Tags » Guruji

நான் சாதாரண ஸ்வயம்சேவக் – ஸ்ரீ குருஜி -2

நான் சாதாரண ஸ்வயம்சேவக் -2

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )

வேலை அமைப்பு

ஸ்வயம்சேவகனாக இருப்பதைவிட பெருமைக்கும், மரியாதைக்கும் உரிய வேறொரு விஷயமும் நமக்கு இல்லை என்பதே இதன் கருத்து. அப்படி இருந்தால், சர்சங்கசாலக்கிலிருந்து கட் நாயக்  வரை இருக்கின்ற இந்த அனைத்து அதிகாரிகள் எதற்காக? என்று யோசிப்பீர்கள். அது இயக்கத்தை வழிநடத்த ஒரு ஏற்பாடுதான். ஏனெனில், எந்த ஒரு இயக்கமும் தகுந்த ஏற்பாடு இல்லாமல் இயங்காது. நமக்கோ இயக்கத்தை நடத்த வேண்டியுள்ளது.ஆகவே, நாம் அப்படி ஏற்பாடு ஒன்றை அமைத்து, அவரவருக்குப் பொறுப்பு அளித்துள்ளோம். அதாவது, அவர்கள் அந்தந்தப் பொறுப்பை ஏற்று பணிபுரிகின்ற ஸ்வயம்சேவகர் ஆகின்றார்கள். ஆனால், அவர்கள், வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஏதேனும் ஒரு விஷயம் இருக்குமேயானால், அது, இன்று ஏற்பாடு என்ற முறையில் எனக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தால், ‘நான் ஸ்வயம்சேவக் என்கிற இந்த விஷயம் தன பெருமைப் பிடத்தக்கது’ என்பதேயாகும்.

ஆகவே பொதுவாக நான் ஒரு சாதாரண ஸ்வயம்சேவகன் என்று சொல்லும்போது, இப்படிப்பட்ட ஒரு பொறுப்புணர்வு நமது உள்ளத்துக்குள் இருக்க வேண்டும். இந்தப் பொறுப்பு மிகவும் பெரிதானது. சமுதாயமும் நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறது. அது நம்மை ஒரு ஸ்வயம்சேவகன் என்ற வடிவத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறது.சமுதாயத்திற்கு நம்மிடமிருந்தது பெரிய பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை நாம் புயூர்த்தி செய்து, எதிர்பார்ப்பதைவிட நல்ல முறையில் தேற வேண்டும் என்று நமக்கு   மனதில் படுகின்றது.

* ஷாகா எப்படி இருக்க வேண்டும்?

பொதுவாக, நாம் என்னென்ன விஷயங்கள் பற்றி கவனம் செலுத்த வேண்டும்? முதன்முதலில் நாம் சங்க ஷாகா பற்றிச் சிந்திப்போம். நமது ஷாகா எவ்வாறு இருக்க வேண்டும்?

 1. ஷாகா, தினசரி நடக்க வேண்டும்.
 2. ஷாகா குறித்த நேரத்தில் நடக்கவேண்டும்.
 3. ஷாகாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கவேண்டும்.
 4. அனைத்து ஸ்வயம்சேவகர்களுக்கிடையேயே பரஸ்பரம் கலந்துரையாடல், நட்பு, அன்பு, மற்றும் துமையான சூழ்நிலை இருக்கவேண்டும்.
 5. நமக்குள் கருத்துக் பரிமாறிக் கொண்டு, சர்ச்சா நடத்தி நமது உள்ளத்தில் லட்சிய வடிவம் நாளுக்கு நாள்  மேலும், மேலும் தெளிவாகி, பலமாக வேரூன்ற நமக்குள் தூண்டுதலும், ஆசையும் இருக்க வேண்டும்.
 6. ஒன்றாக இணைந்து நாம் தினந்தோறும் நமது பிரார்த்தனையைப் படுவோம். கம்பீரமாகவும், சிரத்தையுடனும் பொருள் உணர்ந்தும் படுவோம்.
 7. பரம பவித்ரமான நம்முடைய காவிக்கொடியை, நாம் அனைவரும் ஒன்றுகூடிப் பணிவுடன் வணங்குவோம்.
 8. ஷாகா வீகிரவுக்குப் பிறகு, யார் வரவில்லை என்பதை பற்றியெல்லாம் கேட்டறியவேண்டும்.

