Tags » Jayalalitha

அம்மா கைபேசி திட்டத்தில் செல்போன் மட்டுமல்ல சிம்கார்டுடன் மாதாமாதம் ரீசார்ஜ் செய்யப்படும் -ஸ்டாலினுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலு மணி பதிலடி

அம்மா கைபேசியை கடுமையாக திமுக பொருளாளர் ஸ்டாலின் விமர்சனம் செய்துவரும் நிலையில் அதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதலடி கொடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மகளிர் சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிடும் சமுதாய சுய உதவிக் குழுப் பயிற்றுநர்களுக்கு கைபேசிகள் வழங்கப்படும் என்று அறிவித்து, அம்மா கைபேசி திட்டம் தொடங்கப்படும் என்று முதல்–அமைச்சர் சட்டமன்றப் பேரவையில் விதி 110ன் கீழ் அறிவித்தார்.

இத்திட்டத்தினை ஏளனப்படுத்தி, திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிரையும் கேவலமாகவும் பேசியிருக்கிறார், மு.க.ஸ்டாலின்.

மகளிருக்கு அதிகாரம் அளிக்கப்படுவதை ஒரு போதும் விரும்பாதவர் ஸ்டாலின். அதனால் தான், மகளிர் சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அம்மா கைபேசி வழங்கும் திட்டத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் கேலியும் கிண்டலும் செய்து என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சிம்கார்டு இல்லாமல் கைபேசி வேலை செய்யாது என்பதும் செல்போன் வழங்குவது என்றாலே சிம்கார்டும் சேர்ந்துதான் என்பதும், சிறு பிள்ளைக்குக் கூடத் தெரியும்.

இருந்தாலும், மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் சிறு பிள்ளைக்கும் கீழாக இப்படிக் கேட்கக்கூடும் என்பதால்தான், “சிறப்பு மென்பொருளுடன் கூடிய கணினி மயமாக்கப்பட்ட கைபேசி” என்று அம்மா தனது அறிவிப்பில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறார்.

சிம்கார்டு இல்லாமல் எப்படி கணினி மயம் ஆகும் என்ற அடிப்படை சிந்தனையின்றி கேள்வி கேட்கும் ஸ்டாலினுக்கு இன்னொன்றும் கூற விரும்புகிறேன்.

அம்மா யானையே வாங்கித் தந்திருக்கிறார்கள், அதை கட்டுவதற்கு சங்கிலி வாங்கித் தராமல் போய் விடுவார்களா? என்பதை சுய சிந்தனையுடன் ஸ்டாலின் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அம்மா, கைபேசியுடன் சிம்கார்டையும் வழங்கி, சிறப்பு மென்பொருள் வாயிலாக சுய உதவிக் குழுக்கள் கூட்டம் நடத்துதல், உறுப்பினர் வருகை பதிவு செய்தல், சேமிப்பு, உட்கடன் வழங்குதல், கடன் திரும்பச் செலுத்துதல் போன்ற விவரங்களைப் பதிவு செய்து, தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் மற்றும் சிம்கார்டை ரீசார்ஜ் செய்தல், மாதாந்திர இணைப்புக் கட்டணம் ஆகியவற்றுக்கான செலவினத்தையும் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் வழங்க வழிவகை செய்துள்ளார்கள். எனவே, இதைப் பற்றி மு.க.ஸ்டாலின் கவலைப்படத் தேவையில்லை.

அம்மா செயல்படுத்தும் திட்டங்களால் தன்மானத்துடன் சுய மரியாதையோடு வாழ்க்கை நடத்தும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை பிச்சைக்காரர்களுடன் ஒப்பிட்டு பேசி கேவலப்படுத்தியுள்ள ஸ்டாலினுக்கு தக்க பாடம் புகட்ட அவர்கள் தயாராக உள்ளார்கள் என்பதை மு.க.ஸ்டாலினுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமக்கு நாமே என்று நடைப் பயணம் நடத்துவதும், பயணம் வருகின்ற வழிகளில் டீக்கடைகளில் ஏற்கெனவே எழுதி வைத்த நாடகத்தை அரங்கேற்றுவதும், தனது கட்சிக்காரப் பெண்களை வைத்து மகளிர் சுய உதவிக் குழுக் கூட்டம் நடத்துவதும், தனது கட்சிகாரர்களுக்கு பச்சைத் துண்டு வாங்கிக் கொடுத்து, ஏதோ விவசாயிகள் போல கூட்டம் நடத்துவதும், இதில் எல்லாம் ஏதோ எதேச்சையாகப் போய் பேசுவது போலவும் “ஸ்டாலின் தூக்கி நிறுத்தும் குழு”வின் கட்டளைகளின்படி மறுபேச்சு பேசாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

