Tags » Slokam

மன்னிப்பு கேட்க ஒரு ஸ்லோகம்

करचरण कृतं वाक्कायजं कर्मजं वा ।

श्रवणनयनजं वा मानसं वापराधं ।

विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व ।

जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भ॥

Kara-Caranna Krtam Vaak-Kaaya-Jam Karma-Jam Vaa| 130 more words

Slokam

புராணங்களும் ஸ்லோகங்களும்

18 புராணம் 5 லட்சம் ஸ்லோகம்

வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும் . அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், கதைகளாக எழுதினார்கள். அவையே புராணங்கள்.

வேதத்தின் “கண்ணாடி’ என்று புராணங்களைச் சிறப்பிப்பர். “புரா’ என்றால் “முற்காலத்தில் நடந்தது’ என பொருள். வேதங்களைப் போலவே புராணங்களும் பிரம்மாவிடம் இருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்ய உபநிஷத், மத்ஸ்ய புராணங்கள் கூறுகின்றன. மொத்தம் 18 புராணங்கள் உள்ளன.

18 புராணங்களிலும் 5,09, 500 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஸ்கந்த புராணம் பெரியது. 1,81,000 ஸ்லோகங்கள் கொண்டது. மார்க்கண்டேய புராணம் சிறியது. 9000 ஸ்லோகங்களே உள்ளன.

புராணங்களில் ஸ்லோகங்களின் எண்ணிக்கை

ஸ்கந்த புராணம் – 1,81,000
பத்மபுராணம் – 55,000
நாரத புராணம் – 25,000
வராஹ புராணம் – 24,000
வாயு புராணம் – 24,000
மத்ஸ்ய புராணம் – 24,000
விஷ்ணு புராணம் – 23,000
கருட புராணம் – 19,000
பிரும்ம வைவர்த்த புராணம் – 18,000
பாகவத புராணம் – 18,000
கூர்ம புராணம் – 17,000
பவிஷ்ய புராணம் – 15,500
அக்னி புராணம் – 15,000
பிரம்மாண்ட புராணம் – 12,000
லிங்க புராணம் – 10,000
பிரம்ம புராணம் – 10,000
வாமன புராணம் – 10,000
மார்க்கண்டேய புராணம் – 9,000

தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777

Slokam

க்ருஷ்ணாஷ்டகம்

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |
தேவகீ பரமானந்தம் க்றுஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

என்ன சொல்கிறார்  ஆதி சங்கரர்? எல்லா  லோகங்களிலும்  கிருஷ்ணன்  தான்  ஜகத்குரு.   ஏனென்றால்  அவன்  ஜகத் காரணம்  என்பதால்!  ஹே!  கிருஷ்ணா, தேவகி  வசுதேவருக்கு மட்டுமே  கண்ணுக்கு கண்ணாகப்  பிறந்தவனா  நீ? கண்ணா என்று உளம் மகிழ்ந்து உன்னை  நெருங்கும் எண்ணற்ற  கோடி உயிர்களுக்கும்  அல்லவோ  சொந்தம்!. தேவகிக்கு மட்டுமா நீ  பரம ஆனந்தம் ?  எங்கள்  சந்தோஷத்தை எழுத யாராலும் முடியாது என்பதால் தேவகியின் சந்தோஷத்தோடு மட்டும் சங்கரர்  நிறுத்திக்கொண்டிருக்கிறார்..  கம்சன்,  சாணூரன்  என்று  வெளியே  உலவிய அரக்கர்களை கொன்றது போதாது.  அவர்களைக்காட்டிலும்  பலம்  வாய்ந்த மல்லர்கள், ராக்ஷசர்கள், காமம், குரோதம்,  மோகம், மதம் என்றெல்லாம்  பெயரோடு  எங்களுக்குள்ளே  மறைந்திருக்கிறார்களே. அவர்களையும்  மர்த்தனம் செய்யேன்? )

அதஸீ புஷ்ப ஸங்காஶம் ஹார னூபுர ஶோபிதம் |
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

அழகுக்கு  அழகாய், மலர்களைத் தூவி, மாலை கட்டி  சூடி, கையில் காலில்  எல்லாம்  பளபளக்கும் தங்க  நகைகள்  பூட்டி, மரகத, மாணிக்க  வைர வைடூர்ய  கற்கள்  பதித்த கைவளை குலுங்க ஒரு குழந்தை காணப்பட்டால்  எந்த மனம் தான்  கொள்ளை போகாது? எங்கள் மனம் மட்டும்  என்ன  கல்லோ? கிருஷ்ணா, உன்னை நாங்கள்  எங்கள் இதயத்தில் பூட்டி வைத்துள்ளோம்   —  சிக்கெனப் பிடித்தோம்.