இவை ஷாகாவில் தினசரி செய்யவேண்டும்.

நாம் இன்னும் என்ன செய்ய வேண்டியுள்ளது?

 1. ஷாகா, குறித்த நேரத்தில் துவங்கப்பட வேண்டும் என்றால், நாம் நமது வீட்டிலிருந்து, அல்லது நாம் எங்கிருக்கின்றோமோ அங்கிருந்து, ஷாகா நேரத்திற்கு முன்பே (குறைந்த பட்சம் இரண்டு நிமிடம் முன்னதாக) சங்கஸ்தானத்திற்கு வந்துவிட வேண்டும்.
 2. நான் ஒருங்கிணைக்கும் மனிதன் தனிக்காட்டு ராஜா அல்ல என்பதை சர்ரே நினைத்துப் பார்ப்போம். அப்படியிருக்க, ஷாகாவிற்குச் சற்றுமுன்பே புறப்பட்டு, அக்கம்பக்கத்திலுள்ள ஸ்வயம்சேவகர்களை அழைத்துக்கொண்டு, சேர்ந்து ஏன் செல்லக்கூடாது? இது ஒரு சாதாரணமான நட்பின் செயலாகும். இதில் பொறுப்புப்பற்றிய கேள்வி எங்கே எழுகிறது? கட்நாயக் அல்லது காண சிக்ஷக் ஆகவேண்டிய தேவை எங்குள்ளது ? சாதாரணமாக நட்பு என்றாலே,நாம் ஒரு நல்ல வேலைக்குச் செல்லும்போது இயற்கையாகவே நம்முடைய நண்பன் நம்முடன் வருகிறான். நமது வீட்டின் அருகிலுள்ள அதாவது ஷாகா செல்லும் வழியிலுள்ள எந்த ஒரு உற்ற நண்பரையும் உடன் அழைத்துக் கொண்டு சிரித்துக்கொண்டு ஆடிப்பாடி ஆனந்தமாக சங்கஸ்த்தான் சென்றடைவோம். இது நமக்கு படிந்து வந்த பழக்கமாகிவிடவேண்டும்.
 3. சங்கஸ்தானில் நடக்கின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் முழுமனதுடன் கலந்துகொள்ள வேண்டும். கட்டுப்பாட்டுடன், விதிமுறைகளுக்கேற்ப ஈடுபடுவோம். அவற்றில் கஷ்டம் ஏற்பட்டால் கோவம் அடைய வேண்டாம்.நமது நிகழ்ச்சிகள் சற்று கஷ்ட்டமாகத்தான் இருக்கும். கஷ்டப்படுகின்ற பயிற்சியைச் செய்து, பெரிய பெரிய வேலைகளை இயற்கையாகச் செயகின்ற சக்தியை வளர்த்து கொள்ளவேண்டும்.ஆகவே, அவற்றை முயற்சி செய்து பார்ப்போம்.நிகழ்ச்சிகள் நமக்குள் அச்சமின்மை, தன்னம்பிக்கை மற்றும் பராக்கிரம உணர்வுகளை ஏற்படுத்தி, நம்மை கட்டுப்பாட்டுடன் இணைத்து, நாம் அனைவருமே ஒரு பெரிய சக்தியின் அங்கம் என்கின்ற உணர்வை என்றும் மனதில் பதியச் செயகின்றது. ஷாகா நிகழ்ச்சிகளில் இவ்வாறு நாம் நன்கு ஈடுபட்டு பயிற்சி பெறுவோம்.
 4. பிரார்த்தனா, த்வஜப்ராணம், கோடி இறக்கம், வீக்கிற ஆனபிறகு அவசர அவசரமாக வீட்டிற்கு ஓடுகின்ற எண்ணம் என் ஏற்பட வேண்டும்? அப்படி ஆகி கூடாது. வீட்டிற்கு ஓடுகின்ற அல்லது வேறு எங்கேயோ ஊர் சுற்றப் போகின்ற எண்ணமேற்படுகின்றது என்றால், நாம் ‘ ஷாகாவிற்கு விருப்பமில்லாமல், கட்டாயத்திற்கு வந்துள்ளோம், எப்படியோ இங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்று நினைக்கின்றோம்.’ என்றே அபிப்ராயம் எழும். நாம் யாருடைய கட்டாயத்தின் பேரிலும் ஷாகா வருவது இல்லை. அவ்வாறு வரவும் கூடாது. முழுமனதுடன் வருகிறோம் என்பது இங்கே முறை. அப்படி இருக்க, இங்கிருந்து ஓடிப்போகின்ற எண்ணம் ஏன்? இன்னும் கொஞ்சநேரம் இங்கேயே உட்க்கார்ந்திருப்போம் என்று மனதில் தோன்ற வேண்டும்.

