Tags » Singeetham Srinivasa Rao

9-நினைத்தாலே இனிக்கும் – எஸ்.சந்திரமௌலி

தான் இயக்கிய ‘ராஜபார்வை’ மற்றும் ‘பேசும் படம்’ அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.

பார்க்காத, பேசாத கமல்!

புதுமைக்கு ‘ஜே’!

நான் இந்தப் படத்தில் கண் பார்வை இல்லாத ஒரு வயலின் கலைஞன்” என்று கமல்ஹாசன் சொன்னதுதான் படத்தின் தொடக்கப்புள்ளி. ‘ஹீரோவுக்கு கண் பார்வை தெரியாதுன்னு சொன்னா, ஜனங்களுக்குப் பிடிக்குமா?’ என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, நம்ம படத்துல ஹீரோ வழக்கமானவரா இல்லாம, கொஞ்சம் வித்தியாசமானவரா இருக்கட்டுமே!” என்று சொன்னார் கமல்ஹாசன்.

ஆரம்பத்திலிருந்தே ‘ராஜ பார்வை’ ஒரு வித்தியாசமான தமிழ்ப் படமாக இருக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். ஏனெனில் அது அவருடைய நூறாவது திரைப்படம். சொந்தக் கம்பெனிக்கு கமல்ஹாசன் உருவாக்கிய எம்பளமே மிகவும் புதுமையாக இருந்தது.

சினிமாவையும், கிரியேடிவிடியையும் இணைத்து ஒரு மனிதனின் தலையிலிருந்து ஃபிலிம் சுருள் வருவது போல அவர் அதை உருவாக்கினார்.

கிரியேட்டிவ் ஜீனியஸ்

கமல்ஹாசன், அனந்து, நான் மூவரும் உட்கார்ந்து கதை விவாதம் செய்தோம். டிஸ்கஷனில், கமல்ஹாசனின் நண்பர்களான பால குமாரன், சந்தானபாரதி இருவரும் பங்கேற்றார்கள். அப்போது, கமல் சொன்ன ஒரு விஷயம் மிகுந்த ரசனையோடு இருந்தது.

சப்தஸ்வரங்கள் என்பது சாதாரண மனிதன் கேட்டு ரசிக்கும் இசை. ஆனால், ஒரு பார்வையற்றவனைப் பொறுத்தவரை அவை வானவில்லின் ஏழு வண்ணங்களுக்கு நிகரானவை” என்று குறிப்பிட்டார்.

கமல்ஹாசன் ஒரு கிரியேடிவ் ஜீனியஸ் என்பதை கதை விவாதத்தின்போது மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருந்தார். ‘ராஜபார்வை’ அவருடைய ரசனையின் உச்சம்; கலையின் அத்தனை சாத்தியங்களையும் செய்து பார்த்துவிட விரும்பினார்.

பாசிடிவ் கேரக்டர்

கமல்ஹாசனின் கேரக்டரே மிகவும் வித்தியாசமானது. பொதுவாக, சினிமாக்களில் வருகிற பார்வையற்றவர்களின் கதாபாத்திரங்கள், ரொம்ப சென்டிமென்டலாகப் பேசி, பார்வையாளர்களின் அனுதாபத்தை ஈர்க்கும் வகையில் தான் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், கமல் ஏற்று நடித்த ரகு என்ற பார்வையற்ற இளைஞன் கேரக்டர் ரொம்பவும் பாசிடிவான கேரக்டர். சுதந்திரமாகச் சிந்திக்கக்கூடிய, தன் குறைபாட்டையும் தாண்டி, மற்ற மனிதர்களைப் போல வாழ விரும்புகிற, வாழ்கிற தைரியமான ஒரு முன்னுதாரணமான பாசிடிவ் கேரக்டராகவே அமைக்கப்பட்டது.

