழுகைப் போல உயரப்போனாலும்” என்று வேத வசனம் கூறுகிறது. இதன் பின் பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து சந்திரனில் மனிதன் வாழ முடியுமா என்று ஆராய்ந்த போது அது முடியாது என்று கண்டறிந்தனர்.ஏனென்றால் “அங்குள்ள குறைந்தழுத்த காற்று மண்டலம் நாம் வாழ்வதற்கு தகுதி வாய்ந்ததாக இல்லை.மேலும் சூரியனில் இருந்து வெளிவரும் கதிர் வீச்சுகளில் இருந்து காப்பதற்கான எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை.நிலவு சூரியனைப் பார்ப்பதைப் போல் இருக்கும் போது அதன் சீதோஷ்ண நிலை 150 டிகிரி சென்டிகிரேடுக்கு அதிகமாக இருக்கும்.இரவிலோ பூஜ்ஜியத்திற்கும் குறைவான சென்டிகிரேடில் இருக்கும்.இதனால் நிலவில் மனிதர்கள் வசிப்பது என்பது முடியாத ஒன்று” – செய்தி: தினமலர் (ஜூன் 1,2012).விஞ்ஞானிகள் கோடி கணக்கில் செலவு செய்து கண்டறிந்ததை,கர்த்தர் தம் ஊழியர்களுக்கு பல ஆயிரம் ஆண்டுகள் முன்பாகவே வெளிப்படுத்தியுள்ளார்.தேவனாகிய கர்த்தருக்கே என்றென்றும் மகிமை உண்டவதாக!

Bible Facts