62 வயதான ஸ்டாலின், ஏதோ தன்னை ஒரு இளைஞரைப் போல வண்ண வண்ணச் சட்டைகள் அணிந்து அதை கால் சராய்க்குள் விட்டுக் கொண்டு, வேடம் போடுவதன் மூலம் மக்களின் மனதைக் கவர்ந்து விட முடியாது. ஒரு போதும் மக்களை ஏமாற்றவும் முடியாது.

கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க.விற்கு முட்டையும், அம்மாவுக்கு 37 தொகுதிகளில் மகத்தான வெற்றியும் மக்கள் பரிசாக தந்தார்கள். அதே போல எதிர்வரும் 2016ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலிலும், அம்மா செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களால் நிச்சயமாய் தி.மு.க.விற்கு முட்டையும், 234 தொகுதிகளிலும் அம்மாவுக்கு மகத்தான வெற்றியையும் மக்கள் பரிசாக அளிப்பார்கள். இது உறுதி என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

அம்மா  செல்போன்,  சிம்கார்டு  மாதாமாதம் ரீசார்ஜ் செய்யப்படும் என்பதை வரவேற்கிறோம். செல்போன்கள் தங்கள் இஸ்டத்துக்கு கட்டணங்களை ஏற்றிக்கொள்கிறார்கள். மொபைல் இன்டர்நெட் கட்டணம் கூட்டிக்கிட்டே போகிறார்கள் அதை குறைப்பார்களா என திமுகவாசிகள்  அமைச்சர் எஸ்.பி.வேலு மணிக்கு மீண்டும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

-ப.இந்திரா பிரியதர்சன்

அரசியல்

Last Bits and Pieces from Chennai

Anywhere in Chennai you see golden statues of the politician MGR. On the banner behind him is the Jayalalitha.  It’s a bit eerie, they’re everywhere. 37 more words

Travel

பெண்களுக்கு ஆண்ட்ராய்டு போன் –முதல்வர் ஜெயலலிதா அதிரடி

வீடுதோறும் இணையம், நடுத்தர குடும்பத்தினருக்கு பங்களா வீடு அறிவித்த முதல்வர் அடுத்து மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு 15 கோடியில் தமிழ் மென்பொருள்கள் அடங்கிய “அம்மா கைப்பேசி திட்டத்தை இன்று 110 விதியின் கீழ் சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இன்று சட்டசபையில் அறிக்கை வாசித்த முதல்வர் ஜெயலலிதா,

மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும் அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுய உதவிக் குழுக்களை அதிமுக அரசு 1991-ஆம் ஆண்டு உருவாக்கியது. மேலும், ஏழை, எளிய, நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005 ஆம் ஆண்டு அதிமுக அரசு உலக வங்கி நிதி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புது வாழ்வுத் திட்டத்தையும் துவக்கி வைத்தது. அதன் பயனாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாய் உருவெடுத்து, இன்று 6.08 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் 92 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைக்க ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டமைப்பின் கீழ் 20 முதல் 25 சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன.

இந்த சுய உதவிக் குழுக்களை மேற்பார்வையிட சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் உள்ளனர். சுய உதவிக் குழுவில் ஊக்குநராக செயல்பட்ட அனுபவமிக்க உறுப்பினர்களே சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்கள் புதிய சுய உதவிக் குழுக்களை அமைப்பதற்கும் பயிற்றுவிப்பதற்கும் துணை புரிந்து வருகின்றனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தாங்கள் நடத்தும் கூட்டங்கள், சந்தா தொகை செலுத்துதல், சேமிப்பு, அவர்களுக்குள் கொடுத்து கொள்ளும் உட்கடன் விவரம், கடனை மீளச் செலுத்துதல் போன்ற நடைமுறைகளுக்கு பல்வேறு பதிவேடுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது.

விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்யவும் அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடவும், தமிழ் மொழியில் சிறப்பு மென்பொருள் ஒன்று உருவாக்கி கணினி மயமாக்கப்பட்ட கைபேசிகள் வழங்கப்படும் அம்மா கைபேசி திட்டம் என்ற புதிய திட்டம் துவக்கப்படும்.

முதற்கட்டமாக, 20 ஆயிரம் சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்மா கைபேசிகளை எனது தலைமையிலான அரசு வழங்கும் என அறிவித்தார்.

இந்நிலையில் நமக்கு நாமே விடியல் மீட்புபயணத்தின் ஒருபகுதியாக திமுக. பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு திமுக ஆட்சியில் சுழல்நிதி வழங்கியதாகவும், ஆனால் இன்று மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு செல்போன் வழங்குவாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் தற்போது செல்போன் இல்லாத நபர்களே இல்லை எனும் நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு கேலிக்குரியது.

செல்போன் கொடுக்கும் ஜெயலலிதா, செல்போனுக்கு சார்ஜ் ஏற்ற மின்சாரம் கொடுப்பாரா? என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தமிழக செய்திகள்

"எனது முகநூல் பக்கம் ஜெயலலிதாவுக்கு பேருதவியாக இருக்கும்!" - மு.க• ஸ்டாலின்

“எனது முகநூல் பக்கம் ஜெயலலிதாவுக்கு பேருதவியாக இருக்கும்!” – மு.க• ஸ்டாலின்

“எனது முகநூல் பக்கம் ஜெயலலிதாவுக்கு பேருதவியாக இருக்கும்!” – மு.க• ஸ்டாலின்

எனது முகநூல் பக்கம் ஜெயலலிதாவுக்கு பேருதவியாக இருக்கும்! என்னுடைய முகநூல் பக்கத்தை

செய்திகள்

பாமகவை யாராவது சின்ன கட்சின்னு சொன்னால் அவர்கள் பைத்தியகாரர்கள் -அன்புமணி ஆவேசம்! எதிர்பார்த்த கூட்டம் வராததால் கடுப்பான காடுவெட்டிகுரு

திருச்சியில் நடத்திய பாட்டாளி மக்கள் கட்சி மாநாடு அக்கட்சி தலைமைக்கு பெரும் அதிருப்தியடைந்துள்ளது. காடுவெட்டி குரு மிக சிரமப்பட்டு கடந்த ஒரு மாதமாக திருச்சியில் முகாமிட்ட இந்த மாநாட்டிற்கு தொண்டர்கள் வருகை மற்ற மாநாடுகளை விட குறைந்துபோனதுதான். வருத்தத்திற்கு காரணம்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மண்டல அரசியல் மாநாடு திருச்சி பஞ்சப்பூரில் நடந்தது. கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் உமாநாத் தலைமை தாங்க மாநில துணை பொதுச்செயலாளர் அருள் மணி வரவேற்றார். மாநாட்டு மேடைக்கு அன்புமணியும் ராமதாஸும் வரும்வரை மாநாட்டின் முன்பகுதியை தவிர, பின்னால் எல்லா நாற்காலியும் காலியாக கிடந்தது. இதை உணர்ந்து கடுப்பான காடுவெட்டி குரு, தனது ஆதரவாளரான வைத்தி, செந்தில்குமார் ஆகியோரை அழைத்து கடிந்துகொண்டே இருந்தார்.

மாநாடு துவங்கியது, மேடையேறிய ராமதாஸ் கூட்டம் காலியாக இருந்ததை பார்த்து அமைதியாகவே இருந்தார்.

இந்த வருத்தம் மேடையில் பேசிய குருவின் பேச்சியில் இருந்தது. எப்போதும் வீர ஆவேசமாக பேசும் குரு, நாளுவரிகளின் தனது வார்த்தையை முடித்துக்கொண்டார்.