டெடிகேஷன்

‘ராஜ பார்வை’யில் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் உண்டு. ஒரு நிஜமான இசைக்கலைஞர் அந்தந்தக் காட்சிகளில் எப்படி வயலின் வாசித்திருப்பாரோ, அப்படியே தத்ரூபமாக வயலின் வாசிப்பார் கமல்.

அது எப்படி சாத்தியமானது? இந்தப் படத்துக்கு அவசியமாக இருந்ததால், கமல்ஹாசன், நிஜமாகவே வயலின் கிளாசுக்குப் போய்  சுமார் இரண்டு மூன்று மாதங்கள் வயலின் கற்றுக்கொண்டு வந்தார். படத்தில் அவர் வயலின் வாசிக்கும் காட்சிகளில், அவர் என்ன வாசிப்பது என்பதைப் படத்தின் இசை அமைப்பாளர் இளையராஜாவோடு கலந்தாலோசித்து, அதற்குரிய நோட்ஸ்களை எழுதி வாங்கி, பிராக்டீஸ் செய்துகொண்டு, அந்தக் காட்சிகளில் அவர் வயலின் வாசித்தார். இதுவும் அவரது டெடிகேஷனுக்கு ஒரு உதாரணம்.

கேரக்டர் தேர்வில் கச்சிதம்

படத்துக்கு ஹீரோயின் தேடி மும்பைக்குச் சென்று இரண்டு மூன்று புதுமுகங்களைப் பார்த்தோம். ஆனால் யாரும் திருப்திகரமாக இல்லை. நான் எடுத்துக்கொண்டிருந்த கிராமிய சப்ஜெக்ட் தெலுங்குப் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தவர் மாதவி. அவரே ‘ராஜபார்வை’ ஹீரோயின் நான்ஸி கேரக்டருக்குப் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியதால், மாதவிதான் ‘ராஜபார்வை’க்கு ஹீரோயின் என்று முடிவு செய்தோம்.

அதே போல ‘ரொம்ப ஜோவியலான தாத்தா ரோலுக்கு யார் பொருத்தமாக இருப்பார்?’ என்று விவாதித்தபோது, பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. வழக்கமான குணச்சித்திர நடிகராக இல்லாமல், வேறு யாராவது புதுசானவராக இருந்தால், அந்தக் கேரக்டருக்கு வேல்யு அதிகரிக்கும் என்று நினைத்தோம்.

அப்போது சட்டென்று நினைவுக்கு வந்தது எல்.வி.பிரசாத் பெயர். எவர் ஸ்மைலிங் முகம். அவர் தான் மாதவிக்குத் தாத்தா என்பது அந்தக் கணமே முடிவானது.

முழு அர்ப்பணிப்பு

வழக்கமாக, ஒரு காட்சியை இப்படி எடுக்க வேண்டும், அதில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிப்பும் இப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பில் பாதி அளவுக்கு நடிகர்கள் நடித்தாலே, காட்சி சிறப்பாக வந்துவிடும்.

ஆனால், கமல் இந்த விஷயத்தில் ரொம்பவே மாறுபட்டவர். அவரிடம் காட்சியை விளக்கிவிட்டால், அந்தக் காட்சியைத் தன்னுடைய நடிப்பு மற்றும் பங்களிப்பின் மூலமாக வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு சென்று விடுவார்.

‘ராஜபார்வை’யை அப்படித்தான் வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றார் கமல். இன்றும் அதன் காட்சிகளும் பாடல்களும் மக்கள் மனத்தில் நிற்கிறது என்றால், அதற்குக் காரணம் கமலின் முழு அர்ப்பணிப்புதான்.

(இன்னும் இனிக்கும்)

—எஸ். சந்திரமௌலி  (நன்றி கல்கி)

Kamal Haasan

The Bane of Traditional Copyright Law - Dikkatra, "Dikkatra Parvathi" - Part II

In my previous post, Neither did I speak much about ‘Dikkatra Parvathi’, the damsel in distress, nor did I speak about ‘Copyright Law’. Infact, I spoke nothing about Copyright Law, at all. 1,096 more words