Tags » Tamil Novels

இதயத்தின் சு(மை)கம் நீ!! 6

ஹாய் டியர் ப்ரண்ட்ஸ்,

சுகமா அனைவரும்? அடுத்த அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன், 💝 இதயத்தின் சு(மை)கம் நீ!! 💝 அத்தியாயம் 6. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள். அத்தியாயம் 5 வரை படித்தீர்களா? எப்படி இருந்தது தோழமைகளே?

இதயத்தின் சு(மை)கம் நீ!!!

இதயத்தின் சு(மை)கம் நீ!! 5

ஹலோ ப்ரண்ட்ஸ்,

எப்படி இருக்கீங்க எல்லோரும்? 💝 இதயத்தின் சு(மை)கம் நீ!! 💝 அத்தியாயம் 5 பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள். மிக்க நன்றி!

https://docs.google.com/file/d/0B3P3A5xHNpzxODNHeGpQdGpPa2c/edit?usp=docslist_api

ஆர்த்தி ரவி

இதயத்தின் சு(மை)கம் நீ!!!

இதயத்தின் சு(மை)கம் நீ!! 4

ஹலோ ப்ரண்ட்ஸ்,

எப்படி இருக்கீங்க எல்லோரும்? 💝 இதயத்தின் சு(மை)கம் நீ!! 💝 அத்தியாயம் 4 பதிவு செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட்ஸ் திரியில் பதிவிடுங்கள். மூன்று அத்தியாயங்ளுக்கு தாங்கள் அளித்த வரவேற்பிற்கு மிக்க நன்றி!

இதயத்தின் சு(மை)கம் நீ!!!

அத்தியாயம் 4

அன்று சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வழக்கம் போல மாலை நேர ஆராதனைகள் வழிபாடுகள் ஆர்ப்பாட்டம் இன்றி நடந்து கொண்டிருக்க சன்னிதானத்திற்கு சற்று அப்பால் இருக்கும் இருபத்திநான்கு கால் மண்டபத்தில் சுறுசுறுப்புடனும் விறுவிறுப்புடனும் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள் காவ்யா.கண்கள் மட்டும் அவன் வரும் திசை பார்த்தே இருந்தது.

என்னதான் ஆர்வம் இருப்பினும் பொள்ளாச்சிக்கும் கோயம்பத்தூருக்கும் உள்ள தூரம் குறையப் போவதும் இல்லை அரை நொடியில் அவனும் இங்கு வரப்போவதும் இல்லை.அவனை சந்தித்திடும் ஆர்வ மிகுதியில் ஒரு மணி நேரம் முன்பே வந்துவிட்டாள் பாவம்.

இருக்காதா பின்னே ! தன் வாழ்நாளில் முதல் முறையாக ஒரு ஆணை அதுவும் அழகான ஆணை ரகசியமாக சந்திக்க காத்திருக்கிறாள். நட்பு கொள்வதில் ஆண் பெண் என பாகுபாடு பார்ப்பவள் அல்ல காவ்யா. அவளது நட்பு வட்டாரம் மிகப்பெரிது ஆனாலும் நட்பின் எல்லை என்ன என்பதை நன்கு அறிந்திருப்பவள். நட்பில் இருக்கும் நம்பிக்கையும் நாட்டமும் ஏனோ அவளுக்கு காதலில் இல்லாமல் போனது.

“நான்…லவ் பண்றேனா ?? இது எப்படி லவ் ஆகும்…? பெரியவங்க பார்த்து நிச்சயம் செஞ்ச ஒரு பையன் அவ்வளவு தான்..இது லவ் எல்லாம் இல்லை..இந்த நசீமா தான் கண்டத ஒளறுறா…ஒரு வேளை அப்பா கிட்ட சொல்லிட்டு வந்து இருக்கலாமோ…..? ஒரு வேளை அப்பா போக கூடாதுன்னு சொல்லி இருந்தா?? எனக்கும் அவன இன்னொரு முறை பார்க்கணும் போலத்தான் இருக்கு…அப்ப இது லவ் தானா ??? அய்யோ முருகா….ஒண்ணுமே புரியலையே…!!!  

சுனிதாவிடம் தன் குழப்பங்கள் அனைத்தையும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்து விட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தாள்.