மாநாட்டில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்–அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் எம்.பி,

பாட்டாளி மக்கள் கட்சி சிறிய கட்சி அல்ல. தமிழகம் முழுவதும் மக்களின் ஆதரவை பெற்று உள்ளது. தமிழகத்தில் 50 ஆண்டு கால ஊழல் ஆட்சிகள் தொடர வேண்டுமா? மாற்றத்தை விரும்பும் பா.ம.க. ஆட்சி வேண்டுமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் மாற்றத்தை தந்தால் இந்த அன்புமணி முன்னேற்றத்தை தருவான். எனக்கு 5 ஆண்டு காலம் ஆட்சி செய்வதற்கான ஒரு வாய்ப்பை தந்து பாருங்கள். நாங்கள் நல்ல திட்டங்களை செயல்படுத்துவோம்.

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு கட்சியும் வரைவு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது இல்லை. மக்களின் கருத்துக்களை கேட்டு வருகிறோம். வருகிற ஜனவரி மாதம் மக்களின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். கல்வி, மருத்துவம் இலவசம் எங்களால் ஒரு பைசா கூட ஊழல் இல்லாத ஆட்சியை தர முடியும். தி.மு.க. ஊழலின் ஊற்றுக்கண் என்றால் அ.தி.மு.க. ஊழலின் சுனாமி.

கடந்த சிலவருடங்களுக்கு முன் இதே திருச்சி சிறையில் அய்யா ராமதாஸ், 11நாட்கள் அடைக்கப்பட்டார். அதன்விளைவாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருதய மாற்று அறுவை சிகிச்சை வரை செய்யப்பட்டு உயிர் பிழைத்தார்.  அதன்பிறகு நடந்த கலவரங்களுக்கு நமக்கு 100கோடி ரூபாய் அபராதம் விதித்தார்கள். ஆனால் அடுத்து சிலமாதங்களில் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 24நாட்கள் இருந்தார். அவருக்கு 100கோடி அபராதம் விதிக்கப்பட்டது..

ஒரு சொட்டு கூட மது இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத ஆட்சி, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை இதுதான் எங்கள் லட்சியம். அனைவருக்கும் கல்வியையும், மருத்துவ சேவையையும் இலவசமாக வழங்குவோம். நாங்கள் வழங்கும் இலவச கல்வி கட்டாய கல்வியாக, தரமான கல்வியாக இருக்கும். மாவட்டத்திற்கு ஒரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அமைப்போம்.

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்சனைகளை தீர்க்க ஒரே ஒரு முறை மட்டும் பிரதமருக்கு கடிதம் எழுதுவேன். அந்த கடிதத்திற்கு பதில் இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் திரட்டிக்கொண்டு டெல்லிக்கு சென்று பிரதமர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம். அதற்கும் நடவடிக்கை இல்லை என்றால் பாராளுமன்றத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து போராடுவோம்.

எங்களால் ஒரு பைசாகூட ஊழல் இல்லாத ஆட்சியை தர முடியும். தி.மு.க. ஊழலின் ஊற்றுக்கண் என்றால், அ.தி.மு.க. ஊழலின் சுனாமி. ஒரு சொட்டு கூட மது இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத ஆட்சி, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை இதுதான் எங்கள் லட்சியம். அனைவருக்கும் கல்வியையும், மருத்துவ சேவையையும் இலவசமாக வழங்குவோம்.

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா, விதி எண் 110ன் மூலம் 166 முறை 600 திட்டங்கள் அறிவித்துள்ளார். அதன்மதிப்பு 1 லட்சத்து 44 கோடி. ஆனால் அதில் ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டம் மட்டுமே இங்கு நிறைவேற்றப்பட்டு உள்ளன. இனி அது 110 விதியில்லை 111, பட்டை நாமம் விதிதான். சர்வாதிகார அட்சி செய்யும் ஜெயலலிதா, மக்களை பற்றி சிந்திப்பதில்லை. பிறகு எப்படி அவருக்கு மக்களின் அவலம், தேவை புரியும், சர்வாதிகார ராணியின் ஆட்சிக்கு முடிவுகட்ட மாற்றம் தேடும் மக்கள் பா.ம.க.விற்கு வாக்களிக்க வேண்டும் என்ற அன்புமணி,