உட்க்கார்ந்து இரண்டு விஷயங்களை பற்றிப் பேசுவோம்.

அ. யார் வரவில்லை? ஷாகாவிற்கு வரவேண்டிய நமது ஸ்வாரசேவக சகோதரர்களில் யார் வந்தார்கள், யார் வரவில்லை என்பதைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்வோம். யார் வரவில்லையோ ‘அவர் என் வரவில்லை’ என்பதைக் கேட்டறிவோம். இது  தினம்தோறும் செய்யவேண்டிய முறையான வேலையாகும்.

ஆ. லட்சியத்தை நினைப்பது: தின்தோறும் நமது லட்சியத்தை நினைப்போம். இமயமலையிலிருந்து துவங்கி, தெற்கிலுள்ள ஹிந்து மஹாசமுத்திரம்வரை எண்ணற்ற புனித ஸ்தலங்கள் நாடு நெடுக அமைந்துள்ளன. அவற்றை நினைவுபடுத்திக் கொள்வோம். பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலங்கள் உள்ளன. ஒவ்வொரு இடத்துக்கும் யாரவது ஒரு மாவீரனின் சிறப்பு அம்சம் பொருந்தியுள்ளது. அவற்றை நினைப்போம். அந்தப் பெருந்தகையாளரின் விசேஷ குணங்களை நாம் அனைவரும் ஓர் இடத்தில் உட்கர்ந்து நினைவு படுத்திக்க கொண்டு இந்த குணங்கள் நமக்கு உள்ளனவா என்று சிந்திப்போம்.  நமக்கு இந்த குணங்கள் ஏற்பட நாம் ஏதேனும் முயற்சி செய்கிறோமா இல்லையா? அல்லது, நாம் வெறுமனே வீர சிவாஜியின் பெயரை எடுத்துரைப்பவர்களா? இப்பொழுதெல்லாம் சிவாஜியின் பெயரை உச்சரிப்பவர்கள் ஏராளம். அனால் அவருடைய குணங்கள் நமக்கு வரவேண்டும். சிவாஜி என்று சொன்னவுடன் முழு பாரத நாட்டின் சுதந்திர சூரியன் மீண்டும் உதயமாகி, ஹிந்துக்களின் ஆட்சி அமைக்கின்ற தர்மத்தை ஆதாரமாகக் கொண்ட புனித அரசை அமைகின்றதான, உயர்ந்த பணிபுரிகின்ற, இணையில்லாத வீரன், நீதிமான், புத்திசாலியான அரசியல் மேதை, அத்துடன் மிகவும் தூய அபபழுக்கற்ற தேசிய ஒழுக்கம் கொண்ட, அனைவரின் மனதையும் கவரும் ஒரு மாமனிதனின் வடிவம் நமக்கு நம் மனக்கண்முன் வந்து நிற்கின்றது. அவருடைய இந்த குணங்கள் நமக்கு வரட்டும். இதேபோல் ஒவ்வொரு மகானைப் பற்றியும் சிந்தித்து, நாமும் நமது பண்புநலனை செழுமைப் படுத்திக் கொள்ள எவ்வளவு முயற்சி செய்துள்ளோம்? தேவையற்ற தீய குணங்களை அகற்ற எந்த அளவு முயற்சி செய்தோம் ? இப்படியெல்லாம் தனியாகவும், கலந்தும் சிந்தனை செய்வோம்.