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசந்தர னிபானனம் |
விலஸத் குண்டலதரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

(குட்டி கிருஷ்ணா,  மூர்த்தி சிறிதானாலும்  உன் கீர்த்தி பெரிது, நீ  ஜகத் குரு ,  உன்  கரிய, சுருண்ட, கேசத்தை,  வர்ணிப்பதா, காதில் ஆடும்  குண்டலத்தை மெச்சவா? பூரண சந்திரன் தோற்கும் பிரசன்ன முக மண்டலத்தைப் பாடுவதா? ஒன்றுமே தெரியாததால்  பேசாமல் இருந்து  வெறுமே  கை கூப்பி  உன் காலடியில்  விழுந்து என்னை உனக்கு  அர்பணிக்கிறேன், என்னுள் எல்லாமே நீ  தானே ? )

மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம் |
பர்ஹி பிம்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம்  வந்தே ஜகத்குரும் ||

(ஹே, லோக சம்ரக்ஷண  மூர்த்தி, ஜகத்குரு, எங்கிருந்து கற்றாய், உன் அழகிய மயில் பீலி சூட?  அதனால் உன்  புன்சிரிப்பின் அழகு  கூடியதா?  அல்லது  உன்னைச் சுற்றி கமகமக்கும்  நீ  சூடிக்கொண்டிருக்கும்  மந்தார  புஷ்பம்  தான்  எங்களது மனத்தைக் கொள்ளை கொண்டதா? யாருக்கையா விடை தெரியும் ?)

உத்புல்ல பத்மபத்ராக்ஷம் நீல ஜீமூத ஸன்னிபம் |
யாதவானாம் ஶிரோரத்னம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்||

ஆதி சங்கரரால் தான் இப்படியெல்லாம்  வர்ணிக்கமுடியும்.  சாதாரணன் எடுத்துச்  சொல்ல முடியுமா?  கண்களோ  அன்றலர்ந்த தாமரை மொட்டுக்கள், நிறமோ, நீலமேகஸ்யாமம். யாதவ குல திலகம் ! நீ  பக்தர் குலத்திற்கும் ஜகத்திற்கும்  தலைவன், தெய்வம், குரு அல்லவா?)

ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் பீதாம்பர ஸுஶோபிதம் |
அவாப்த துளஸீ கந்தம்  கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

சங்கரர் துவாரகை கிருஷ்ணனை நினைவு கூறுகிறார். யாரைக் காண்கிறார்? ருக்மணியுடன் சல்லாபிக்கிறான் மாயக்ரிஷ்ணன். அவனது மஞ்சள் நிற பட்டாடை கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்கிறதே. அவர்கள் இருக்கும் அந்த பகுதியே துளசியின்  ஈடற்ற  நறுமணத்தை காற்றில் பரப்பி  நெஞ்சையு நிரப்புகிறதே.  கிருஷ்ணா உனக்கு  நமஸ்காரம்)  

கோபிகானாம் குசத்வம்த குங்குமாங்கித வக்ஷஸம்
ஶ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

(கோபி கிருஷ்ணா,உன்னைச் சுற்றிலும் எங்கும் உபனிஷத்துக்களே உருவெடுத்த கோபிகள், மார்பில்  ஸ்ரீ  (லக்ஷ்மி) குடிகொண்ட  ஸ்ரீ னிவாசா, உன் கையில் என்ன ஒரு வில், அதற்குப் பெயர் தான்  சார்ங்கமா?  அதனால்  உலகை ரக்ஷிக்கும் நீ  சாரங்கபாணியா ?)

ஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் |
ஶங்கசக்ர தரம் தேவம் கிருஷ்ணம்  வந்தே ஜகத்குரும் ||

லோகநாயகா, சாஷ்டாங்க நமஸ்காரம் உனக்கு. அதென்ன உன் மார்பில்ஏதோ பளிச்சென்று  தெரிகிறது?  ஒ, அது ஸ்ரீ வத்ஸம் அல்லவோ,  இப்போது புரிகிறது. ஆம்  அது தான், வண்ண  மலர் மாலைகளுக்கிடையே  கண்ணில் தோன்றி மறைந்தது . உன்னுடைய காம்பீர்யம், அழகு, நேர்த்திக்கேல்லாம் ஒரு விதத்தில் உன் கரங்களில்  மிளிரும் பாஞ்சஜன்யம் என்கிற நாமம் கொண்ட  சங்கமும், சுதர்சனம் என்கிற சக்ரமும் கூட என்று யார் வேண்டுமானாலும் யோசிக்காமல்  சொல்ல முடியும்.

கிருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய யஃ படேத் |
கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ||

ஆதி சங்கரர் இந்த கிருஷ்ணாஷ்டகத்தை சும்மா விருதாவாக  எழுதிவிட்டு அதோடு விடவில்லை. டாக்டர் மருந்து பெயர் மட்டும்  எழுதி கொடுக்காமல்  அதை எப்போது, எப்படி  சாப்பிட வேண்டும்  என்று சொல்வது போல  இந்த  கிருஷ்னாஷ்டகம் எட்டையும்,  காலை பொழுது விடிந்தவுடன், எவன் விடாமல்  சொல்கிறானோ, பஜிக்கிரானோ அவன் சொல்லொணா ஜன்மங்களில் எல்லாம் செய்து சேர்த்து வைத்திருக்கும் சகல பாபங்களும்  ”சட்” எனத் தீரும்  என்கிறார். நினைத்தால் போய்விடும்  என்கிறார். சென்னை வெள்ளம், அதனால் விளைந்த கஷ்டங்கள் அனைத்தும் அப்படித்தான் தீரவேண்டும்.

Sanathana Dharmam

போஜனத்திற்கு முன்பும், சமையல் செய்யும் போதும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

“அன்னபூர்ணே ஸதாபூர்ணே ஸங்கர ப்ராண வல்லபே |

ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி க்ருபாகரி |

அன்னம் ப்ரஹ்மரஸோவிஷ்ணு: போக்தா தேவோ மஹேஸ்வர: |

இதி ஸ்மரன் ப்ரபும் ஜான: த்ருஷ்டிதோஷை: நலிஷ்யதே ||

Bhojanam