தமிழகத்தின் முக்கியமான பிரச்னைகளுக்கு இப்போது உள்ள ஜெயலலிதா கடிதம் எழுதுவதுபோல, கடிதமோ, இல்லை சட்டசபை தீர்மானங்களோ நிறைவேற்ற போவதில்லை, மாறாக காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்னைகளை தீர்க்க, நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே ஒரு முறை மட்டும் பிரதமருக்கு கடிதம் எழுதுவேன். அந்த கடிதத்திற்கு பதில் இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும், எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் திரட்டிக்கொண்டு டெல்லிக்கு சென்று பிரதமர் வீட்டு முன் போராட்டம் நடத்துவோம். அதற்கும் நடவடிக்கை இல்லை என்றால், நாடாளுமன்றத்திற்கு வெளியே தரையில் அமர்ந்து போராடுவோம்.

எனக்கு வசனம் பேசி நடிக்க தெரியாது. உண்மையை பேசுகிறேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லண்டனில் உள்ளதைபோல அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துவேன். அ.தி.மு.க. அரசு இட்லி விற்கிறது, உப்பு விற்கிறது, தண்ணீர் விற்கிறது, சாராயம் விற்கிறது. இதுதான் அரசின் வேலையா? வசனம் பேசி மக்களை கருணாநிதி ஏமாற்றினால், ஜெயலலிதா நடித்து ஏமாற்றுகிறார். அவர்கள் ஏமாற்றியதுபோதும் நீங்கள் ஏமாந்தது போதும்.

சாகும்போது சங்கரா சங்கரா என்பதை போல 4 ஆண்டுகால முடிவில் இருக்கும் ஜெயலலிதா, இன்னும் ஆறுமாதத்தில் அடுத்த தேர்தல் வர உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறார். அதற்கு 200 கோடி விளம்பரம். இந்த மாநாட்டில் 2 லட்சம் கோடி முதலீடு வந்ததாக சொல்கிறார்கள். அது வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தம்தான். 30க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, இந்தியாவிற்கு கொண்டு வந்த முதலீடே 1 லட்சத்து 70 ஆயிரம் கோடிதான். ஆனால், இந்தம்மா இங்க உட்கார்ந்துக்கிட்டு இரண்டு நாளில் 2 லட்சம் கோடி முதலீடு வந்ததாக சொல்கிறார்கள். இதெல்லாம் ஏமாற்றுவேலை மக்கள் ஏமாறக்கூடாது என முடித்தார்.

மாநாட்டில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  பேசியதாவது:–

தமிழகத்தில் மாற்றம் வந்தால்தான் முன்னேற்றம் வரும். அந்த முன்னேற்றத்தை அன்புமணியால் மட்டுமே கொடுக்க முடியும். அன்புமணி மத்திய மந்திரியாக இருந்த போது புகையிலைக்கு எதிராக சட்டம் கொண்டு வந்தார். தமிழகத்தில் இளைஞர்கள் குடித்து சீரழிவதை தடுக்க நான் கடந்த 35 வருடங்களாக போராடி வருகிறேன். இதனை வேறு யாராவது செய்தது உண்டா?

முன்னாள் அமைச்சர் வேலுவுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன். அவர் மட்டுமல்ல எம்பியா இருந்தவர்களுக்கு எல்லாம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். ஒரு நாள் இரவு ஒரு கிராமத்திற்கு சென்று தங்கி, சாப்பிட்டு, அங்கேயே படுத்திருக்க வேண்டும் என்று சொன்னேன். இதுவரை எந்தக் கட்சியாவது இதுபோன்று செய்திருக்கிறார்களா