 1. யார்வரவில்லையோ அவர்கள் ஏன் வரவில்லை என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவர்களை சென்று பார்க்க வேண்டும். சின்னச் சின்ன குழுக்களாகச் செல்லலாம். அவரைச் சிந்திப்போம். ஏதேனும் கஷ்டமிருந்தால் அதைச் சரிசெய்ய முயற்சி செய்வோம். எந்த கஷ்டமும் இல்லை என்றால் எந்த ஒரு காரணமும் இல்லாமல் ஷாகாவிற்கு வராமல் இருப்பது சரியல்ல என்கின்ற விஷயத்தை சரியான முறையில் நல்ல வார்த்தை சொல்லி புரியவைப்போம். அடுத்து ‘நாளிலிருந்து தான் ஷாகாவிற்கு போக வேண்டும்’ என்கிற எண்ணம் அவருக்கு ஏற்படும் வகையில் புரியவைக்க வேண்டும்.

இதுதான் நம்முடைய தினசரி குறைந்தபட்ச வேலை “சாதாரண ஸ்வயம்சேவக்” என்கிற முறையில், நாம் இவ்வளவெல்லாம் செய்தே ஆகவேண்டும் .இது தவிர மேலும் சில கடமைகள் உள்ளன.

[தொடரும்]

இந்தியா

நான் சாதாரண ஸ்வயம்சேவக் - ஸ்ரீ குருஜி -1

நான் சாதாரண ஸ்வயம்சேவக்

(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்)

ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. ஸ்வயம்சேவகர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அறிமுகப் படுத்திக்கொள்ளச் சொன்னேன். சில ஸ்வயம்சேவகர்கள் ‘நான் சாதாரண ஸ்வயம்சேவக்’ என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்டார்கள்.

“சங்க காரியத்தின் எந்த ஒரு பொறுப்பும் இல்லாதவன் நான்” என்று சிலர் சொல்கின்ற கட்டாயம் ஏற்படுகின்றது. எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் இருந்தால், நமது காட்னாயக், கணசிக்ஷிக் ஆகியவர்கள் நம்மைத் தேடிவந்து விசேஷமான முயற்சி செய்யவேண்டிய அளவிற்கு நம் நடந்துகொள்வது என்று ஆகும். அதாவது, நாம் ஷாகாவிற்குச் செல்லாமல் இருந்து, அவர்கள் நமது வீட்டிற்கு வந்து அழைக்கும்படி செய்து, நமது கட்னாயக், கண சிக்ஷகர்களை தமது வேளையில் விழிப்போடு இருக்கும்படி செய்வது. இது தான் நமது பொறுப்பு என்பதுபோல் தொனிக்கிறது.

பெருமைப்படத்தக்க விஷயம்.

நாம் அனைவரும் “சாதரண ஸ்வயம்சேவகர்கள்.” அசாதாரண தன்மை எதில் உள்ளது? எனக்கு சங்கத்தில் ஒரு முக்கிய ஸ்தானம் உள்ளது. ஆங்கிலத்தில் சீஃப் ஆஃப் ஆர்.எஸ்.எஸ். (Chief  of  RSS ) என்கிறார்கள்.என்னிடம் என்னிடம் உள்ள அசாதாரணத் தன்மை அல்லது அசாமான்யத் தன்மை எது? கொஞ்சம் தாடி வளர்ந்துள்ளது. நீங்களும் தினந்தோறும் முகச்சவரம் செய்யவில்லை என்றால் உங்களுக்கும் வளரும். அதில் என்ன அசாமன்யத் தன்மை  உள்ளது? இங்கு ஒரு சிலர் அந்த திசையில் முயற்சி செய்து வருகின்றனர். ஆகவே இதில் எந்த விசேஷமும் இல்லை.

