Tags » Kannadasan

Sleep, Dear girl, sleep!

Being born as a girl,
Sleep is only at two instances;
The first at birth; The next at death.
If you miss your sleep now, 414 more words

Transalation

ஏலே பித்துக்குளி -அகஶ்த்தா

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா, இந்த அகஶ்த்தா
அகஶ்த்தா ன்னா என்னடா? ‘

“அதுவா அதுபெரிய
கப்பல்…
கடலுக்கு மேலேயும் போகும்
கீழேயும் போகும்!
நமக்கு எதுக்கடா
அந்த வம்பெல்லாம்!
என்னதான் நடக்கட்டும்
நடக்கட்டுமேன்னு
கண்ணதாசன்
கவிதையை படித்து
விட்டு
சிவனேன்னு கிட:
‘ என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமேதன்னாலே வெளிவரும் தயங்காதே – ஒருதலைவன் இருக்கிறான் மயங்காதே!
பின்னாலே தெரிவது அடிச்சுவடுமுன்னாலே இருப்பது அவன் வீடுநடுவினிலே நீ விளையாடுநல்லதை நினைத்தே போராடு! (என்ன)
உலகத்தில் திருடர்கள் சரிபாதிஊமைகள் குருடர்கள் அதில் பாதிகலகத்தில் பிறப்பது தான் நீதி –
மனம்கலங்காதே மதி மயங்காதே! (என்ன)
மனதுக்கு மட்டும் பயந்துவிடுமானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடுஇரண்டினி லொன்று பார்த்துவிடு! ‘
புரிஞ்சதோடா பித்துக்குளி? “

General

ஏலே பித்துக்குளி - கண்ணதாசன்

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா, கண்ணதாசனுக்கு கடவுள் நம்பிக்கை எப்படி வந்ததுன்னு சொல்றேன்னே, நேற்று? ‘

“கண்ணதாசனும் அன்பில் தர்மலிங்கமும் Dalmiapuram போராட்டத்திலே Trichy Jail லே அடைக்கப்பட்டிருந்தார்கள்.

கண்ணதாசன் எப்பொழுதும் அந்த சிறையிலுல்ள மற்ற கைதிகளை பற்றிய விவரங்களை உற்று நோக்கி வந்தார்! 26 more words

ஏலே பித்துக்குளி

Kannadasan..

ஏலே பித்துக்குளி!

‘ஏன்டா இந்த ௧ண்ணதாசன் கவிதைகளை படித்து இ௫க்கியோ? ‘

“அவருடைய கருத்துக்கள் நிரைந்த கவிதையில் ஒன்று..

அனுபவமே கடவுள்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்!

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்!

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்!

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்

ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

இவரைப்போல் ஒரு ௨யர்ந்த கவிஞர் பாரதிக்குப்பின் பிறந்ததேயில்லை..

புரியர்தோடா

பித்துக்குளி! ”

கண்ணதாசன் பேச்சு :

Kannadasan

The World was his Music

Not resting on his laurels, MSV always looked ahead

Vamanan

Unlike most music directors of his time and age, M.S. Viswanathan (MSV) was a public figure and a musical icon. 1,604 more words

Tamil Cinema

எந்த கந்தர்வனோ வந்து பிறந்தான்

மெல்லிசை தனக்கவன் நாதன், இந்த 

மேதினி புகழ் விஸ்வநாதன் 

கல்லையும் கரைத்திடும் கீதன் – அவன் 

கலைமகள் அனுப்பிய தூதன் 

தமிழின் சுவை-அதனை, இந்த 

புவியின் திசை அனைத்தும் – ஏழு 

சுரங்களில் உரைத்தான் – தமிழ் 

இதயங்கள் அனைத்தையும் கரைத்தான் 

வெள்ளி நிலாவது போலே – அவன் 

வெற்றிகள் வளர்ந்ததனாலே 

துள்ளி குதித்தது இசைதான் – அமுத

தோரணம் காற்றின் மீசைதான் 

தமிழ் போகிற வழியில் அவன்

சுரம் போகிற கதியில்  

தேன் மலர் சோலைகள் மணக்கும் – அங்கு

தீங்கனிகள் மிகுந்தினிக்கும்

சொல்லுக்கு சுகம்தரும் சித்தன் – அவன் 

ஸ்ருதிலய ஞானத்தில் புத்தன் 

அள்ளும் நெஞ்சை அவன் மெட்டு – அதன் 

அடி ஒவ்வொன்றிலும் மின்னல் வெட்டு 

நிலையாம் அவன் பரிசே அவன் 

கலைஞானத்தின் வரிசை – பா

வரிசை படம்தந்தானே – அதன் 

பாடல் ஒவ்வொன்றும் செந்தேனே..

மலர்களைப் போல் சொற்கள் விளங்கும் – அதில் 

ஒளிய்மயமான் மேட்டுத் துலங்கும் 

நவரச நாடகம் நடக்கும் – அதில் 

புது இசை அணைகளை கடக்கும் 

கடல் போல் தினம் விரியும் – அவன் 

இசையா கரை அறியும் – அது 

நாரத வீணையின் நயமோ – இந்த 

பூமியின் புது அதிசயமோ 

கவியரசன் வந்து அமர்வான் – இந்த 

இசையரசன் அதை உணர்வான் 

ஓடிவரும் பெரும் பாட்டு – அதில் 

கூடிவரும் புது மீட்டு 

எது வந்தது முன்னே என 

எவர் சொல்லிட முடியும் 

நாள் ஒவ்வொன்றும் இப்படி விடியும், அதில் 

நல்லிசை நாடெங்கும் படியும் 

கட்டைகள் கருப்பு வெள்ளை, இவன் 

மெட்டுக்கள் ஒக்கும் வானவில்லை 

கற்பனையின் ஊற்று இவன்தான், எந்த 

கந்தர்வனோ வந்து பிறந்தான் 

விளையாடிடும் விரல்கள் தமிழ் 

ஒளிவீசிடும் சுரங்கள் – இவன்

அகல விரிந்திடும் வானோ – இசை 

அமுதம் தரும் காமதேனு ..

Tamil Cinema