Tags » New Concept

பாபுவின் சேட்டை !!!

கதைல சின்ன ட்விஸ்ட் -பாகம் 6

பாபு கண்ணுக்கு தெரிந்த உருவத்தை தன் நண்பன் ராமுவிடம் கூற முயன்றான்.ராமு அருகிலிருக்கிறான் என்ற தைரியத்தில் வாய் திறந்து
“மாப்ள .. மாப்ள ..அங்க பாரு ஏதோ ஒன்னு வெள்ளையா தெரியுது…”
என்று கத்தினான்.

அவன் கத்தியது அவனுக்கு மட்டுமே கேட்டது. அவனுடைய வார்த்தைகளை பயம் விழுங்கிக் கொண்டது. அவனுடைய உள்நாக்கு, வெளிநாக்கு என எல்லா நாக்கும் உலர்ந்து போய்விட்டிருந்தது.

அந்த பயத்திலும் அந்த வெள்ளை உருவத்தை உற்றுப் பார்த்தான் பாபு. அந்த உருவம் பார்ப்பதற்கு மனித உருவம் போல தோன்றியது. அதன் முகம் அரைபட்டதைப் போல மிகவும் நசுங்கிப் போயிருந்தது.எழுந்து நின்ற உருவம் ஒரு கையை அவனை நோக்கி நீட்டியது.

அப்போது அந்த வழி ஓரமாக நின்றிருந்த கம்பத்தின் மேல் உட்கார்ந்திருந்த ஆந்தை ஒன்று, அங்கிருந்த அமைதியை கிழிப்பது போல், வேகமாய் அலறியபடி பறந்தோடியது.
ஆந்தையின் அலறலைக் கேட்டு திடுக்கிட்ட ராமு,
பாபுவை பார்த்தபடி
“டேய் வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது.பாலம் முடியபோது,வண்டியைத் தள்ளு ஸ்டார்ட் ஆகுதான்னு பார்ப்போம்…” என்றான்.

சில்லென்று வீசிக்கொண்டிருந்த இரவு நேரக் காற்று மட்டும் ராமு சொன்னதை காதில் வாங்கிக் கொண்டது போல அவன் முகத்தை வருடி விட்டு போனது. தான் சொன்னதை எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், சிலை போல பாபு நின்றிருப்பதை பார்த்த ராமுவுக்கு கோபம் ஏற்பட்டது.

“டேய்… நட்டநடு ராத்திரியில, வெட்டவெளியில மாட்டிகிட்டிருக்கோம்… வண்டியத் தள்ளுடாங்கறேன்…”
அப்போதும் பாபு திரும்பவில்லை.
“டேய் பாபு உங்கிட்டதாண்டா சொல்றேன்.. அங்க என்னடா பார்வை…” என்றபடி பாபு பார்த்த இடத்தை ராமுவும் பார்த்தான்.

அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. கோபம் தலைக்கேறவே…
“டேய்…”
என்றபடி பாபுவின் முதுகில் அடித்தான்.
அப்போதும் அவன் அசையாமலிருக்கவே…
“டேய்.. பாபு … உன்னைத்தாண்டா…”
என்றபடி அவனைப் பிடித்து உலுக்கினான்.
“என்னடா..?”
என்றபடி பாபுவின் முகத்தைப் பார்த்த ராமு அதிர்ந்து போனான்.

சில்லென்று காற்று வீசிக் கொண்டிருதாலும் பாபுவின் முகம் குப்பென்று வியர்த்துப் போயிருந்தது. அவனது கண்கள் பீதியில் இருந்ததை அந்த இரவிலும் தெளிவாகத் தெரிந்தது.

“என்னடா மச்சி … என்னடா..?” என்றான் ராமு

பாபு : “மாப்ள .. அங்க ஏதோ வெள்ளையா ஒரு உருவம் தெரியுது ..?” என்று சொன்னானே தவிர, அந்த திசையிலிருந்து அவன் பார்வையை திருப்பவே இல்லை.அவன் சொன்ன இடத்தில் பென் டார்ச் அடித்துப் பார்த்த ராமுவிற்கு ஒன்றும்தெரியவில்லை.

ராமு : “டேய்… இதுக்குத்தான் பேய் படம் எல்லாம் பாக்கவேண்டாம் சொன்னேன் . அங்க ஒண்ணுமே இல்ல… ஏண்டா உளர்ற… நீ முதல்ல வண்டியைத் தள்ளு…”

என்றபடி வண்டியில் உட்கார்ந்து கொண்டான் ராமு.

பாபு : காத்து இல்லாம எப்படி போகபோறோம்டா..

ராமு : இருக்குற நெலமைய பாத்த,உன்ன மாதிரி எனக்கும் எதுனா ஆய்டும் போலா..டுப்லேஸ் டயர் தான் ..எப்படியாவது ஸ்டார்ட் பண்ணிட போதும்.நீ தள்ளு சீக்கிரமா..உன்ன பாத்த தான் பயம் ஜாஸ்தி ஆகுது எனக்கு :(..

பயத்துடன் திரும்பிய பாபு சற்றே ஆறுதலடைந்து டிவிஎஸ்ஸை தள்ளினான். வண்டி ரோட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது.ஒரு பத்தடி தூரம் தாண்டிய பின்பு அதுவரை தூங்கிக் கொண்டிருந்த வண்டி, திடீரென விழித்துக் கொண்டதைப் போல “விர்ர்ர்ரும்…” என்றபடி ஸ்டார்ட் ஆனது.
ராமுக்கு அப்போது தான் உயிர் வந்தது போலா இருந்தது ..

