Tags » Tamil

தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் சுமை எம்மீது சுமத்தப்பட்டுள்ளது!!!

தாங்கிக் கொள்ள முடியாத அளவு கடன் சுமையில் நாட்டை இழுத்துப்போடும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் நிலை தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இலங்கை தற்போது 09 இலட்சம் கோடி ரூபா கடன் சுமையை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

கடந்த ஆட்சியாளர்கள் தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றி இருந்தால் நாடு இவ்வாறான ஒரு நிலமைக்கு முகங்கொடுத்திருக்காது என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

கேகாலை மாவட்டத்தில் 50 பிரிவெனாக்கள் மற்றும் தேவாலயங்களுக்கு கனிணி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

Tamil News

If lilies could see

If lilies could see, they’d hang their heads and droop in shame –
“No match are we,” they’d sigh, “to the eyes of this bejewelled dame!”

(காணின், குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்-
‘மாணிழை கண் ஒவ்வேம்!’ என்று.
குறள்: 1114)

Tamil

சஜின் வாஸின் கையெழுத்து மாதிரியை வழங்க நீதிமன்றம் உத்தரவு!!

பணமோசடி சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் கையெழுத்து மாதிரியைப் பெற்று விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது

சட்டத்திற்கு மாற்றமான முறையில் 30 கோடி ரூபாவிற்கும் அதிக பணம் சம்பாதித்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதன்படி சஜின் வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமான நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மற்றும் கணக்காளர்களிடம் வாக்குமூலம் பெற வேண்டிய தேவை இருப்பதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அத்துடன் சந்தேகநபரின் கையெழுத்து தொடர்பிலும் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கையெழுத்து மாதிரியை வழங்குமாறு சஜின் வாஸ் குணவர்தனவிற்கு உத்தரவுவிடுத்துஉள்ளது.

Tamil News

தங்களை கொடுமைப்படுத்தியதாக இந்திய மீனவர்கள் குற்றச்சாட்டு!!

இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேர் நேற்று வியாழக்கிழமை காரைக்கால் துறைமுகத்துக்கு சென்றடைந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய ஊடக செய்திகள் கூறியுள்ளன.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர் என மொத்தம் 77 மீனவர்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட மீனவர்கள், அமயா மற்றும் ராணிஅபக்கா என்ற 2 ரோந்துக் கப்பல்களில் காரைக்கால் மார்க் துறைமுகத்துக்கு நேற்று மாலை 5 மணிக்கு சென்றடைந்ததாக இந்திய ஊடக செய்திகள் கூறியுள்ளன.

சட்டத்திற்கு மாறாக மீன்பிடியில் ஈடுபட்டதனால் இவர்கள் கைது செய்யப்பட்டு நீதமன்ற உத்தரவுப்படி இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், தங்களை இலங்கை சிறைகளில் சரியான உணவு வழங்காமல் கொடுமைப்படுத்தியதாக விடுதலை பெற்ற மீனவர்கள், குற்றம் சுமத்தியுள்ளனர்.

Tamil News

முன்னாள் பொலிஸ் மா அதிபரிடம் விசாரணை!!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை சம்பவம் தொடர்பிலேயே அவரிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்படுகின்னது

Tamil News

சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது!!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா பகுதியில் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்று இரவு ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினரால் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன விசேட பொலிஸ் பிரிவினர்கள் மேற்கொண்டுள்ளனர்.

Tamil News

இன்று முதல் பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை!!

அரச மற்றும் அரசுடன் இணைந்து செயற்படும் தனியார் பாடசாலைகளின் இந்த ஆண்டுக்காக இரண்டாம் தவணைக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

அதன்படி மீண்டும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதி அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணைக் காலம் ஆரம்பமாகவுள்ளன.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 02ம் திகதி முதல் 27ம் திகதி வரையில் இடம்பெற உள்ளது.

தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இடம்பெற இருப்பதால் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் தினம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Tamil News