Tags » Murugan

SKC - May 04, 2016

கற்றதனால் என் துயரும்

கடுகளவும் குறையவில்லை

பெற்றதனால் என் தாயும்

பெருமையுமே கொள்ளவில்லை என்

சிற்றறிவுக் கெட்டாத

சிவஞானம் தேடியிங்கு

உற்றதையும் உறவினையும்

ஒருசேரத் தவிர்த்து

நற்றவா! உன் மலரடியை

நான் வேண்டிக் கிடந்தேனே.

காக்கும் கடவுள்

கணேசன் இவனென்றே

நோக்கும் திசையெல்லாம்

நுண்ணுணர்வில் நானறிய

தாக்கும் வெவ்வினைகள்

தளர்ந்தே தாமகல எங்கும்

நீக்கமற நிறைந்தோனை

நினைவிறுத்தல் இக்காலம்!

வெந்ததைத் தின்று

வேகும் உடம்பினை

சொந்தமென எண்ணி

சுகவாழ்வு வாழ்ந்து

நொந்த என் மனதின்

நோய்தனை தீர்க்கும்

கந்தனவன் அருளால் நற்

கதி பெற்று உய்ந்திலனே.

Siva

Rali - Apr 30, 2016

ராலி க. நி. தெக்காலம்  #156

வாயில் பொய்ச் சொல்

    பேசி ஒரு நாளும்

கோயில் வாசல் மிதியாது

    வாழ்ந்து பின்

நோயில் படுத்துச் சாவார்

    போலிராது ராலி

பேயின் முலையுண்டானை

    போற்றுவ தெக்காலம்?

ராலி க. நி. தெக்காலம்  #157

சொந்த புத்தி கொண்டு

    சாத்திரம் கற்காது

எந்த நற்பெரியோர்

    சொல்லும் கேளாது

மந்தமாய்ப் புண்ய

    மின்றிச் செத்திராது

கந்தன் கழலடி ராலி

    கருதுவ தெக்காலம்?

ராலி க. நி. தெக்காலம்  #158

இச்சை கொண்டு அற்பப்

    பொருள் சேர்த்துக்

கொச்சை இழிமொழி

    அற்பர் சங்கம் சேர்ந்து

மிச்சமீதியிலாது புண்ய

    மழித்துச் செத்திராது

பச்சை மாமலையை

    ராலி பணிவ தெக்காலம்?

Ekkalam

Rali - Apr 26, 2016

ராலி க. நி. தெக்காலம்  #147

சாதி பேசும் சாத்திரம் இகழ்ந்து

    துறந்து உண்மை

வேதியரைத் தூற்றி தீயோரைக்

    கீழோரைப் போற்றி

மீதியிலாது புண்யம் அழித்து

    வீணே சாகாமல் ராலி

ஆதிசுடர்ச் சோதியை அன்புடன்

    அண்டுவ தெக்காலம்?

ராலி க. நி. தெக்காலம்  #148

இன்று தேடிப் பொன்

    பொருள் நன்று சேர்ப்போம்

என்று நரை கண்டும் ஓடித்

    தேடிப் புண்யம் நற்செயல்

என்று ஏதும் செய்யாது

    சாவார் போலிராது ராலி

குன்று தோறும் ஆடுவோனைக்

    கும்பிடுவ தெக்காலம்?

ராலி க. நி. தெக்காலம்  #149

பருகாத மது பானமில்லை

    பழகாத இழிதொழிலில்லை

அருகாமை திருக்கோயில்

    திருவாயில் மிதித்ததில்லை

கருகாதோ உடம்பு ஒரு நாள்

    என்பது மறந்து இராது

கருகாவூர்க் கற்பக நாதனை

    ராலி கருதுவ தெக்காலம்?

Ekkalam

Suresh - Apr 24, 2016

தந்தைக்கு மந்திரம் ஓதிப் பொருளுரைத்த

எந்தையை யான் மறக்க ஏலாமோ

முந்தைய சிவனவன் சேவல் கொடியினை

ஏந்திய குகனவன் அக்கினிக் குஞ்சாமே

Murugan

SKC - Apr 23, 2016

உற்றவனே! உடன்பிறப்பே!

ஒருபொழுதும் நீயிங்கு

சற்றும் மனந் தளராது

சரமழையாய்க் கவிதை

நற்றமிழில் எழுத

நான் விழைந்தேன் விறகு

விற்றவனின் அருளாலே

வித்தகனே! நீ வாழி!

சிவனவன் நல்லருட்

சிந்தையில் திளைத்து

உவகை யுடனே

உள்ளில் இருத்தி

புவனந் தன்னில்

புண்ணியந் தேடி

பவசரவண பாலனை

மனச்

சுவடினில் மறந்து தமிழ்

சொல்வதும் முறையோ?

Siva

Kartikeya in art : different depictions

      Kartikeya or Murugan is the son of Shiva and Parvati. He is the God of war and also called Skanda and Subramaniam.

Murugan is highly revered in Tamil Nadu and Sri Lanka. 897 more words

Sculpture Of India

SKC - May 03, 2016

நச்சினார்க் கினியனை

நல்வேதத் தலைவனை

மெச்சி அவர்தலை மீதும்

மீளாத் துயர்  தீர்க்க

உச்சியில் ஓரடியும்

உலகளந்த வாமனை

பச்சிளம் பாலனை

பைந்நாகக் கண்ணனை

கச்சியம் பதி உறைக்

கணிகண்ணன் சீடனை

துச்சமெனக் கருதாமல்

தொழுதிங்கு பணிவேனே

ஓரிரு மாதரவர்

உடனமர்ந்த சுந்தரனை

ஈரிரு வேதமதின்

இணையில்லா நாயகனை

மூவிறு முகந்தன்னில்

முகிழ்த்த நகையோனை

ஆறிரு தோள்மீதும்

அன்பர் துயர் ஏற்பவனை

கூறுதமிழ் காவலனை

குன்றமர்ந்த பாலகனை

ஆறுபடை வீடுதனில்

அருள்புரிந்து உறைவோனை

பாருலகில் நிதம் நினைந்து அவன்

பதமலர் பணிவேனே.

Vishnu