பின்னர் அங்குள்ள சிற்பங்களை பார்த்துக்கொண்டே நகர மறுக்கும் நிமிடங்களை கடத்தினாள். குறிப்பாக , திருமணகோலத்தில் மீனாட்சி தேவியின் கரங்களை சுந்தரேஸ்வர பெருமான் பற்றிக்கொண்டு நிற்கும் மீனாட்சி கல்யான வைபோக காட்சி இத்தனை வருடங்களில் இன்று தான் அவளது புத்திக்குள் ஓர் புது பரவசத்தை பரவிடச் செய்தது. ஆயிரம் முறை இங்கு வந்திருக்கிறாள் அன்றெல்லாம் துடித்திடாத தன் கண்கள் இன்று துடிப்பது அவளுக்கே அதிசயமாகத்தான் இருந்தது.எண்ணங்கள் அவள் உத்தரவின்றி இறைக்கை கட்டி பறக்கின்றது , மாதவனை அடையும் வழி தேடியோ அல்லது அவன் கூர் விழி தேடியோ.எண்ணங்களில் தொடங்கி கற்பனைகளில் கடந்து கனவாக கசிந்து கொண்டிருந்தவன் , நிஜமாகவே வந்துவிட்டான் அதோ சற்று தொலைவில். அவளை நெருங்கியும் விடுவான் இன்னும் ஒற்றை நொடியில்.

இதோ ஒலித்துவிட்டது அவனது குழைவான குரலில் ஓர் குட்டிக் கவிதை.

“ காவ்யா !!! ”

தன் சக்திக்கு மீறி துடிக்கிறது அவள் இதயம் , நானும் உன்னைப்போல் பரவசமாய் தான் இருக்கிறேன் என்பதை உறுதிபடுத்த.

“ ஹாய் ! மாதவன்…..”

அரை நொடி பொழுதையும் வீண் செய்யேன் என விசுவாசமாய் சிரித்தது அவள் உதடுகள். வெட்கத்தை எங்கோ வாடகைக்கு வாங்கி வந்து அவள் முகத்தில் விதைத்தது கன்னங்கள்..

 “ஹாய் !! எப்போ வந்தீங்க….ரொம்ப நேரம் ஆச்சா ?? ”

 “ஹ்ம்ம்மம்ம்ம்ம் யா….ரொம்ப முன்னாடியே வந்துட்டேன்…

 “நான் தான் ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னேனே..? “

“சொன்னீங்க….!! எனக்கும் கோயிலுக்கு வரணும்னு தோனுச்சு…அதான் சீக்கிரமா வந்துட்டேன்… ”

“ஓ… அடிகடி இந்த கோயிலுக்கு வருவிங்களா ?? “

அவனது பேச்சுத்தொனியில் ஏதோ ஒரு வகையான மாற்றம் இருப்பதாக உணர்கிறாள்.

“சொல்லுங்க காவ்யா…! என்ன ஆச்சு ?? ”

“சொல்லுங்க காவ்யாவா…??? இதென்ன புதுசா…வாங்க போங்கன்னு சொல்றாரு…?? ஒரு மணி நேரம் முன்னாடி பேசின தொனி இப்ப பேசும்போது இல்லையே…..” அவள் உள்ளம் குழம்பிப்போகிறது.

“ஹலோ….!! நான் பேசுறது கேட்குதா???  என்ன பொண்ணு நீங்க அடிக்கடி இப்படி ஷாக் ஆயிடுறீங்க ??? ”

அவன் மரியாதையாக அழைத்திடும் ஒவ்வொரு வார்த்தையும் அவள் தலை மேல் யாரோ கனமான கற்களை அடுக்குவது போல் உணர்ந்தாள் .

“ஹ்ம்ம்ம் அடிகடி வருவேன்…இது என்னோட இஷ்டமான கோயில்…ரொம்ப பழமையான கோயில் கூட…இங்க தான் என் அம்மா அப்பாவுக்கு கல்யாணம் நடந்தது….நம்ம்ம்……ம கல்யாணம் கூட இங்க தான் இருக்கும்……அதான் உங்களை இங்கயே வரச்சொன்னேன்…”

அவள் எதிர்ப்பார்க்கும் பதில் அங்கிருந்து வந்ததாக தெரியவில்லை. மௌனமாக நகர்ந்தது அந்த நிமிடங்கள். ஆனால் காவ்யாவிற்கு ஏதோ ஒன்று மனதை நெருடிக்கொண்டிருந்தது. அது இனிதாக இல்லை சுமையாக இருந்தது. அவள் உன்னிடம் எதிர்ப்பார்த்தது மௌனம் அல்ல என்பதை அவனுக்கு காட்டிக்கொடுக்க முயலுகின்றது அவளின் சோர்வான கண்கள் . வேண்டாம் அவள் ஏமாந்து போனாள் என்பதை காட்டிக்கொடுக்காதே என பொய்யாக சிரித்து மழுப்புகின்றது அவள் இதழ்கள்.

