Tags » Hobby

ரஃப் நோட்டு

”கேள்ரா கேளு”
“என்ன கேக்குறது?”
“அவ பேரென்ன, என்ன கோர்ஸ்னு கேளு”
“அமைதியா இருடா…”

97Z. இந்த பஸ்ல ரெண்டு வர்ஷமா போறேன். மூனு ட்ரைவர், நாலு கண்டெக்டர் மாறீட்டாங்க. மாறாதது நான் ரஹீம், அப்றம் அந்த ஆர்ட்ஸ் காலேஜ் பசங்க. இந்த பொண்ணு என்னமோ புது வரவுதான். மூஞ்ச நேருக்கு நேரா பாக்கவே பயமா இருக்கு. இதுல பேர வேற கேக்குறதா?! முன்னாடி சீட்டு வேற… பக்கத்துல இவன் கொடச்சல் குடுத்துட்டே இருந்தான். ரஹீம் இப்படிதான் உசுப்பேத்தி உடுவான். அதெல்லாம் நம்பி எதாச்சும் பன்னா செருப்படி தான் விழும். நாம பாட்டுக்கு இருந்தோமா டைமுக்கு காலேஜ் போய் சேந்தோமானு இருக்கனும். 8:35க்கு போனா கூட வாட்ச்மேன் உள்ள வுட மாட்டான். இப்ப 8:00 மணி தான் ஆது. பிரச்சன இல்ல.

“ரெக்கார்ட் எழுதீட்டியா?”
“எழுதீட்டே…” (வாய் பொழக்கச் சொன்னேன். என் கொட்டாவி காட்டி கொடுத்திருக்கும். நான் தூங்கவே இல்ல)
“இன்னொரு லேப்க்கு அப்ஸர்வேஷன் போட சொன்னாங்களே போட்டியா?”
“அப்ஸர்வேஷனா? இத எப்படா சொன்னாங்க?”
“முந்தா நேத்தி… ”
தலைய சொரிஞ்சுகிட்டே கேட்டான்,
”தூங்கீட்டியா?”

க்லாஸ்ல என்ன நடக்குதுனே தெரியாம அமேரிக்காவுக்கும் அமிஞ்சக்கரைக்கும் அலஞ்சா இப்படி தான். போன வுடனே அந்த மேம் மூஞ்சுல தான் முளிக்கனும். அசிங்கமா கேப்பாங்க.

யோசிச்சுனே போவைல ஒரு ஸ்ட்டாப்ல பஸ்ஸு நின்னுச்சு. அது வரிக்கும் எல்லாம் அமைதியா இருந்துச்சு. அப்பப்போ அந்த ஹாரன் சத்தம். அவ்ளோதான். வெளிய ஒரு கூட்டம், ‘97Z’ங்குற போர்ட பாத்தவுடனே ஒரே விசிலுதான். ஸ்ட்டாப்பிங்ல நிக்குறப்ப ஒரு பயலும் ஏறல. நவுர ஆரம்பிச்சோனே ஒவ்வொருத்தனா ஏறுனானுங்க. கடைசியா ஏறுனவன் ஏதோ மெடல் வாங்குன மாதிரி, “யே..”னு கூவுனான்.

பச்சையப்பா, பிரசிடென்சி பாய்ஸ்; இவனுங்கள பாத்தாலே அப்டியே ஒரு பொறாம வரும். ஒரே ஒரு நோட்ட சுத்திக்கிட்டு வருவானுங்க. அது கூட நிறைய பேத்துக்கிட்ட இருக்காது. என் பைய குனிஞ்சு பாத்தா ஆறேழு நோட்டு இருக்கும். அஸ்ஸெஸ்மெண்டு, அட்டண்டென்ஸு, அரியரு, ரெக்கார்டு, அப்ஸர்வேஷனு, அஸ்ஸைன்மெண்டு, பிரசண்டேஷனு, இந்த வார்த்தைலாம் அவனுங்களுக்கு ஒரு பிரச்சனயே இல்ல. சரி இப்படி கஷ்டப்பட்டு இஞ்சினியரிங்க் படிச்சு நா ஒரு இஞ்சினியர் ஆவேனானா அதுவும் டவுட்டு தான். ஏழு எட்டு சதவிதம் பேருக்குதான் கோர்ல வேல செய்யுறதுக்கு தகுதியே இருக்காம். நியூஸ்பேப்பர்ல படிச்சேன். முக்காவாசி பேரு பேங்க் எக்ஸாம், ரயில்வே எக்ஸாம், யூபீஎஸ்சி எழுதப்போறான். அப்படி கவர்மென்ட் எக்ஸாம் எழுதுறதுக்கு பேசிக் டிகிரி எடுத்துட்டு பொலாமே. இத்தன கேள்வி மனசுக்குள்ள வரும். அவனுங்க ஜாலியா ஒரே ஒரு நோட்ட மட்டும் சுத்தீட்டு வரத பாத்தா.

