Tags » Social Message

கண்ணாடி சொல்லும் பாடம்...

🖼கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🖼கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம்!”
கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும்.அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
🖼கண்ணாடி சொல்லும் மூன்றாவது பாடம்!”
ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…!

அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்…

Padithathil Pidithathu

அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்...

சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ”மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது” என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.
அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை. சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல்.
என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.
‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ”நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன்.
ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

கடவுளும் அந்தத் தந்தையைப் போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும் என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப் போல் இருக்கிறார்.

Padithathil Pidithathu

மகாபாரதம் உணர்த்தும் வாழ்க்கை பாடம்...

மோகத்தில் வீழ்ந்துவிட்டால்
மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
சாந்தனுவாய்….

சத்தியம் செய்துவிட்டால்
சங்கடத்தில் மாட்டிடுவாய்
கங்கை மைந்தானாய்..

முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்
பாண்டுவாய்….

வஞ்சனை நெஞ்சில் கொண்டால்
வாழ்வனைத்தும் வீணாகும்
சகுனியாய்…
ஒவ்வொரு வினைக்கும்
எதிர்வினை உண்டு
குந்தியாய்…

குரோதம் கொண்டால்
விரோதம் பிறக்கும்
திருதராஷ்டிரனாய்….

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள்
பிள்ளைகளை பாதிக்கும்
கௌரவர்கள்…

பேராசை உண்டாக்கும்
பெரும் அழிவினையே
துரியோதனனாய்…
கூடா நட்பு
கேடாய் முடியும்
கர்ணனாய்…

சொல்லும் வார்த்தை
கொல்லும் ஓர்நாள்
பாஞ்சாலியாய்..

தலைக்கணம் கொண்டால்
தர்மமும் தோற்கும்
யுதிஷ்டிரனாய்…..

பலம் மட்டுமே
பலன் தராது
பீமனாய்….
இருப்பவர் இருந்தால்
கிடைப்பதெல்லாம் வெற்றியே
அர்ஜூனனாய்….

சாஸ்திரம் அறிந்தாலும்
சமயத்தில் உதவாது
சகாதேவனாய்..
விவேகமில்லா வேகம்
வெற்றியை ஈட்டாது
அபிமன்யூ

நிதர்சனம் உணர்ந்தவன்
நெஞ்சம் கலங்கிடான்
கண்ணனாய்….

வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்….
வாழ்ந்திடலாம் பகுத்தறிந்து…

Padithathil Pidithathu

ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை...

ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை..

அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே .

கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது .

கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை.
அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ? என்றது .

காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ,ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது.

உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி என்று .

அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர் .. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள் .

என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் , என்றது .
மயில் சொன்னது. அன்பு காகமே , நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று .

ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது .
இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை ..
எனவே நான் யோசித்தது , நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே , என்றது .
இதுதான் நமது பிரச்சினையும் …

நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம் .

நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை .
அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்லை .

இது நம்மை ஒரு பெரும் துயருக்கு இழுத்து செல்கிறது .
ஒப்பிடுகளால் யாதொரு பயனும் இல்லை .

உன்னை முதலில் நேசிக்க கற்றுக்கொள் .

உன்னை உன்னை விட யாரும் நேசிக்க முடியாது

இறைவனின் படைப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றும் உயர்ந்தவை அவனிடத்தில்………

Padithathil Pidithathu

Humans: United by Species, Divided by Community.... Lesson from Pigeons....

In an ancient temple, a number of pigeons lived happily on roof top.

When the renovation of the temple began for the annual temple feast the pigeons relocated themselves to a Church nearby. 266 more words

Padithathil Pidithathu

Money doesn't make us rich

ஒரு பணக்கார தந்தை, அவரது மகனை வெளியூருக்கு அழைத்துச் சென்றார். ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று அவரது மகனுக்கு காண்பிக்க நினைத்தார். எனவே,  ஒரு ஏழை குடும்பத்துடன் அவர்கள் தங்கினர்.  2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு, இருவரும் வீடு திரும்பினர்.

Padithathil Pidithathu

Life is like a mirror; it reflect what you give

சீனாவில், லீ  என்ற பெண்ணுக்குத் திருமணமாகி ,தன் கணவன் வீட்டிற்குச்சென்று வாழத் துவங்குகிறாள்.அங்கு
லீக்கும் அவள் மாமியாருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போகவில்லை. எதற்கெடுத்தாலும்வாக்குவாதம், சண்டை சச்சரவு. நாள்தோறும் இருவர்க்கிடையே
வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.
லீயின் கணவனோ இருதலைக் கொள்ளி
எறும்பு போல திண்டாடினான்.
ஒரு நாள் லீ அவள் தகப்பனாரின்
நண்பரைப் பார்க்கச் சென்றாள்.அவர்
பச்சிலை,மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர்.
அவரிடம்  லீ, தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக்கூறி,மாமியாரைக் கொன்றுவிட வழி
கேட்டார். அந்த நாட்டு மருத்துவர்,மூலிகைப்
பொடி ஒன்றைக் கொடுத்து, இது மெல்லக் கொல்லும் நஞ்சு, இதைத் தினம்

உன் மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக
கலந்து கொடு, ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் என்று கூறினார். மேலும்,  மிகவும் கவனமாக செயல் படவேண்டும். முக்கியமாக உன்மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்துகொள் ,
அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது. எல்லாம் ஒருசில மாதங்கள் தானே  என்று கூறி அனுப்பி
வைத்தார். அதன்படி அன்புடன் மாமியாருக்கு பரிமாறினாள்.

மருமகளின் அன்பைக் கண்டு மாமியாரும்
அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
நாளடைவில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.
மாதங்கள் சென்றன. மாமியாரின் அன்பில்
திக்குமுக்காடிய  லீ மருத்துவரிடம் ஓடினாள் .
ஐயா, இந்த மருந்துக்கு மாற்று மருந்து கொடுங்கள்  என கெஞ்ச,ஏன் இப்படி ?என அவர் கேட்க,என் மாமியாரை நான் இழக்க விரும்பவில்லை என அழுதாள். அந்த மருத்தவர் சொன்னார், நான் நஞ்சு மருந்து எதுவும் கொடுக்கவில்லை; அது வெறும் சத்துப்பொடி தான்.

அப்போது நஞ்சு உன் மனதில் தான் இருந்தது. நீ அன்பாய்
நடந்து கொண்டதால் உன் மனதில் இருந்த நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இப்பொழுது முழுவதும் நீக்கப்பட்டு விட்டது.
சந்தோஷமாய் போய் வா என்று அனுப்பினார்.
நமது படிப்போ , பதவியோ , செல்வமோ , சொத்துக்களோ நமக்கு கடைசி வரை உதவாது ……
அன்பு காட்டுவோம் , அனைவரையும் நேசிப்போம் …

Padithathil Pidithathu