வேலு ஒரு கிராமத்திற்கு சென்று இந்த ஊரில் கதவு இல்லாத, மின்சார வசதி இல்லாத வீடு இருக்கிறதா என்று கேட்டார். இருக்கிறது என்றதும், அந்த வீட்டிற்கு சென்றார். அந்த வீட்டில் கட்டில் கூட கிடையாது. அமைச்சர் வந்திருக்கிறார் என்று வேறொரு வீட்டில் இருந்து கட்டில் கொண்டு வந்து போட்டார்கள். அங்கேயே தங்கினார். என்ன வேலு சாப்பிட்டீங்க என்றேன். ஏதோ ஒரு கஞ்சி கொடுத்தாங்க, குடிச்சேன் என்றார். அது ஒரு அருந்ததியர் வீடு. இதை நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை. பத்திரிகைகளும் அப்போது இல்லை. கேமரா, பத்திரிகைகளை அழைத்துப்போய் இதுபோன்று செய்கிற பழக்கம் இல்லை

5 வருடங்களுக்கு முன்பு நான் ஈரோடு சென்றிருந்தேன். அப்போது சாப்பாட்டு நேரம் வந்தவுடன் சாப்பாடு வருகிறது என்றனர். நான் கேட்டேன். நம்ம கட்சியின் ஏழ்மையான தொண்டர். குடிசையில் இருக்கிற தொண்டர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டு, அங்கு சென்றோம். குடிசைக்குள் குனிந்துதான் செல்ல வேண்டும். என்ன இருக்கு என்றோம். பழைய கஞ்சி இருக்கிறது என்றதும், அதை வாங்கி சாப்பிட்டோம். இதையெல்லாம் நாங்க என்ன விளம்பரத்துக்காகவா செய்தோம். நம்ம தொண்டர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக செய்வது இதுதெல்லாம்.

அப்ப செய்ததை இப்ப நான் செய்தால் மற்றக் கட்சிக்காரர்கள் காப்பியடிப்பார்கள். காப்பியடிக்கிறார்களே அதனை மறைமுகமா அடிச்சா பரவாயில்லை. ஈயடிச்சான் காப்பியடிக்கிறார்கள். தேர்தல் அறிக்கையை காப்பியடிக்கிறார்கள். அதனை காப்பியடிச்சாலும் ஒன்றும் நடக்காது. நாங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். ஒரு குழந்தை தாயின் அரவணைப்பில் இருந்து அதனுடைய கல்வியின் முழு செலவினையும் ஏற்று, அதன் பிறகு 88, 90 வயது ஆகும் வரை பாதுகாக்க தேவையான பட்ஜெட்டை போட்டுவிட்டோம்.

தரமான கல்வியும், பயிற்சியும் தான் நாட்டிற்கு முன்னேற்றத்தை கொடுக்கும். இதன் மூலம் அதிக உற்பத்தி ஏற்பட்டு விலைவாசி குறையும். எனவே நாங்கள் கல்வியில் அதிக முதலீடு செய்வோம். அது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். இதன் மூலம் தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக மாறும்.

தமிழகத்தில் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் காமராஜர். 12 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்தார். படிக்க வழியில்லாத குழந்தைகளுக்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். தொழிற்சாலைகளை திறந்தார். அணைகள் கட்டினார். அவர் படிக்க சொன்னார். இவர்கள் குடிக்க வைத்தார்கள்.

ஊழலின் ஒட்டு மொத்த உருவம்தான் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள். தமிழகத்தில் ஆற்று மணல், தாது மணல் எல்லாம் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்தினால் தமிழகத்தை சொர்க்க புரியாக மாற்றலாம். எனவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். மாற்றத்திற்காக காத்து இருக்கும் மக்கள் பா.ம.க.வை ஆதரிக்க வேண்டும் என்றார்.ராமதாஸ் பேசி முடிப்பதற்கு வந்த மீதிக்கூட்டம் வெளியேறியது.

காடுவெட்டி குருவோ பாதியில பெய்த மழை தூறலா போயிடுச்சே.. கொஞ்சம் அடிச்சு பெய்திருந்தா அய்யா மனசாவது சந்தோசப்பட்டுயிருக்கும் என்று அங்கலாயத்துக்கொண்டார். போலிஸாரோ சீமான் மாநாடு நடத்திய அதே இடத்தில் கூட்டம் ஆனால் அன்புமணிக்கு கூடிய கூட்டம் 9,000 தான் என்றும் மருத்துவர் ராமதாஸ் பேசும் 1,500பேரு தான் இருந்தாங்கன்னு மத்திய மாநில உளவு போலிஸ் ரிப்போட் அனுப்பியிருக்காங்க. அன்புமணிக்கோ நாம் முதல்வராக இன்னும் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும் என்பதை திருச்சி கூட்டம் உணர்த்தியிருக்கும்.