.
அந்த கூட்டத்துலருந்து ஒரு பையன் மட்டும் எங்க பக்கம் வந்தான். ”பாஸ் ஒரு அஞ்சு டிக்கேட் பிரசிடென்சி…” அப்டீனு காச நீட்டுனான். எதுக்கு ஏன்கிட்ட வந்து கேக்குறான்னு புரியல. ரஹீம பாத்து முளிச்சேன். அவன பாக்கும்போது தான் தெரிஞ்சுது. நாங்க ரெண்டு பேரும் காக்கி சட்ட போட்டிருந்தோம். வீம்புக்குனே வந்து கேட்டான். அவனுங்க பசங்க எல்லாரும் சிரிச்சானுங்க.

“தம்பி என்னப்பா அங்க சத்தம்? பின்னாடி வந்து டிக்கேட்ட எடு..” கண்டெக்டர் கூவுனாரு. இவனும் போய்ட்டான். முன்னாடி வந்து அந்த முன்சீட்டு பொண்ணுட்ட ஒரு நோட்ட குடுத்தான். “இத வெச்சிருங்க, நா வாங்கீக்குறேன்” ஃபூட்போர்ட் அடிக்க போய்ட்டான்.

அதுக்கப்றமும் அவனுங்க அமைதியா இல்ல. பஸ்ஸ தட்டிக்குட்டே வந்தானுங்க. ஏதோ புதுசு புதுசா தாளம் போட்டானுங்க. அந்த மாதிரி மெட்டெல்லாம் சினிமால வந்ததில்ல. காலேஜ் போற அந்த அற மணி நேரம் இவனுங்க தான் பொழுதுபோக்கு. வேடிக்க பாத்துட்டே போனா டைம் போய்டும்.

அந்த பையன் திடீர்னு பாட ஆரம்பிச்சான்,
“ஏன் மைமா பேரு தான்டா அஞ்சல
அவ கபீல்னு பூந்துட்டாடா நெஞ்சுல
அடி உன்னாண்ட தான் நானும் வந்து கெஞ்சல
ஆனா மாட்டிக்குனு தவிக்குறேன்டி லவ்வுல

வாடி நீ வாடி என் குல்பி குல்பி…
வாய கோனையதான் வெச்சுக்கிட்டு எடுக்கலாம் செல்பி…

ஏன் மைமா பேரு தான்டா அஞ்சல
அவ கபீல்னு பூந்துட்டாடா நெஞ்சுல…”

கேக்க அருமையா இருந்துச்சு. ஆனா எந்த நோக்கத்தோட பாடுனான்னு தெரியல. அந்த பொண்ண பாத்துக்கிட்டே இருந்தான். அவ கைல வேற அவனோட நோட்டு இருந்துச்சு. இவ ஏதும் கண்டுக்குற மாதிரியே தெரியல. அவ பக்கத்துல இருந்த ஃப்ரண்டு மட்டும் சிரிச்சுக்கிட்டே இருந்தா. அவங்க காலேஜ் ஸ்டாப் வந்துச்சு. ”அப்பாடா!” அப்டீனு அவ பெருமூச்சு விட்டா. பசங்கெல்லாம் அவங்க காலேஜ்ஜ பாத்தொடனே விசில் அடிச்சானுங்க. ஸ்டாப்பிங்க்ல ஒரு பைய எறங்கல. அதே மாதிரி, பஸ் நவுர ஆரம்பிச்சோனே ஒவ்வொருத்தவனா எறங்குனாங்க. அந்த பாட்டு பாடுன பையன், “ஹே ஹே ஹே”னு கத்திக்கிட்டே கடைசியா எறங்குனான்.