 “ஹ்ம்ம்ம் சொல்லுங்க….!!! “

“என்னது ???? ”

“நேர்ல என்ன பார்த்து ஏதோ சொல்லனும்னு தானே இவ்ளோ தூரம் வந்து இருகிங்க…..”

“ஹ்ம்ம்ம்….சொல்றேன்….. ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ….”

சோர்ந்து போன கண்களில் இப்போது ஓர் சுறுசுறுப்பு தொற்றிக்கொள்ள பெரும் தவிப்புடன் அவனைப் பார்த்தாள். அவன் தன் காதலைத்தான் சொல்ல போகிறான் என்பது ஒரு மணி நேரம் முன்னமே தெரிந்து போனது ஆனால் அதை எப்படிச் சொல்லப் போகிறான் என்ற தவிப்பில் தத்தளித்து கொண்டிருகின்றது அவளின் இதயம் இப்பொழுது. கண்கள் கவனத்தை சிதறவிடாமல் அவன் இதழ்களில் கருத்தாய் இருக்கிறது. அவன் சொல்லப்போகும் எந்த வார்த்தையையும் மறக்காமல் கேட்டுகொள்கிறேன் என்று காரியத்தில் கண்ணாய் இருக்கிறது செவிகளும். ஏதோ சொல்ல குவிகிறது அவன் இதழ்கள்….

“என்ன சொல்ல போறான்….”

“காவ்யா……..இது நடக்காது காவ்யா…”

“வாட் !!!???? எது…எது மாதவன் ?? ”

“நீ கொஞ்ச நேரம் முன்னாடி சொன்னது….நம்ம கல்யாணம் கூட இங்க தான் நடக்கும் அப்படின்னு….அது நடக்காது….”

“என்ன சொல்றிங்க….?? எனக்குப் புரியல….இங்க நடக்காதுன்னா ??? வேற எங்க ?? உங்க ஊர்லயா ?? ஹ்ம்ம்ம்ம் புரியிது புரியுது…  ”

“என்னங்க புரியிது ?? ”

“ உங்க ஊர்ல நீங்க கட்டின கோயில் ஒன்னு இருக்கணுமே..??? அங்க தான் உங்க குடும்பத்துல எல்லாருக்கும் கல்யாணம் நடக்கும்..இது தான் உங்க சம்பரதாயம்…அவ்ளோ தானே…??? எப்படி கண்டுபுடிச்சேன் பார்தீங்களா ??? ”

“அய்யோ…முக்கியமான நேரத்துல இவ்வளவு பேசுறாளே…!?!?”

“அது இல்லை காவ்யா…இந்த கல்யாணம் நடக்காது….யு வில் கெட் அ பெட்டெர் பெர்சன்….”

“என்ன மாதவன் விளையாடுரிங்களா ???

“இல்லை காவ்யா….விளையாட்டு இல்லை….நிஜம்”

“ஓ காட்… இதை சொல்லவா இவ்வளவு தூரம் வந்திங்க ?? இதை போன்ல சொல்லி இருக்கலாமே….இல்லை என் அப்பாகிட்ட சொல்லி இருக்கலாம்…ஏன் என்கிட்ட ??? அப்போ கொஞ்ச நேரம் முன்னாடி போன்ல என்ன புடிச்சி இருக்குன்னு சொன்னிங்க ??? ”

“எஸ் சொன்னேன்…அதை பெருசா எடுத்துக்காதீங்க……இப்ப சொல்றது தான் உண்மை..”

“என்ன பேசறீங்க…….?????? ”

“காவ்யா ஏன் இவ்ளோ சத்தமா பேசற ?? காம் டவுன்….இது கோயில்….”

