Tags » Law College

எது உண்மையான மகிழ்ச்சி ! நிஜத்தில் செய்து காட்டிய திருச்சி முன்னால் சட்டக்கல்லூரி மாணவர்கள்.

திருச்சி சட்டக்கல்லூரியில் 1990 முதல் 1995 ஆண்டு வரை படித்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 வருடம் கழித்து திருச்சியில் எஸ்.ஆர்.எம். விடுதியில் மீண்டும் சந்தித்தார்கள். இதுல என்ன புது விசயம் இருக்குன்னு கேக்குறீங்களா?

பொதுவாக முன்னால் மாணவர்கள் சந்திப்பு என்பது மிகவும் நெகிழ்ச்சியாகவும், உருக்கமாகவும் குடும்பத்தோடு சேர்ந்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ரொம்ப ஜாலியாக இருக்கும்.

ஆனால் கொஞ்சம் மாற்றி, சட்டம் படித்தவர்கள் இவர்கள், சமூக அக்கறையோடு யாருக்கோ, முகம் தெரியாத யாருக்கும் உதவி செய்வதை விட,  தன்னுடன் படித்த சக மாணவன் எப்படியிருக்கிறான், அவர்கள் குடும்பம் எப்படியிருக்கிறது, அவர்கள் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து அவர்களில் யாரேனும் கஷ்டத்திலோ, நஷ்டத்திலோ இருந்தால் அவர்களின் துக்கத்தில் பங்கெடுக்க  வேண்டும் என்று முடிவு செய்து அவர்கள் தொடங்கிய இந்த செயல் தமிழ்நாட்டில் எந்த வழக்கறிஞர்கள் சங்கமும் இதுவரை செய்திராத , செய்ய முடியாத செயலை செய்து இருக்கிறார்கள் என்பது தான் மிக முக்கியமான விசயம்,

இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் திருச்சி நீதிமன்றத்தை சேர்ந்தவர்கள்.

அவர்கள் நம்மிடம் பேசும் போது எங்கள் வகுப்பில் படித்த மாணவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் அழைப்பு கொடுத்த போது படித்த 78 பேரில் இன்றைய நிகழ்ச்சிக்கு 67 பேர் கலந்து கொண்டார்கள். இதில் முக்கியமாக வெளிநாட்டில் இருக்கிற எங்கள் வகுப்பு தோழர் இந்த நிகழ்ச்சிக்காக வந்திருப்பது எங்களுக்கு பெரிய மகிழ்ச்சியை தந்தது.

இப்படி ஒவ்வொரு வகுப்பு தோழர்களையும் அழைக்கும் போது தான் எங்களுக்கு ஒரு உண்மை தெரிந்தது. எங்களோடு படித்த நண்பன் விருதுநகரை சேர்ந்த நண்பன் சுந்தராஜன் சிலவருடங்களுக்கு முன்பு கேன்சரால் இறந்து போனது தெரிந்து அவருடைய குழந்தை படித்துக்கொண்டுயிருப்பது தெரிந்ததும். எங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது.

இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அந்த குடும்பத்தினருக்கு  ஏதாவது செய்ய வேண்டும் என்று எங்களுடைய சக தோழர்களிடம் நம் தோழனின் குடும்பத்தினருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அறிவிப்பு கொடுத்ததும் அந்த குழந்தைகளுக்கு ஒவ்வொன்றிக்கு அவர்களின் எதிர்கால தேவைக்கா தலா 1 இலட்ச ரூபாய் அவர்களுடைய பெயரில் திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வங்கியில் வைப்புநிதியாக கொடுக்கிற அளவு பணம் சேர்ந்தது எங்களுக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சியளித்து. அவர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்து உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். என்று அன்புடன் அழைத்தோம்.