“என்னடி நோட்ட வாங்காமயே போய்ட்டான்”
”ஹ்ம்ம், ஆமா! தொறந்து பாக்குறேன்”

தொறந்து பாத்தா.
“ச்சீசீ…”
நோட்ட சீட்டுலயே வெச்சுட்டு, அவ ஃப்ரண்ட கூட்டீட்டு அடுத்த ஸ்டாப்ல எறங்கீட்டா.
அப்டி என்னதான் அதுல இருக்கு? ஒரு ஆர்வம் எனக்கு.

எங்க ஸ்ட்டாப்பும் வந்திருச்சு.
”வாடா போலாம்”, ரஹீம் கூப்டான்.
”ஒன் செகண்ட்”
டக்குனு அந்த நோட்புக்க எடுத்தேன்.
“ஏன்டா அத எடுக்குற”
“அதுல என்ன இருக்குனு பாக்கணும்”

”தம்பி, இஞ்சினியரிங் காலேஜ் ஸ்டாப்லா எறங்கு”
பஸ் நின்னுச்சு
”வா டா”னு கை புடிச்சு இழுத்தான். பேக்ல அந்த நோட்ட வெச்சுட்டேன்.
ரெண்டு பேரும் எறங்கீட்டோம்.

”மணி 8:25. சீக்கிரம் வா. இல்லனா வாட்ச்மேன் உட மாட்டான்”
“இரு டா ஒரு நிமிஷம்”
பேக்லருந்து அந்த நோட்ட எடுத்தேன்.
புது நோட்டு தான்.

”இப்போ அது தான் முக்கியமா?” ரஹீம் முனவுனான்.
நா கண்டுக்கல.

அதுல என்னதான் இருக்கு?
தொறந்தேன்.

மொதோ பக்கத்துல பெருசா ஹார்ட் சிம்பல் போட்டு, “ஐ லவ் யூ”னு எழுதி இருந்துச்சு. ”நெனச்சேன்”
வேற எல்லா பக்கமும் வெறும் பக்கம்தான்.

“அடப்பாவி, எப்டீலாம் புதுசு புதுசா யோசிக்குறானுங்க பாரே”

“ஆமா டா!”
அந்த மொதோ பக்கத்த மட்டும் கிழிக்க போனேன்.

“ஏன்டா கிழிக்குற?”
அத மட்டும் கிழிச்சுட்டு கசக்கி குப்பத்தொட்டீல போட்டேன்.

“எதுக்கு கிழிச்ச. அந்த பொண்ணுக்காகவா? ரஹீம் கேட்டான்.
“இல்ல, ரேகா மேமுக்கு”
”ரேகா மேமா?”
“அப்ஸர்வேஷன் நோட்டு டா…”

——X——

வரைபடம் – மேரி ஜீனா
கானா பாட்டு –

Hobby

Bali, Indonesia DIY Travel Guide (3D2N)

What’s your life’s favorite spur of the moment?

Was it a random YES to a blind date and you never cared to know who you’re going to meet? 1,306 more words

#writing

BLOG: MAFEX RoboCop

Not really sure if this has been revealed before, but Medicom Toy has revealed details on MAFEX RoboCop 74 more words
BLOG

2017 Central Florida International Auto Show in Orlando Preview

Advertisement graphics courtesy by CFADA

Written by Nathan Wertheimer

Are you in the market looking for a brand new vehicle than this is the place to be on Thanksgiving Holiday Weekend. 629 more words

Event

Enter the Blightlords

The new Death Guard book includes an entry on the Blightlord Terminators (and if that’s not a heavy metal band name, I don’t know what is). 430 more words

Posts

HARI SAAT AKU MENJADI ZOMBIE

Kerap aku bertanya-tanya nama apa yang akan kita sandang sepuluh ribu tahun dari sekarang? Bagaimana manusia-manusia hasil evolusi itu akan menyebut kita setelah kita jadi fosil? 1,650 more words

Penulis

Baby Blankets (crochet)

Some years ago I started my new hobby crocheting. I first started to knit, but well found out real quick, that it’s not my thing. I turned to crocheting, especially because I like to create blankets. 551 more words

Bible