“ஒரு மணி நேரம் முன்னாடி புடிச்சிது ஏன் இப்ப புடிக்கலையா ?? என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது ?? ”

“காவ்யா ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்ணற ?? நமக்கு இன்னும் கல்யாணம் முடிவு செய்யலையே…உன்னை என்னவோ லவ் பண்ணி ஏமாத்திட்ட மாதிரி பேசாத ப்ளீஸ்….ஏன் வீட்ல ஏதோ அம்மா சொன்னாங்கன்னு தான் உன்னை பொண்ணு பார்க்க வந்தேன்…இப்ப என் வீட்ல யாருக்கும் இந்த சம்பந்தம் வேணாம்னு….இதை நான் உன்கிட்ட போன்ல சொல்லி இருக்க முடியும்….பட் உன்ன அது மனசளவுல பாதிக்கும். தவிர நானும் அப்படி பேசி இருக்கக்கூடாது. என் மேல தப்பு இருக்கு அதான் நேர்ல சொல்றேன்…….வெரி சாரி..ஐ ஹோப் யு வில்…”

“ ப்ளீஸ் ஸ்டாப்….வேற எதுவும் சொல்ல வேண்டாம்…உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா இல்லையா ??? ”

“தெரியல…”

“தெரியல….????? தெரியலையா ???? ”

அவள் கண்கள் இருண்டது.

“மன்னிச்சிடுங்க காவ்யா…உங்க வீடல் என் குடும்பத்தால இப்படி ஒரு குழப்பம் வந்ததுக்கு….ஆனா உங்களுக்கு இன்னும் நெறைய டைம் இருக்கு…படிச்சி முடிங்க யு வில் கெட் அ குட் லைப் பாட்னர்…..ஒரு நல்ல வாழ்க்கை அமையும்..”

“போதும் நிறுத்துங்க…உங்க கருணை எனக்கு தேவை இல்லை….நீங்க சொல்ல வந்தத சொல்லியாச்சா ????? வேற எதுவும் சொல்லனுமா ?? சீக்கிரம் சொல்லிட்டு எடத்த காலி பண்ணுங்க….மறந்துபோய் ஒரு மணி நேரம் இங்கேயே இருந்துட போறீங்க…அப்புறம் உங்க மனுசு மாறி என்ன புடிச்சி இருக்குன்னு சொன்னாலும் சொல்லிடுவீங்க…..பாவம் உங்களுக்குத் தான் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை முடிவ மாத்துற வியாதி இருக்கே…!!!! “

அவளது உள்ளம் கொதித்து சூடான வார்த்தைகளை கொப்பளித்தது.

அவளின் நக்கல் வார்த்தைகள் அவன் முகத்தை முள்கொண்டு கிழித்தது போல் இருந்தது. லேசாக அவன் காது மடல் சிவக்கிறது.

என்ன பொண்ணு இது ??? இப்படி பேசுது ?? எவ்வளவு திமுரு ?? பாவம் மன்னிப்பு கேட்டுட்டு போகலாம்னு வந்தா என்னையே டென்ஷன் பண்ணுது….டென்ஷன் ஆகாதடா மாதவா…!!!! டென்ஷன் ஆகாதா…!!! நல்ல வேளை இவள கட்டிக்க போறது இல்லை…….சரியான ராட்சஷி. ” என்றது அவன் புத்தி.

உன் செயலை நியாய படுத்திக்கொள்ள வேண்டாம் ஆனாலும் அவளிடம் மன்னிப்புக் கேட்பது தான் நியாயம் “ என்றது அவன் இதயம் .

“ஐ அம் சாரி….”

“ ????….ஓ அப்படியா ??? சரி…..வேறென்ன ??? ”

கோபத்தின் விளிம்பில் தத்தளிக்கிறாள் அவள் என்பதை உணர்த்தியது அவளின் சூடான அந்த பதில்.

இனியும் பேசி பயனில்லை என்ன செய்ய ? சுட்டெரிக்கும் நிலவாக அவள். பாவம் அச்சூட்டில் வெந்து போகும் சுண்ணாம்பாக அவன். ஆளுக்கொரு திசையாக சிதறி போகிறது இரு உருவங்கள். செயலற்று போனது அவர்களின் சிந்தனைகள்.

இருவரின் பிரிவினையும் உறுதி செய்து ஓங்கி ஒலிக்கிறது கோயில் மணி , அதே சமயம் சிணுங்கியது அவளது செல்போன்.

“ஹேய் காவி….இது கண்டிப்பா லவ் தான் டி….என்ன சொல்றாரு உன் லண்டன் மாப்பிள்ளை ? சீக்கிரமே டும் டும் டும் தான்…..” – சுனிதா

“ லவ் ஆம் மண்ணாங்கட்டி…”

Novels