நாங்கள் படிக்கிற காலத்தில் எங்களுக்கு படிப்பும் வாழ்க்கையும்  சொல்லிக்கொடுத்த ஆசான்கள் எஸ்.என்.பரமசிவன் ( அப்போது திருச்சி சட்டக்கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் மோகன்கிருஷ்ணபுரம், நீலாமூதீன், சி.சொக்கலிங்கம்             ( தற்போது வேலூர் சட்டக்கல்லூரியின் முதல்வர்)  மற்றும் மனோகர் சார் ஆகியோர் முன்னிலையே அவர்களுக்கு கொடுப்பதை நினைத்து உள்ளபடியே எங்களுக்கு மனநிறைவை தந்தது என்றார்கள்.

நிகழ்ச்சியில் பேசின சட்டக்கல்லூரி முன்னால் பேராசிரியர் ஒருவர் பேசும் போது சட்டம் படித்த  வழக்கறிஞருக்கு அசோசியேசன் சேமநலநிதியிலிருந்து  சரியாக பண கட்டியிருந்தால் 5,25,000 ரூபாய் கொடுப்பார்கள், இதில் ஏதேனும் சந்தா கட்ட தவறியிருந்தால் இந்த தொகையும் கொடுக்க மாட்டார்கள், இல்லை என்றால் அவர் இருக்கும்  பார் அசோசியேசன் மூலமாக ஏதாவது உதவி செய்வர்கள் அவ்வளவு தான்.

ஆனால் ஒரு தனிப்பட்ட முறையில் தன்னுடைய படித்த சக வழக்கறிஞர் மாணவனுக்கு இப்படி உதவி செய்து இருப்பது பெரிய விசயம் என்று மனதாரபாராட்டினார். இது மற்ற வழக்கறிஞர்கள் அமைப்புக்கும், மாணவர்களுக்கு முன் உதாரணமான விசயம். அதுவும் என்னுடைய மாணவர்கள் என்பது எனக்கு நான் செய்த பாக்கியம் என்றார்.

ஏதோ வந்தோம், இருந்தோம், களித்தோம், சுவைத்தோம், என்று இல்லாமல் தன்னுடைய சக தோழனின் சுக துக்கங்களில் பங்குபெற்று அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திய திருச்சி சட்டக்கல்லூரி 1990-2000 வருட மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்கள்.  என்றால் அது மிகையல்ல,

இந்த குரூப்பில் படித்த மாணவர்கள் நீதிபதிகளாகவும், அரசுவழக்கறிஞர்களாகவும், தொழில்அதிபர்களாகவும், பஞ்சாயத்து தலைவர்களாகவும், ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் மாறின சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் தங்கள் சக தோழர்களுடன் பகிரிந்து கொண்டனர்.

தமிழக செய்திகள்

Lawyer or Lair!!

Rules are meant to be broken.

So, know the Rules well, so you can Break them effectively!! ;)

Quirky hoodies for Lawyers at campussutra

A prestigious Educational Institute in Delhi

Want to get admission in the best LAW and Degree college, and do other career oriented courses in Delhi. Well, create your own selection criteria and focus on those colleges which have great educational value. 409 more words

Best Law Colleges In Delhi Ncr

Simple steps to find the best law college and Degree College

Whenever a turning point after 12th and other degree courses to select the best college. Then enquiries start but these enquiries confuse you them even more. 292 more words

Best Law Colleges In Delhi Ncr

THE MARKERS OF A LAW STUDENT

I have always been skeptical as to how law school will change me because come on, one needs a serious commitment to become a fully functioning adult which I am sure I don’t have. 760 more words

Sometimes Posts Don't Just Fall In Some Cateogary

Career as Criminal Lawyer

Criminal law deals with various kinds of criminal cases such as robbery, murder, theft, assault, black marketing, domestic violence, sexual harassment, forgery, counterfeiting, frauds and cybercrime and many more. 549 more words

Education

Is this building really weak?

The story of the historic Law College building, headquarters of the Dr. B. R. Ambedkar Law University, gets more and more messy by the day. 702 more words

Chennai's Current Affairs