தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.

கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில் மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான பிரளயம் காத்த விநாயகர் கோவில் உள்ளது.

இங்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று தேனாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

அதன்பிறகு பத்திகையாளர்களிடம் பேசும்போது,

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக

சர்வதேச விசாரணை நடத்த இந்தியா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சட்ட மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன்.

கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விட மறுக்கிறது. இந்த பிரச்சனையில் மத்திய அரசு தலையிட்டு காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விரைவில் கும்பகோணம் மகாமக விழா நடக்க உள்ளது. இது 2வது கும்பமேளா  எனவே இந்த விழா சிறப்பாக நடைபெற இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என மதுரை ஆதீனம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.