எனக்கு பழைய சம்பவம் நினைவிற்கு வருகிறது. அது நமது சங்கத்தை துவங்கியவரைப் பற்றியது. அவர், தன்னுடன் உள்ள கார்யகர்த்தர்களுக்கு வலியுறுத்திக் கூறினார்: ” இந்த சர்சங்கசாலைக் வேலை செய்வதற்காக வேறு ஒருவரை தயார் செய்யுங்கள். அப்போது இந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து “சாதாரண ஸ்வயம்சேவக்” வடிவத்தில் நான் சகஜமாக வேலை செய்ய முடியும். சாதாரண ஸ்வயம்சேவக் எப்படி இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் எனக்கு சில கருத்துக்களும்,ஆசையும், எதிர்பார்ப்புகளும், இருக்கின்றன. அதன் படி, சுயமாக நடந்துக்கட்டி, உடன் வேலை செய்ப்பவருக்காக ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த முடியும்.” அதாவது, அவருக்கு சாதாரண ஸ்வயம்சேவகனாக இருக்கவே ஆசை. சூழ்நிலை அவரை அவ்வாறு இருக்க விடவில்லை, ஆகவே, சங்கத்தின் தலைவர் என்கின்ற முறையில் அவர் வேலை செய்ய வேண்டியதாயிற்று. அவர் மனதில் இப்படி பட்ட ஆசை ஏன் வந்தது? இவ்வாறு ஏன் எதிர்பார்ப்பு இருந்தது? அதற்க்கு ஒரே காரணம், நமது இயக்கத்தில் “சாதாரண ஸ்வாம்சேவக்” ஆவது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்பது தான்.

நாட்டில் சுற்றுப்பிராயணம் செய்யும்போது எவரேனும் என்னை, ‘உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும்விட பெருமைப்படத்தக்க விஷயம் எது என்று உங்கள் மனதில் படுகிறது? என்று கேட்டால், அதற்க்கு “நான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஸ்வயம்சேவக்” என்று கூற விரும்புகிறேன். இதைவிடப் பெருமைப்படத்தக்கது வேறு ஒன்றுமில்லை. உண்மைதான். கொஞ்சம் படித்துள்ளேன், சில பட்டங்கள் கிடைத்துள்ளன சிலருக்கு கற்ப்பித்துள்ளேன். எங்கெங்கோ சென்று சொற்பொழிவு ஆற்றுகிறேன். ஒரு சிலர் வந்து மலைகளும் அணிவிப்பார்கள். என்னுடைய இந்தத்  தோற்றம் உடை காரணமாக, மக்கள் எனக்கு நமஸ்காரம் செய்கின்றார்கள். இருந்தாலும் அவை எனக்கு கௌரவமென்று படுவதில்லை. எண்ணெய் பெரிய பெரிய ஆட்கள் வந்து சந்திக்கின்றார்கள்.வெளிநாட்டவரும் சந்திக்கின்றார்கள். துறவிகளும் சந்திக்கின்றார்கள். நம் மீது   அவர்களுடைய கிருபை உள்ளது, அரசியல் துறையில் உள்ளவர்களும் சந்திக்கிறார்கள். பல்வேறு விதமான பிரச்சனைகளை முன்வைத்து, வழிகாட்டவேண்டும் என்று கூறுகின்றார்கள்.

இப்படிப்பட்ட எல்லா விஷயங்களும் மனதில் ஒரு விதமான பெருமை உண்டாக்கக் கூடியவை. அனால், எனக்கு என்றுமே இதைப்பற்றிப் பெரிதாக நினைத்து பெருமைப்பட வேண்டும் என்று தோன்றவேயில்லை. பெருமைப்படத்தக்கது ஏதேனும் இருக்குமேயானால், அது ‘நான் சங்க ஸ்வயம்சேவகன் ஆகியுள்ளது இறைவன் திருவுள்ளம். இது பெரிய புண்ணியம்’ என்பது குறித்தேயாகும்.

[தொடரும்]

RSS

Welcome to youtube channel mera guruji

 1. Iss channel me aapko education se related hindi videos milege mera guruji

Education

My Apology to the Victims of Pattabhi Jois

I want to comment on the recent allegations against my teacher, Pattabhi Jois. I have been a strong supporter of the #metoo movement and am encouraged that women are finding a safer and more supportive environment in which to raise the issue of sexual misconduct. 486 more words

Paul Gold

It Never Happened!

The Birthday Party

Vikrant was celebrating his birthday in Seawood Towers Club.It was his 13th birthday,his mom Vinita had left no stone unturned for the party. 2,015 more words