அன்புமணி ராமதாஸ் பேசும்போது காலியாக கிடக்கும் நாற்காலிகள்

அரசியல்

ஹாட்ரிக் அடித்த முதல்வர் ஜெயலலிதா - சிக்ஸர் அடிப்பாரா ?

யாரும் எதிர்பாக்காத வண்ணம் சில முடிவுகளை சட்டென அறிவிப்பதில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இணை ஜெயலலிதா மட்டும்தான்.

தனது நிழலாய் வந்த செங்கோட்டையனுக்கு சட்டென கல்தா கொடுக்கப்பட்டதில் இருந்து, பிரமாண்டங்களில் ஜெயலலிதாவுக்கு விழா எடுத்த செந்தில்பாலாஜியை சென்னையிலிருந்து கரூருக்கு அனுப்பிய வரை எல்லாம் அவர் செயல்பாடுகள் அதிரடிதான். அப்துல்கலாம் இறுதி சடங்கிற்கு உடல்நிலையை காரணம் காட்டி செல்லாதவர்,  கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடியா இந்த லேடியா என ஆவேசமாக முழங்கியவர், சிலமாதங்களில் இந்திய பிரதமர் மோடியை வீடு தேடி வர வைத்தார்.

இது ஒருபக்கம் என்றால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் சட்டசபை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. ஆனால் தமிழ்நாடு சட்ட மன்ற நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவது இல்லை என விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்ப, பதிலுக்கு  சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்ய அரசிடம் பணம்மில்லை என நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தது தமிழக அரசு. கடந்த மூன்று நாட்களில் அறிவித்த திட்டங்களில் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட நான்கு ஆயிரம் கோடியை தாண்டும்.

கடந்த செப்டம்பர் 14ந்தேதி தமிழ்நாட்டிலுள்ள 12,524 கிராம ஊராட்சிகளும் ஆப்டிகல் பைபர் மூலம் இணைக்கப்பட்டு தமிழக அரசின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள், தங்கள் கிராமங்களில் இருந்தே இணையம் மூலமாக பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும். 3,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தை மத்திய அரசின் பங்களிப்புடன் தமிழக அரசே செயல்படுத்தும்.

அடுத்து நடுத்தர மக்களை குறிவைத்து சென்னையில் குறைந்த வருவாய்பிரிவு மக்கள் வாங்கக் கூடிய விலையிலான வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன், சென்னை அம்பத்தூரில் அனைத்து வசதிகளுடன், இரு படுக்கை அறைகளுடன் கூடிய 2,300 குடியிருப்புகள் தோராயமாக 380 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும். இதேபோல சென்னையை தொடர்ந்து, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில், 674 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவில் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவு மக்களுக்காக 2,800 குடியிருப்பு அலகுகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும் என்று கடந்த 16ந்தேதி சட்டசபையில் அறிவித்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா,

 மூன்றாவதாக யாரும் எதிர்பார்க்காத வகையில், இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தும் வகையில் வலுவான தீர்மானத்தை இந்தியாவே ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உள்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டுவர வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா தனித்தீர்மானம் ஒன்றை அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றியுள்ளார்.

நேற்று வரை கடுமையாக ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த வைகோ, முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியிருக்கும் தீர்மானம் 7கோடி தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளது. அவருக்கு வரலாறு வாழ்த்துச் சொல்லும் என்று கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மனதார பாராட்டியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நெருக்கமாக உள்ள  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தீர்மானத்தை  வரவேற்று, தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுத்த முதல்-அமைச்சர் மற்றும் அனைத்துக் கட்சியினரையும் பாராட்டியுள்ளார். ஏன் திமுக தலைவர் கருணாநிதிகூட  முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானத்திற்கு  வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால் இதை எதிர்முகாமில் இருப்பவர்கள் செய்திருந்தால் ஜெயலலிதா வரவேற்று இருப்பாரா என்றால் இல்லை.