யப்பா சாமி ,பொழச்சோம்டா ..

ராமு : “அப்பாடா… ஸ்டார்ட் ஆயிடுச்சி, வந்து உட்காருடா பாபு …” என்று சொன்னான்.என்னடா பண்ற ,என்று சொல்லியபடியே பின்னால் திரும்பிப் பார்த்தான்.

மறுபடியும் பாபு அதே இடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு ராமு கோபத்தின் உச்சிக்கே சென்றான்.

“டேய்… இப்பவே மணி 12.25 ஆகுது. எப்படா வீடு போய் சேருவோம்னு நானே தவிச்சிகிட்டு இருக்கிறேன். சும்மா அந்த இடத்தையே பார்த்துகிட்டு நிக்கற…வந்து வண்டியில ஏறு…”
என்று அதட்டினான் ராமு.

அதட்டலை உள்வாங்கிய பாபு
“மாப்ள … அங்க வெள்ளையா ஒண்ணு இருக்குது … அது என்னையே பாக்குது…” என்றான்.

ராமு : “டேய்… வீணா எங்கிட்ட மிதிவாங்காத… அங்க ஒண்ணுமே இல்ல…. முதல்ல வண்டியில ஏறு… ஏண்டா இவ்வளவு நேரம்னு எங்க அப்பாவும் , அம்மாவும் என்னை திட்டப் போறாங்க…”
உன்னோட விளாயாட்டு தனத்தால என்ன ஆச்சு பாருடா …

என்றபடியே வண்டியை அவன் அருகில் கொண்டுவந்து , அவனருகே நிறுத்திய ராமு
“ஏறுடா வண்டியில…” என்றான்.
ராமுவின் வார்த்தையில் கோபம் கொப்பளித்தது.

வண்டியில் ஏறி உட்கார்ந்தான் பாபு.பிறகு ராமு டிவிஎஸ்ஸை வேகமாகக் கிளப்பினான்.டயர் காத்து இல்லாத காரத்தினால் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் ஓட்ட தொடங்கினான்.

மறுபடியும் அந்தப்பக்கம் பார்த்த பாபு, அங்கே அந்த உருவம் இல்லாதது கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டான்..

–தொடரும்

கதைல சின்ன ட்விஸ்ட் -பாகம் 5

Friends

பாபுவின் சேட்டை !!!

கதைல சின்ன ட்விஸ்ட் -பாகம் 5

ராமு : என்னடா அச்சு? விழுந்தது பூவா ? தலையா?? சொல்லுடா??
பாபு : ரெண்டுமே இல்லடா..சுண்டுன வேகத்துல காசு எங்க போச்சுன்னு தெரிலடா ……
(சிரித்தபடியே சொன்னான்) 11 more words

Friends

பாபுவின் சேட்டை !!!

கதைல சின்ன ட்விஸ்ட் -பாகம் 4

டேய் ராமு என்னடா ஆச்சு.எதுக்கு அமைதியா இருக்கா…..?
சொல்லுடா..
சொல்லுடா என்னடா ஆச்சு…யாருடா இப்போ உனக்கு போன் பண்ணது??
டேய் பேசுடா…
இல்ல பாபு ஒரு தொழில் அதிபர் போன் பண்ணாரு. 13 more words

Friends

பாபுவின் சேட்டை !!!

கதைல சின்ன  ட்விஸ்ட் -பாகம் 3

என்னடா ஆட்டத்தை பாருன்னு சொல்ற.பாத்து மச்சி ,ஊர் மக்கள் ஒரு மாதிரி,டவுசர்யோட மரத்துல கட்டிபோட்டு உன்ன அடிச்சிடுவாங்க மச்சி.உனக்கு என்ன பத்தி தெரியும்ல,நான் சென்னைல இவளோ பெரிய ஆள்னு.அதா பாத்தேனே நீச்சல் அடிக்க சொன்னதுக்கு நீ பண்ண அலபரையே.. 9 more words

Friends

பாபுவின் சேட்டை !!!

கதைல சின்ன ட்விஸ்ட் -பாகம் 2

மறு நாள் (வெள்ளிகிழமை),ராமு குளிபதர்காக ஏரி கரை செல்லாம் என்று பாபுவிடம் சொல்ல,பாபுவோ டேய் இது என்னடா ஏரி!! :D நீ சென்னைல பீச்-லா குளிச்சது இல்லையே..நான் செம்ம மாஸ் காட்டுவேன் தெரியுமா :P. 9 more words

Friends

பாபுவின் சேட்டை !!!

கதைல சின்ன ட்விஸ்ட் -பாகம் 1

செமஸ்டர் லீவ் விட்டாச்சு :D.சென்னைல அடிக்குற வெயிலுக்கு எவன் வீட்டுக்கு போய் ஜாலியா இருக்கலாம் என்று யோசனையோடு இருந்தான் பாபு.அப்போ தான் பாபுவின் பள்ளி நண்பன் ராமிடம் இருந்து போன் வந்தது. 11 more words

Friends

Inner Work - Our Hotel Self & Finding A More Permanent Residence

The purpose of my work on this site (my writing & Soul research), is to help cultivate the feeling of home.

my work here is to also help others link with their soul and to help find new ways to keep that flow going. 1,053 more words

Soul