Tags » Tamil Christian Songs

என்னை வெறுமையாக்கினேன்

http://1drv.ms/1IhThFt

என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன் – 2

1. நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
நான் யார் நான் யார் வெறும் களிமண் தானே – 2

2. நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
நான் யார் நான் யார் வெறும் தூசி தானே

3. இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
உந்தன் கையில் நான் சிறு பிள்ளை

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

என் இருதயம் நல்ல விசேஷித்தினால்

http://1drv.ms/1jf24BF

என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது
ஆஹா ஓஹோ ஓ…ஓ…ஓ
நான் இராஜாவைக் குறித்து பாடின கவியை சொல்லுகிறேன்
என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி

1. எனக்காக யாவையுமே செய்து முடிப்பாரே
துவக்கத்தையும் முடிவையும் அவரே தருவாரே

2. இருளான இரவினிலே கண்ணீர் விட்டேனே
பகல் உதிக்க காலையிலே நடனம் செய்தேனே

3. வார்த்தையினால் சத்துருவை இயேசு ஜெயித்தாரே
அவர் வார்த்தையினால் சாத்தானை (இச்சைகளை)நானும் ஜெயிப்பேனே

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

உனக்கொரு நண்பன்

http://1drv.ms/1Qzc0UU

உனக்கொரு நண்பன் இல்லை என்று
ஏங்குகின்றாயோ இப்பூமியிலே

1. அன்னையைப்போல ஆதரிப்பார்
அல்லும் பகலும் காத்திடுவார்
நீ கிருபையில் வாழ வழிவகுத்தார்
சோராமல் என்றும் வாழ்ந்திடவே

2. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
தேவன் உன்னை கைவிடவே மாட்டார்
தம் செல்வம் போல ஆதரிப்பார்
கண்மணிப்போல உன்னை பாதுகாப்பார்

உனக்கொரு நண்பன் இயேசு உண்டு
அரவணைக்க ஒரு தகப்பன் உண்டு

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

சேராபீன் தூதர்கள்

http://1drv.ms/1Q9tV4l
சேராபீன் தூதர்கள் போற்றிடும் பரிசுத்தர்
மகிமையை உடையாக அணிந்துள்ள மகத்துவர்
பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே
ஸ்தோத்திரம் பாடியே புகழ்ந்திடுவேன்

1. தழும்புள்ள கரங்களினாலே
காயங்கள் ஆற்றிடுவீரே
கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்லவரே

2. சுத்தர்கள் தொழுதிடும் நாமம்
பரலோக தகப்பனின் நாமம்
இராஜ்ஜியம் வல்லமை கனமும்
உமக்கே சொந்தமாகும்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

தேவனே உம் சமூகம்

http://1drv.ms/1ZFEj7j

1. தேவனே உம் சமூகம்
ஏழை நான் தேடி வந்தேன் – 2
யாரிடம் நான் செல்லுவேன் – 2
எந்தனின் தஞ்சம் நீரே – 2
பரிசுத்தமானவரே
உம் பாதமே சரணடைந்தேன் – 2

2. யார் என்னை வெறுத்தாலும்
அழைத்தவர் நீரல்லவா
யார் என்னை பகைத்தாலும்
அணைப்பவர் நீரல்லவா
உன்னதமானவரே
உயர் நல் அடைக்கலமே

3. தேசத்தின் சமாதானம்
உம் கையில் தானுண்டு
என் ஜனம் மாளுதையா
இரங்கும் என் இயேசு நாதா
உன்னதமானவரே
உம்மைத்தான் நம்பியுள்ளேன்

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

சிலர் இரதங்களைக் குறித்து

http://1drv.ms/1jQk9H6

சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்
நாங்களோ நாங்களோ
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
இயேசு கிறிஸ்துவைக் குறித்தே
மேன்மை பாராட்டுவோம்

1. அவர்கள் முறிந்து விழுந்தார்கள்
நாங்களோ எழுந்து நிற்கின்றோம்
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம்

2. நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து
உமது நாமத்தில் கொடியேற்றுவோம்
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
ஜீவன் தந்தவரையே நாம் உயர்த்திடுவோம்

3. கர்த்தர் அபிஷேகம் செய்தவரை
வாழ்நாள் எல்லாம் நடத்துகின்றார்
ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்
அவர் வலதுகரம் நம்மை நடத்திடுமே

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

http://1drv.ms/1Qc6pkr
விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே

1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்

2. பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்

3. கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ

தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்