எதிர்கட்சியினரை தனது கட்சி நிர்வாகிகள், மிக கேவலமாக விமர்சனம் செய்தபோது பேரானந்தப்பட்டவர், அதனால்தான் நாவுக்கரசராய் வலம்வந்த நாஞ்சில் சம்பத் பேச்சுக்கலை நாசமாக போச்சு என்பது தனிக்கதை.

ஜெயலலிதா. இப்படி தன்னை விமர்சித்தவர்களை கூட புகழ வைக்கும் கலையை ஜெயலலிதா மிக சிறந்த முறையில் கற்றுள்ளார்.  இதையை கருணாநிதி செய்திருந்தால் கடிதம் தீர்மான போட்டு என்ன பயன் எதிர்ப்புகளை காட்ட வேண்டும் என்றிருப்பார்கள்.

அடுத்த தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே  மீதமிருக்கும் நிலையில் இந்த திட்டங்கள் எப்போது செய்து முடிக்கப்படும், அதற்கான கால அளவு என்ன என்பதையெல்லாம் குறித்து அறிவிப்பு இல்லை. முழுக்க முழுக்க அடுத்த தேர்தலை குறிவைத்து மக்களை குறிவைக்கும் இந்த அறிவிப்புகள், ஜெயலலிதாவுக்கு நற்பெயரை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல் ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்து காந்திருந்து நடக்கவில்லை என்னும் உச்சகட்ட கோபத்தில் போராட்டம் ஆர்ப்பாட்டம் என கையிலெடுத்தும் மக்களின் மனநிலையை உணராமல் இன்னும் ஜெயலலிதா மதுஒழிப்பு பிரச்சினையில் அமைதியாக உள்ளார். அதையும் செய்தால் அரசியல் அரங்கில் சிக்ஸர்தான்.

செய்வாரா ஜெயலலிதா ?

-ர.மகிழ்நன்

அரசியல்

நல்லா வாயில வருது… மீண்டும் இளங்கோவனின் சர்ச்சைக்குரிய பேச்சு வீடியோ

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் எங்கு எதை பேசினாலும் ஏதாவது சர்ச்சையாகிவிடுகிறது.

கடந்தமுறை தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி – தமிழக முதல்வர் ஜெயலலிதா உடனான சந்திப்பு குறித்து இளங்கோவன் சர்சசையான பேசிய பேச்சு அவருக்கு எதிரான போராட்டங்களையும், வன்முறைகளையும் இந்த தமிழகம் பார்த்துவிட்டது. குறிப்பாக மதுரையில் இளங்கோவன் மீது செருப்பு ,முட்டை வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தது. அதன் பிறகும் இளங்கோவன் பேச்சை குறைக்கவில்லை தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இன்று திருச்சியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீண்டும் தன்னுடைய நையாண்டி பேச்சால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் ….இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை மோடியின் மத்திய அரசு நிரகாரித்துள்ளதை கண்டித்து செப்டம்பர் 18ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறிய அவர் தொடர்ந்து கூறும்போது…..

கர்நாடக மாநிலத்தில் ஒரு பிரச்சினை என்றால் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து பிரதமர், மத்திய அமைச்சர்களை சந்திக்க செல்கின்றனர். ஆனால் தமிழக முதல்வரோ இது குறித்து கடிதம் எழுதுவதோடு கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார். அதிமுகவிற்கு மக்கள் சாதகமாக இல்லை எனவே வரும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்கும். முதலீட்டாளர் மாநாட்டில் 2 லட்சம் கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது என்பது பெரிய விஷயம் இல்லை. முதலீட்டாளாகள் மிரட்டப்பட்டே மாநாட்டிற்கு அழைக்கப்பட்டனர். மாநாடு நடத்துவதை விட முதலீட்டாளர்களிடம் லஞ்சம் கேட்காமலும், 24 மணி நேரம் தடையில்லை மின்சாரம் தருவதற்கு உறுதி கூறினாலே போதும் என்று கூறினார்.

  • இலக்கியன்
அரசியல்